back to top
20.8 C
London
Tuesday, September 22, 2026
No menu items!
Homeதமிழ்நாடுமாணவர்களுடன் உணவருந்திய CM VIJAY... வெளியான காலை உணவு திட்டத்தின் புதிய MENU! - Kumudam

மாணவர்களுடன் உணவருந்திய CM VIJAY… வெளியான காலை உணவு திட்டத்தின் புதிய MENU! – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img



தமிழ்நாட்டில் அரசு பள்ளி மாணவர்களின் ஊட்டச்சத்து குறைபாட்டை குறைக்கவும், பள்ளி வருகையை அதிகரிக்கவும், இடைநிற்றலை தடுத்து தொடர்ந்து கல்வி கற்கும் சூழலை உருவாக்கவும் அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், அரசு பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்காக கடந்த 2022-ம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்து அதன் மூலம் அரசு பள்ளி மாணவர்களுக்கு தினமும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது. அதன் பின்னர் இத்திட்டத்தை விரிவுப்படுத்தும் வகையில் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.

தற்போது இத்திட்டத்தின் மூலம் 37 ஆயிரத்து 447 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 19.34 லட்சம் மாணவ, மாணவிகள் இந்த திட்டத்தின் மூலம் பயனடைந்து வருகின்றனர்.

காமராஜர் பெயரில் திட்டம் மாற்றம்

த.வெ.க. ஆட்சி அமைந்த பிறகு, இந்த காலை உணவுத் திட்டம் “பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்” என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதன் அடுத்த கட்டமாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கும் இத்திட்டத்தை விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டது.

இதன் மூலம் கூடுதலாக 15.30 லட்சம் மாணவ, மாணவிகள் பயன்பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டது.

விரிவாக்கத் திட்டம் தொடக்கம்

பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு இத்திட்டத்தை தொடங்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில், முதலீடுகளை ஈர்க்கும் பயணமாக முதலமைச்சர் விஜய் லண்டன் சென்றதால் தொடக்க விழா ஒத்திவைக்கப்பட்டு இன்று நடைபெற்றது.

சென்னை திருவான்மியூர் காந்திகிராமத்தில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய், பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைத்தார்.

அப்போது மாணவர்களுக்கு சர்க்கரை பொங்கலை பரிமாறிய அவர், தொடர்ந்து மாணவர்களுடன் அமர்ந்து உணவு அருந்தினார். அதன் பின்பு மாணவர்களின் பள்ளி அறைக்கு சென்று அங்கு மாணவர்களுடன் பேசிக் கொண்டும், மாணவர்கள் மழலைப் பாடலை பாடியபோது அதனை ரசித்து முதலமைச்சர் விஜய் கைதட்டி மாணவர்களை பாராட்டினார்.

பின்னர் மாணவர்கள் உணவு அருந்திய ஒரு மாணவன் தண்ணீர் கேட்டவுடன் தன் கையால் முதலமைச்சர் விஜய் அந்த மாணவனுக்கு தண்ணீர் ஊற்றி கொடுத்தார். இதனால் மாணவர்கள் அனைவரும் மகிழ்ச்சியை அடைந்தனர்.

34.64 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர்

இந்த விரிவாக்கத் திட்டத்தின் மூலம் மொத்தம் 44 ஆயிரத்து 984 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 34 லட்சத்து 64 ஆயிரம் மாணவ, மாணவிகள் பயன்பெற உள்ளனர்.

இத்திட்டத்துக்காக கூடுதலாக ரூ.217.63 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வார உணவு பட்டியல்

சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறும் மதுராந்தகம் (செங்கல்பட்டு), தாராபுரம் (திருப்பூர்) ஆகிய பகுதிகளை தவிர்த்து, மற்ற மாவட்டங்களில் இன்று முதல் இத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

காலை உணவுத் திட்டத்தின் வார உணவு பட்டியலில்:

  • திங்கட்கிழமை – உப்புமா
  • செவ்வாய்க்கிழமை – கிச்சடி
  • புதன்கிழமை – பொங்கல்
  • வியாழக்கிழமை – உப்புமா
  • வெள்ளிக்கிழமை – இனிப்பு வகை உணவு

ஆகியவை வழங்கப்பட உள்ளன.

சுகாதாரத்துக்கு முக்கியத்துவம்

காலை உணவுத் திட்டத்துக்கான சமையல் கூடங்கள் மற்றும் உணவு பரிமாறும் இடங்கள் தூய்மையாகவும், சுகாதாரமான முறையிலும் பராமரிக்கப்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், மாணவர்களுக்கு ஊட்டச்சத்து நிறைந்த தரமான உணவு கிடைப்பதை உறுதி செய்ய தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here