back to top
16.4 C
London
Wednesday, September 23, 2026
No menu items!
Homeதமிழ்நாடுஒரே நாளில் 40 இடங்கள் ! இத்தனை கோடி லஞ்சமா ? DVAC மெகா ரெய்டு...

ஒரே நாளில் 40 இடங்கள் ! இத்தனை கோடி லஞ்சமா ? DVAC மெகா ரெய்டு ! – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img


தமிழ்நாடு முழுவதும் பல்வேறு அரசு அலுவலகங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை (DVAC) அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில் ரூ.1.73 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான கணக்கில் வராத பணம் மற்றும் சந்தேகத்திற்கிடமான டிஜிட்டல் பரிவர்த்தனைகள் கண்டறியப்பட்டுள்ளன.

பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரசு சேவைகளில் சில அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக வந்த புகார்களின் அடிப்படையில், மாநிலம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, வட்டாட்சியர் அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்களில் இந்த ஒருங்கிணைந்த சோதனை நடத்தப்பட்டது.

நேற்று (22.09.2026) நடைபெற்ற இந்த சோதனையில், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை அதிகாரிகள், மாவட்ட ஆய்வுப் பிரிவு அதிகாரிகளுடன் இணைந்து பல்வேறு இடங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

ரொக்கம் மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனை கண்டுபிடிப்பு :

லஞ்ச ஒழிப்புத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற சோதனைகளில் மொத்தம் ரூ.1,73,48,666 மதிப்பிலான பணம் மற்றும் பரிவர்த்தனைகள் கண்டறியப்பட்டுள்ளன.

இதில், கணக்கில் வராத ரொக்கப் பணம் – ரூ.13,78,207 மற்றும் சந்தேகத்திற்கிடமான G-Pay பரிவர்த்தனைகள் – ரூ.1,59,70,459 என மொத்தமாக ரூ.1.73 கோடிக்கும் அதிகமான தொகை கண்டறியப்பட்டுள்ளது.

பல அரசு அலுவலகங்களில் இருந்த பணம் மற்றும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் தொடர்பான ஆவணங்கள் மற்றும் விவரங்களை அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நடைபெற்ற சோதனை :

சென்னை மாநகராட்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பல்வேறு அரசு அலுவலகங்களில் நடைபெற்ற சோதனையில் கணிசமான அளவில் பணம் மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் கண்டறியப்பட்டன.

சென்னை மாநகராட்சி மண்டலம்-14, பெருங்குடி அலுவலகத்தில் நடைபெற்ற சோதனையில் ரூ.4,260 ரொக்கப் பணமும், ரூ.43,42,563 மதிப்பிலான G-Pay பரிவர்த்தனைகளும் கண்டறியப்பட்டன.

சென்னை மாநகராட்சி மண்டலம்-4, தொண்டையார்பேட்டை அலுவலகத்தில் ரூ.46,000 ரொக்கம் சிக்கியது.

பல்லாவரம் நகராட்சி அலுவலகத்தில் ரூ.4,820 ரொக்கமும், மாதவரம் மாநகராட்சி மண்டலம்-3 அலுவலகத்தில் ரூ.2,000 ரொக்கம் மற்றும் ரூ.1,85,550 மதிப்பிலான டிஜிட்டல் பரிவர்த்தனைகளும் கண்டறியப்பட்டன.

மேலும், ஆலந்தூரில் உள்ள சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றல் வாரிய அலுவலகத்தில் ரூ.27,000 ரொக்கம் மற்றும் ரூ.1,95,000 மதிப்பிலான G-Pay பரிவர்த்தனைகள் கண்டறியப்பட்டன.

வட மாவட்டங்களில் சிக்கிய தொகை :

வட தமிழக மாவட்டங்களில் உள்ள மாநகராட்சி, நகராட்சி மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களிலும் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

திருவள்ளூர் நகராட்சி அலுவலகத்தில் ரூ.42,180 ரொக்கம் மற்றும் ரூ.8,52,500 மதிப்பிலான G-Pay பரிவர்த்தனைகள் கண்டறியப்பட்டன.

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் நகராட்சி அலுவலகத்தில் ரூ.80,650 மதிப்பிலான டிஜிட்டல் பரிவர்த்தனை கண்டறியப்பட்டது.

வேலூர் காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் ரூ.2,300 ரொக்கம் மற்றும் ரூ.11,040 G-Pay பரிவர்த்தனைகள் சிக்கின.

