back to top
20.5 C
London
Tuesday, October 6, 2026
No menu items!
Homeஅரசியல்ராகுலா? மோடியா?... யாருக்கு முன்னுரிமை? விஜய் எடுக்கப்போகும் முடிவு என்ன? - Kumudam

ராகுலா? மோடியா?… யாருக்கு முன்னுரிமை? விஜய் எடுக்கப்போகும் முடிவு என்ன? – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img


தமிழ்நாட்டில் புதிதாக கட்சித் தொடங்கி ஆட்சியை பிடித்துக் கொண்டும், முதலமைச்சர் நாற்காலியில் கம்பீரமாக அமர்ந்துக் கொண்டு, நாட்டை ஆண்டு கொண்டிருக்கும் விசில் கட்சி கூட்டணியில் காங்கிரஸ் கட்சியும் இணைந்துள்ளது.

பல காலமாக சூரியனின் வெளிச்சத்தில் உலவிக் கொண்டிருந்த இந்த காங்கிரஸ் கட்சி சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு ஆட்சி மாறிய உடனே பனையூருக்கு படையெடுத்து முதல் ஆளாக ஆளுங்தரப்புக்கு தோள் கொடுக்க சென்றது. இது சூரியனின் கட்சியில் உள்ளவர்களுக்கு ஒரு பெரிய துரோகமாக இருந்தாலும், ஆளுந்தரப்புக்கு இது சாதகமாகவே அமைந்தது.

இப்படி சத்யமூர்த்திபவன் வட்டாரங்களும், பனையூர் வட்டாரங்கள் அண்ணன் தம்பி போல் கொஞ்சும் குலவிய நேரத்தில் தான் விசில் கட்சியில் உள்ளவர்கள் சிலர் எப்படியோ முட்டி மோதி முதலமைச்சர் நாற்காலியை பிடித்து விட்டார் முதலமைச்சர்.

அடுத்தது என்ன? பிரதமர் நாற்காலி தான். அதை நோக்கி முதலமைச்சரை தள்ள நினைத்து, ஒரு கூட்டம் அடுத்தது பிரதமர் பதவி என்று தவெகவில் உள்ள சில ஆடுகள் எங்கு பார்த்தாலும் கத்திக் கொண்டு இருந்தது.

சார் இதுக்கு ஒரு எண்டே இல்லையா சார்… என்பதை  போல இந்த பேச்சுக்கள் தொடர்ந்து கொண்டு தான் இருந்தது. இதனால் விசில் கூட்டணியில் சற்று உட்கட்சி பூசல் தொடங்க ஆரம்பித்தது.

ஒரு பக்கம் சத்யமூர்த்திபவனில் உள்ளவர்கள் எங்கள் தலைவர் தான் பிரதமர் வேட்பாளர் என்றும், பனையூரில் உள்ளவர்கள் நோ சார் எங்கள் தலைவர் தான் சார் அடுத்த பிரதமர் என்று ஊரெல்லாம் கூவிக்கொண்டே ஒரு கூட்டம் சுற்றி வந்தது.

இந்த டாபிக்கின் சூடு தற்போது தணிந்துள்ள நிலையில், அடுத்த ஆட்டம் கோட்டை வட்டாரத்தை நோக்கி பாய்ந்துள்ளது. அப்படி என்னது அடுத்த ஆட்டம் சார் அதனை கொஞ்சம் பார்போமா?

தமிழ்நாட்டில் வருகிற 6 ஆம் இடைத்தேர்தல் நடக்க இருக்கும் சமயத்தில் அதற்கான வேலைப்பாடுகளில் ஆளுந்தரப்பு தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு நேற்றுடன் ஒய்ந்துள்ளது. நாளைக்கு தான் ஆட்டமே இருக்கும் சமயத்தில், இதனிடையே  காங்கிரஸ் தலைவர் ராகுல், ‘மாணவர்கள் குரல்’ என்ற தலைப்பில் ஒவ்வொரு மாநிலமாக சென்று மாணவர்களிடம் உரையாடி வருகிறார்.

அதன்படி தமிழ்நாட்டில்  இடைத்தேர்தல் முடிவுகள் வெளியான மறுதினம் (அக்.,10), சென்னை, தீவுத்திடலில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அன்றைய தினம் முதலமைச்சர் விஜய்யையும் ராகுலையும் சந்திக்கவைத்து கூட்டணி சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைக்கிறது சத்யமூர்த்தி பவன்.

ஆனால், அக்டோபர் 11ம் தேதி பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைக்க பிரதமர் மோடி தமிழ்நாடு வருகிறார். 

அடுத்தடுத்த நாட்களில் இருபெரும் தேசிய தலைவர்கள் தமிழ்நாடு வருவதால், எந்த நிகழ்ச்சியில் பங்கெடுப்பது, இரண்டு நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்தால் கூட்டணிக்குள் சலசலப்பு வருமா என்றும் கன்ஃபியூஷனில் இருக்கிறது பனையூர் முகாம்”

இந்த இருபெரும் தலைவர்களில் யாரை முதலில் முதலமைச்சர் விஜய் சந்திப்பார்? இல்லை சந்திக்காமல் இருப்பாரா? ஒரு வேளை சந்தித்து தமிழ்நாடு அரசியலில் ஏதாவது மாற்றங்கள் நிகழ வாய்ப்புகள் இருக்குமா என்பதை பொறுத்திருந்து பார்போம்.



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here