back to top
13.3 C
London
Tuesday, October 6, 2026
No menu items!
Homeஅரசியல்“இந்த நாய்களோட சேர்றதை...”தவெகவை தாக்கிய சத்யபாமா? வைரலான வீடியோ! - Kumudam

“இந்த நாய்களோட சேர்றதை…”தவெகவை தாக்கிய சத்யபாமா? வைரலான வீடியோ! – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img


தமிழ்நாட்டில் தாராபுரம் (தனி), மதுராந்தகம் (தனி) ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளுக்கும் இன்று இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் இந்த இரு தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றிருந்த நிலையில், அவர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். இதையடுத்து இரு தொகுதிகளும் காலியானதாக அறிவிக்கப்பட்டு இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது.

தாராபுரம் தொகுதியில் தவெக சார்பில் முன்னாள் அதிமுக எம்எல்ஏ சத்தியபாமா போட்டியிடுகிறார். திமுக சார்பில் சுகன்யா, அதிமுக சார்பில் பானுமதி, சிபிஐ சார்பில் லட்சுமணன், நாம் தமிழர் கட்சி சார்பில் கார்த்திகா உள்ளிட்ட 22 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இந்நிலையில், நேற்று இரவு சத்யபாமா தவெகவை விமர்சிப்பது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. அந்த வீடியோவில், “போன தடவ ரூ.31 கோடி செலவு பண்ணேன். ஒரு பைசா கொடுக்கல. அந்த மாதிரி இருந்துட்டு இந்த நாய்களோட சேர்றதை சத்தியமாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அமைச்சர்களுக்கு ரூ. 14 லட்சம் வரை செலவழித்தேன். கூட்டணி கட்சிகளுக்கு விமான டிக்கெட் கேட்பாங்க. எதோ எங்களுக்கு உள்ளானதை பண்ணிட்டு இருக்கோம்” என்று சத்யபாமா பேசியதாகக் கூறப்படுகிறது.

மேலும், தவெகவுடன் இணைந்திருப்பது குறித்து அதிருப்தி தெரிவிக்கும் வகையிலும் அவர் பேசியதாக அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தாராபுரம் தேர்தல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதனிடையே இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியதும், தாராபுரம் மதுக்காம்பாளையம் வாக்குச்சாவடியில் தவெக வேட்பாளர் சத்தியபாமா தனது வாக்கை பதிவு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், சமூக வலைதளங்களில் பரவி வரும் சர்ச்சை வீடியோ குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த சத்தியபாமா, “அது சித்தரிக்கப்பட்ட வீடியோ. எனக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதால் இதுபோன்ற வீடியோவை சித்தரித்து பரப்புகின்றனர்” எனக் கூறினார்.

மேலும், அந்த வீடியோ உண்மையானது இல்லை என்றும், மக்கள் தெளிவாக இருப்பதாகவும் தெரிவித்த அவர், ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என நம்பிக்கை தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்க உள்ளதாகவும் சத்தியபாமா தெரிவித்தார். தாராபுரம் தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நேரத்தில் சத்தியபாமா தொடர்பான இந்த வீடியோ விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here