back to top
17.7 C
London
Monday, October 5, 2026
No menu items!
Homeசினிமாரஜினி ரசிகர்களுக்கு தரமான ட்ரீட்,.. வெளியானது 'ஜெயிலர் 2' பிரம்மாண்ட டிரெய்லர்! - Kumudam

ரஜினி ரசிகர்களுக்கு தரமான ட்ரீட்,.. வெளியானது ‘ஜெயிலர் 2’ பிரம்மாண்ட டிரெய்லர்! – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img


இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் டிரெய்லர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகி, இணையத்தில் வைரலாகி வருகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இத்திரைப்படம், வரும் அக்டோபர் 15-ம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.

வெளியாகியுள்ள டிரெய்லரில், “யார்ரா அவன்?” என்ற கேள்வியுடன் தொடங்கும் காட்சியில் ‘டைகர் முத்துவேல் பாண்டியன்’ ஆக ரஜினிகாந்த் மாஸாக அறிமுகமாகிறார். ஒருபுறம் அமைதியான மனிதராக நகைச்சுவை காட்சிகளில் தோன்றும் அவர், மறுபுறம் அதிரடி ஆக்‌ஷன் அவதாரத்தில் மிரட்டுகிறார்.

வில்லன் கதாபாத்திரத்தில் சுராஜ் வெஞ்சரமூடு, எஸ்.ஜே.சூர்யாவும், சிகரெட் பிடித்தபடி மிரட்டல் லுக்கில் வித்யா பாலனும் தோன்றுகின்றனர். மோகன்லால், சிவராஜ்குமார் ஆகியோரின் ஆக்‌ஷன் காட்சிகளுடன், ரஜினி மிகப்பெரிய கட்டிடத்தை வெடிக்க வைக்கும் காட்சிகளும், இறுதியில் யோகி பாபுவுடனான நகைச்சுவைக் காட்சியும் டிரெய்லரின் முக்கிய அம்சங்களாக அமைந்துள்ளன.

முதல் பாகத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, சிவராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷெராஃப் ஆகியோருடன், இரண்டாம் பாகத்தில் எஸ்.ஜே.சூர்யா, வித்யா பாலன், விஜய் சேதுபதி, சுராஜ் வெஞ்சரமூடு எனப் பல மாநில முன்னணி நட்சத்திரங்கள் புதிதாக இணைந்துள்ளனர்.

அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தில் ‘அல்ல போலேலோ’, ‘ஒன் சன் ஒன் மூன்’ உள்ளிட்ட பாடல்கள் ஏற்கனவே வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளன. மேலும், ரஜினிகாந்தின் திரைப்பயணத்திலேயே முதன்முறையாக இத்திரைப்படம் ஐமேக்ஸ் (IMAX) வடிவத்தில் வெளியாக இருப்பது ரசிகர்களுக்குக் கூடுதல் விருந்தாக அமைந்துள்ளது.



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here