back to top
16.4 C
London
Wednesday, September 23, 2026
No menu items!
Homeஅரசியல்"எம்ஜிஆருக்கு அடுத்து விஜயா? அதெல்லாம் வெறும் லக் தான்... அதிரடி காட்டிய ரோஜா!" - Kumudam

“எம்ஜிஆருக்கு அடுத்து விஜயா? அதெல்லாம் வெறும் லக் தான்… அதிரடி காட்டிய ரோஜா!” – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img



தமிழ் திரையுலகில் நடிகர்களாக இருந்து அரசியலுக்குள் நுழைந்து சாதித்தவர்களின் பட்டியல் என்பது குறைவுதான். அந்த வரிசையில் இந்தத் தடையை உடைத்து, சினிமாவில் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி, அதன் மூலம் அரசியலுக்கு வந்து முதலமைச்சராகப் பணியாற்றியவர்கள் வெகு சிலரே. இந்த மாபெரும் மாற்றத்தை முதன்முதலில் கொண்டு வந்தவர் எம்.ஜி.ஆர்.

இவர் நாடகத் துறையிலிருந்து சினிமாவுக்குள் நுழைந்து, பிறகு சினிமா திரைதுறைக்குள் கால் எடுத்து வைத்து இவர் நடித்ததில் மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த திரைப்படங்களான ‘நாடோடி மன்னன்’, ‘அடிமைப் பெண்’, ‘எங்க வீட்டுப் பிள்ளை’ போன்ற படங்கள் அவருக்கு மாபெரும் மக்கள் ஆதரவைப் பெற்றுத் தந்தன. இவரது நடிப்பாலும், மக்களோடு மக்களாக இருக்கும் கதாபாத்திரங்களை ஏற்று நடித்ததாலும் மக்களின் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்தார்.

அதன்பிறகு அறிஞர் அண்ணாவின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு 1953-ஆம் ஆண்டு திமுகவில் இணைந்தார். தனது சினிமா புகழை திராவிட இயக்கக் கருத்துகளை மக்களிடம் கொண்டு செல்வதற்கான கருவியாக பயன்படுத்திக் கொண்டார். அதன்பின் சில காரணங்களால் 1972-ஆம் ஆண்டு திமுகவிலிருந்து விலகி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) என்ற கட்சியைத் தொடங்கினார். இதன் மூலம் 1977-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு, இந்தியாவின் முதல் சினிமா நடிகர் எம்ஜிஆர் முதலமைச்சர் என்ற வரலாற்றைப் படைத்தார்.

அதன்பிறகு சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் தொடங்கிய அதிமுகவில் கொள்கைப் பரப்புச் செயலாளராக இருந்து வந்த நிலையில், எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பின் கட்சியை முன்னின்று நடத்தி, 1991-ஆம் ஆண்டு ஜூன் 24-ஆம் தேதி தமிழ்நாட்டின் முதல் பெண் முதலமைச்சராகப் பதவியேற்றார். சினிமாவில் உச்ச நடிகையாக இருந்த ஒருவர் தமிழ்நாட்டை வழிநடத்தியது வரலாற்றுச் சாதனையாக அன்று  பார்க்கப்பட்டது.

இவ்வாறு சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்து முதலமைச்சர் பதவியைப் பெற்றவர்களாக எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் இன்றளவும் குறிப்பிடப்படுகின்றனர். இவர்களைத் தொடர்ந்து சினிமாவில் இருந்து அரசியலைத் தேர்ந்தெடுத்து, கட்சி தொடங்கி வெற்றி பெற்றார்களா என்று பார்த்தால் அது கேள்விக்குறியாகவே உள்ளது.

சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்து கட்சி தொடங்கி தோல்வியைச் சந்தித்தவர்களின் பட்டியலில் பாக்யராஜ், டி.ராஜேந்தர், கமல்ஹாசன், விஜயகாந்த், சரத்குமார், நவரச கலைஞர் கார்த்திக், சிவாஜி கணேசன், கருணாஸ் உள்ளிட்ட பலர் உள்ளனர். குறிப்பாக விஜயகாந்த அரசியல் வாழ்க்கையில் எதிர்க்கட்சியாக இருந்து வந்த நிலையில், அவரால் அரசியல் வாழ்க்கையில் முழுமையாக பயனளிக்க முடியாது சூழ்நிலையால் அவரும் பின்னர் காணாமல் போய்விட்டார்.

அதனைத் தொடர்ந்து உச்ச நட்சத்திரமாக திகழ்ந்த தலைவர் என்று அன்பால் அழைக்கப்பட்ட ரஜினிகாந்த அரசியலுக்கு வரபோகிறார் என்று பல கருத்துக்கள் எழுந்த நிலையில், ஆனால் அவர் நான் அரசியலுக்கு வரபோவதில்லை என்று தெள்ள தெளிவாக விலக்கி விட்டார். அதன் பின்பு நடிகராக வலம் வந்து கொண்டிருந்த சீமான நாம் தமிழர் கட்சி என்ற கட்சியை வழிநடத்தி கொண்டிருந்த நிலையில் இவராலும் தற்போது வரையும் எந்த தேர்தலிலும் வெற்றி பெற முடியவில்லை.

இந்நிலையில், இந்தத் தடையை உடைத்து தற்போது தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கிய நடிகர் விஜய், சினிமாவை விட்டு அரசியலுக்கு வந்து முதலமைச்சராகியுள்ளார்.