ராணிப்பேட்டை அரக்கோணம் நகராட்சி அலுவலகத்தில் ரூ.7,64,500 மதிப்பிலான டிஜிட்டல் பரிவர்த்தனைகளும், செங்கல்பட்டு மறைமலைநகர் நகராட்சி அலுவலகத்தில் ரூ.14,56,356 மதிப்பிலான G-Pay பரிவர்த்தனைகளும் கண்டறியப்பட்டன.

மத்திய மாவட்ட அரசு அலுவலகங்களில் சோதனை :

மத்திய தமிழ்நாடு மாவட்டங்களிலும் பல்வேறு அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் ரூ.4,600 ரொக்கம் மற்றும் ரூ.6,84,221 மதிப்பிலான டிஜிட்டல் பரிவர்த்தனைகள் கண்டறியப்பட்டன.

கரூர் மாவட்டம் குளித்தலை நகராட்சி அலுவலகத்தில் ரூ.51,000 ரொக்கம் மற்றும் ரூ.4,02,000 மதிப்பிலான G-Pay பரிவர்த்தனைகள் சிக்கின.

திருச்சி மாநகராட்சி வார்டு அலுவலகத்தில் ரூ.15,100 ரொக்கமும், அரியலூர் ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகத்தில் ரூ.8,000 ரொக்கமும் கண்டறியப்பட்டது.

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி பேரூராட்சி அலுவலகத்தில் ரூ.8,200 ரொக்கம் மற்றும் ரூ.19,16,280 மதிப்பிலான டிஜிட்டல் பரிவர்த்தனைகள் கண்டறியப்பட்டன.

மேற்கு மாவட்டங்களில் கண்டறியப்பட்ட பணம் :

மேற்கு மாவட்டங்களான கோவை, ஈரோடு, தருமபுரி, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளிலும் சோதனை நடத்தப்பட்டது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகத்தில் ரூ.1,38,900 ரொக்கம் மற்றும் ரூ.4,68,999 மதிப்பிலான G-Pay பரிவர்த்தனைகள் கண்டறியப்பட்டன.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நகராட்சி அலுவலகத்தில் ரூ.1,54,000 ரொக்கம் சிக்கியது.

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் ரூ.5,750 ரொக்கம் மற்றும் ரூ.3,13,000 மதிப்பிலான டிஜிட்டல் பரிவர்த்தனைகள் கண்டறியப்பட்டன.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி நகராட்சி அலுவலகத்தில் ரூ.5,53,767 ரொக்கம் மற்றும் ரூ.1,00,000 மதிப்பிலான G-Pay பரிவர்த்தனைகள் சிக்கின.

தென் மாவட்டங்களிலும் தொடர்ந்த சோதனை :

தென் தமிழக மாவட்டங்களிலும் பல்வேறு அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

திருநெல்வேலி மேலப்பாளையம் வார்டு அலுவலகத்தில் ரூ.9,300 ரொக்கம் மற்றும் ரூ.91,500 மதிப்பிலான G-Pay பரிவர்த்தனைகள் கண்டறியப்பட்டன.

தென்காசி மாவட்டம் கடையம் BDO அலுவலகத்தில் ரூ.16,000 ரொக்கம் மற்றும் ரூ.10,00,200 மதிப்பிலான டிஜிட்டல் பரிவர்த்தனைகள் கண்டறியப்பட்டன.

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் நகராட்சி அலுவலகத்தில் ரூ.7,500 ரொக்கம் மற்றும் ரூ.19,66,500 மதிப்பிலான G-Pay பரிவர்த்தனைகள் கண்டுபிடிக்கப்பட்டன.

ராமநாதபுரம் நகராட்சி வாகன நிறுத்துமிடத்தில் ரூ.12,750 கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டது.

ராமநாதபுரத்தில் போலி ரசீது புத்தகங்கள் பறிமுதல் :

ராமநாதபுரம் நகராட்சிக்குட்பட்ட புதிய பேருந்து நிலையம் மற்றும் இருசக்கர வாகன நிறுத்துமிடங்களில் போலி ரசீதுகள் வழங்கப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில்,100 ரசீதுகள் கொண்ட 59 போலி ரசீது புத்தகங்கள் மற்றும் ரூ.12,750 கணக்கில் வராத ரொக்கப் பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு அலுவலகங்களில் தொடரும் கண்காணிப்பு நடவடிக்கைகள் :

பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரசு சேவைகளில் முறைகேடுகள் நடைபெறுவதாக வரும் புகார்களின் அடிப்படையில், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

வட்டாட்சியர் அலுவலகங்கள், வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள், பதிவுத்துறை அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளில் ஏற்கனவே சோதனைகள் நடத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகங்களிலும் திடீர் ஆய்வுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த சோதனைகளில் கண்டறியப்பட்ட பணம் மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here