back to top
17.2 C
London
Wednesday, September 23, 2026
No menu items!
Homeஅரசியல்“அரசியல் என்ட்ரி ..... என்னது அடுத்த முதல்வர் சிவகார்த்திகேயனா?” - Kumudam

“அரசியல் என்ட்ரி ….. என்னது அடுத்த முதல்வர் சிவகார்த்திகேயனா?” – Kumudam

Date:

Related stories

சிறுமியை சின்னாப்பின்னமாக்கிய வீரமணி…..சிக்கிய வீடியோ!

சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட குற்றத்திற்காக சென்னையைச் சேர்ந்த பிரபல...

ஜேசுதாஸ் குரலில் பூத்த குறிஞ்சி… 50 ஆண்டுகளாக மணக்கும் பாடல்!

‘டாக்டர் சிவா’ படத்தின் ‘மலரே குறிஞ்சி மலரே’ பாடல், எம்.எஸ்.விஸ்வநாதன்...
spot_imgspot_img



சினிமாவில் உள்ளவர்கள் எல்லாம்  அரசியல் பாதையை நோக்கி செல்லுவது தற்போது வாடிக்கையாகி விட்டது. அப்படி தமிழ் சினிமாவில் தனக்கென்றே தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி உச்ச நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருந்த நடிகர் விஜய் ஜனநாயகன் திரைப்படம் தான் தன்னுடைய இறுதிப்படம் என்று அறிவித்து மக்களின் ஆதரவோடு முழுமையாக சினிமா பயணத்தை முடித்துக்கொண்டு அரசியல் களத்தில் குதித்து தற்போது கோடிக்கணக்கான மக்களின் ஆதரவோடு முதலமைச்சராக மாறியுள்ளார்.

இவரைத் தொடர்ந்து சமீபகாலமாகவே தனுஷ் அரசியலுக்கு வர இருப்பதாகவும் அதற்கான வேலைப்பாடுகள் நடைபெற்று வருகின்றன என்று தகவல் பரவியது குறிப்பாக தனது ரசிகர் மன்றத்தை ஒருங்கிணைக்கும் பணிகளில் கவனம் செலுத்தி வருவதாகவும், ரசிகர்களை நலத்திட்டப் பணிகளில் ஈடுபட அறிவுறுத்தி இருந்தார்.  அதுமட்டுமின்றி, ரசிகர் மன்ற நிர்வாகிகளுடனான சந்திப்புகளும் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன.

இதற்கிடையே, தனுஷ் ரசிகர் மன்றத்துக்கான கொடியும் அறிமுகம் செய்யப்பட்டிருப்பது அவரது அரசியல் ஆர்வம் குறித்த பேச்சை மேலும் அதிகரித்துள்ளது. சாதாரண ரசிகர் மன்ற செயல்பாடுகளைக் கடந்து, அரசியல் களத்துக்குத் தேவையான அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்கும் முயற்சியாகவே இதனை சிலர் பார்க்கின்றனர்.

இதனை வைத்து எல்லாம் தனுஷ் உடனடியாக அரசியல் கட்சியை தொடங்குவாரா அல்லது இன்னும் சில ஆண்டுகள் காத்திருந்து அரசியல் களத்தில் இறங்குவாரா என்பது அனைவரும் மத்தியில் கேள்வி எழும் நிலையில் தனுஷ் நேரடியாகவே அரசியலுக்கு வருவதற்கான வாய்ப்பு இருப்பதாகவே அவரது ரசிகர்கள் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

குறிப்பாக  அதிலும், அடுத்த சட்டமன்றத் தேர்தலிலேயே தனுஷ் களமிறங்குவார் என்று ஒரு தரப்பினர் கூறினாலும், இன்னும் சிலர் அவர் முதலில் தனது ரசிகர் மன்றத்தை அரசியல் ரீதியாக வலுப்படுத்திவிட்டு, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் முழுமையாக அரசியலுக்குள் வரலாம் என்று கூறப்படுகிறது.

தனுஷின் அரசியல் வருகை குறித்து தற்போது பேசப்பட்டு வரும் நிலையில், தற்போது  இன்று சென்னையில் நடைபெற்ற அக்ஷயா தங்க மாளிகை திறப்பு விழாவில் கலந்து கொண்டு நடிகர் சிவகார்த்திகேயன் பேசுகையில் கூட்டத்தில் இருந்த ரசிகர் ஒருவர்  ”வருங்கால முதல்வரே” என உரத்த குரலில் கத்தியவுடன் அதைக் கேட்ட சிவகார்த்திகேயன் மேடையில் வெட்கப்பட்டு சிரித்துக்கொண்டே உதட்டின் மேல் விரலை வைத்து ”உஷ் அமைதியா இருங்க” என்று சைகை செய்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சிவகார்த்திகேயனின் இந்த புன்னகையும் வெட்கத்தையும் பார்க்கும் போது அண்ணனுக்கு அரசியலுக்கு வர விருப்பம் உள்ளதாக அவருடைய ரசிகர்கள் இணையத்தில் வைரல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் விஜயை தொடர்ந்து தனுஷ் தற்போது தனுஷை தொடர்ந்து சிவகார்த்திகேயனா? என்ற கேள்வி எழுகிறது. உண்மையாகவே சிவகார்த்திகேயன்  அரசியலுக்கு வர ஆசை இருக்கிறதா?  என்று அனைவரும் மத்தியில் கேள்வி எழுகிறது. மேலும் விஜய்யைத் தொடர்ந்து அடுத்தடுத்து தமிழ் நடிகர்களை சுற்றி நிகழும் இந்த அரசியல் பேச்சுக்கள் தமிழ் திரையுலகிலும் அரசியல் வட்டாரத்திலும் தொடர்ந்து விவாதப்பொருளாகவே நீடித்து வருகிறது.

 

 

 



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here