ஒரு கதாநாயகனாக தனது திரைப்பயணத்தை 1992-ஆம் ஆண்டு வெளியான ‘நாளைய தீர்ப்பு’ திரைப்படத்தின் மூலம் தொடங்கிய விஜய், அதன் பின்னர் பல்வேறு படங்களில் நடித்து முன்னணி நடிகராக உயர்ந்தார்.

குறிப்பாக ‘பூவே உனக்காக’, ‘துள்ளாத மனமும் துள்ளும்’ போன்ற படங்கள் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். அதன் பின்னர் ‘கத்தி’, ‘சர்கார்’, ‘ஜனநாயகன்’ போன்ற அரசியல் கருத்துகளை மையமாகக் கொண்ட திரைப்படங்களிலும் நடித்தார். குறிப்பாக ‘ஜனநாயகன்’ திரைப்படம் அரசியல் பின்னணியில் உருவான படமாக இருந்து வரவேற்பைப் பெற்றது.

அதனைத் தொடர்ந்து, 2024-ஆம் ஆண்டு நடிகர் விஜய் அரசியல் கட்சியைத் தொடங்கி, தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்தார். 2026 ஆம் ஆண்டு நடைபெற்ற  சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதலமைச்சராகப் பதவியேற்று கொண்டு தற்போது இவரின் ஆட்சி 100 நாட்களுக்கு மேலாக மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

இந்நிலையில், விஜய்க்கு கிடைத்த முதலமைச்சர் பதவி என்பது லக்கில் கிடைத்தது என்று நடிகை ரோஜா கூறியிருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லக்கில் வெற்றி

நடிகர் விஜய் லக்கில் முதல்முறையே முதலமைச்சராகிவிட்டார். ஒருவேளை இந்தத் தேர்தலில் அவர் தோல்வியடைந்திருந்தால், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு கட்சியை நடத்துவது மிகவும் கடினமாக இருந்திருக்கும்.

கட்சிக்காக அவர் பெரிதாக உழைக்கவில்லை. தமிழ்நாட்டின் அனைத்து தொகுதிகளுக்கும் சென்று களப்பணி மேற்கொள்ளவில்லை. அங்குள்ள மக்களின் பிரச்சினைகளை கேட்டறியவில்லை. அவர்களுக்கான பிரச்சினைகளைத் தீர்ப்பேன் என்று கூறுவதற்கான கால அவகாசமும் அவருக்கு இல்லை.

தமிழ்நாட்டின் பெரும்பாலான தொகுதிகளுக்கு அவர் பிரசாரத்திற்குச் செல்லவில்லை. அனைத்து பகுதிகளிலும் கட்சியை வளர்ப்பது என்பது எளிதான விஷயம் அல்ல என்று தெரிவித்துள்ளார்.

சினிமாவைப் போன்ற கற்பனையில் வாக்களிப்பு

சினிமாவில் ஏழைகளுக்கு உதவுவது போன்ற காட்சிகள் இடம்பெறும். அதேபோல் அவர் நிஜ வாழ்க்கையிலும் இருப்பார் என்ற கற்பனையில் மக்கள் வாக்களித்துள்ளனர். உண்மையில் அவர் அதைச் செய்வாரா என்பது யாருக்கும் தெரியாது.

விஜய் கட்சி தொடங்கியபோது, “இவர் அதிகம் பேச மாட்டாரே, பல ஊர்களுக்குச் செல்ல வேண்டுமே, நிறைய பேச வேண்டுமே, எப்படி செய்வார்?” என்று நான் ஆச்சரியப்பட்டேன். உண்மைக்கும் சினிமாவுக்கும் உள்ள வித்தியாசத்தை நாம் சிந்தித்திருப்போம். ஆனால் மக்கள் இதையும் சினிமாவாக நினைத்து வாக்களித்துள்ளனர்.

5 ஆண்டுகளுக்குப் பிறகுதான் தெரியும்

விஜய்யின் ஆட்சி முடியும் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகுதான் மக்கள் அவரை சரியாக கணித்தார்களா என்பது தெரியவரும். விஜய்க்கும் அப்போது சினிமாவுக்கும் அரசியலுக்கும் உள்ள வித்தியாசம் புரியும்.

சினிமாவில் இருக்கும்போது நாம் எதுவும் செய்யாவிட்டாலும் மக்கள் நம்மை வாழ்த்துவார்கள், கொண்டாடுவார்கள். ஆனால் அரசியல் என்பது அப்படியல்ல. மக்களின் தேவைகள் அதிகமாக இருக்கும்.

அவர்களின் தேவைகளை நிறைவேற்ற முடியாவிட்டால், “நாங்கள் இவரைப் பற்றி இப்படி நினைத்தோம்; ஆனால் இவர் இப்படி செய்துவிட்டார்” என்று மக்கள் கருதுவார்கள். என நடிகை ரோஜா தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே விஜய் முதலமைச்சர் ஆகியிருப்பது லக்கில் தான் இந்த பதிவு கிடைத்ததா? இல்லை மாற்றம் வேண்டும் என்ற நோக்கத்தில் மக்கள் இவரை தேர்ந்தெடுக்கப்பட்டாரா? அல்லது சினிமா என்கின்ற மாயை மயக்கத்தில் வாக்களித்தார்களா? பல கேள்விகள் எழுகின்றன.



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here