Home சினிமா இந்தியாவில் மிரட்டிய ‘தி ஒடிசி’… முதல் நாளிலேயே ரூ.20.76 கோடி வசூல்! – Kumudam

இந்தியாவில் மிரட்டிய ‘தி ஒடிசி’… முதல் நாளிலேயே ரூ.20.76 கோடி வசூல்! – Kumudam

0


புகழ்பெற்ற இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தி ஒடிசி’ திரைப்படம் இந்திய பாக்ஸ் ஆபீஸில் முதல் நாளிலேயே சிறப்பான தொடக்கத்தைப் பதிவு செய்துள்ளது. மேட் டாமன் மற்றும் டாம் ஹாலண்ட் முதன்முறையாக இணைந்து நடித்துள்ள இந்தப் படம், வெளியீட்டுக்கு முன்பே ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

அந்த எதிர்பார்ப்புக்கு ஏற்ப, படம் இந்தியாவில் முதல் நாளில் ரூ.20.76 கோடி மொத்த வசூலையும், ரூ.17.40 கோடி நிகர வசூலையும் ஈட்டி ஹாலிவுட் படங்களுக்கு இந்தியாவில் உள்ள வரவேற்பை மீண்டும் நிரூபித்துள்ளது.

திரையரங்கு ஆக்குபென்சியிலும் படம் கவனம் ஈர்த்துள்ளது. இந்திய அளவில் முதல் நாளில் சராசரியாக 48.7 சதவீத ஆக்குபென்சியுடன் திரையிடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, ஐமேக்ஸ் மற்றும் 3D திரையரங்குகளில் பெரும்பாலான காட்சிகளுக்கான டிக்கெட்டுகள் முன்பதிவிலேயே விற்றுத் தீர்ந்தன.

தமிழகத்திலும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. முதல் நாளில் 25.9 சதவீத ஆக்குபென்சி பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. ஆங்கிலத்துடன் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் படம் வெளியாகியிருப்பது அனைத்து தரப்பு ரசிகர்களையும் திரையரங்குகளுக்கு ஈர்த்துள்ளது.

உலகம் முழுவதும் 8,413-க்கும் மேற்பட்ட திரைகளில் வெளியாகியுள்ள ‘தி ஒடிசி’, ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடமிருந்து நேர்மறையான வரவேற்பைப் பெற்று வருகிறது. இதனால் வார இறுதியில் வசூல் மேலும் அதிகரிக்கும் என்றும், இந்தியாவில் விரைவில் ரூ.100 கோடி கிளப்பில் இணையும் என சினிமா வர்த்தக வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version