Home சினிமா “எனக்கு ஏதாவது நடந்தால்…காரணம் இராவணன் தான் ” – சர்ச்சையை கிளப்பிய வஹிதா ! –...

“எனக்கு ஏதாவது நடந்தால்…காரணம் இராவணன் தான் ” – சர்ச்சையை கிளப்பிய வஹிதா ! – Kumudam

0


பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் வெற்றியாளர் முத்துக்குமரன் தொடர்பாகச் சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாகப் பரபரப்பான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. சமூக வலைதளப் பிரபலமான வஹிதா அக்தர், முத்துக்குமரன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வீடியோக்களை வெளியிட்டிருந்தார். இந்த விவகாரம் இணையத்தில் வைரலாகவும், சர்ச்சையைக் கிளப்பி பேசுபொருளாகியுள்ளது.

வஹிதா அக்தர் வெளியிட்ட வீடியோக்களில், முத்துக்குமரனுடனான தனது சந்திப்பு, அவருடன் ஏற்பட்ட நெருக்கம் மற்றும் உறவு தொடர்பான பல்வேறு குற்றச்சாட்டுகளைப் பகிர்ந்துள்ளார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக அவர் வெளியிட்ட சில வீடியோக்கள் பின்னர் நீக்கப்பட்டது.

இந்நிலையில் , நேற்றைய தினம் வஹிதா முத்துகுமரனை எதிர்த்து ஏன் வழக்கு பதிவு செய்யவில்லை, விடியோக்கள் மூலம் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதை காவல் துறையில் புகார் அளிக்கலாம் என்று சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கமெண்ட் செய்த நிலையில், எனக்கு அவர் கொடுத்த வார்த்தைகளைக் கூட அவரால் ஒப்புக்கொள்ள முடியவில்லை என்றும், அதற்கான தைரியம் அவரிடம் இல்லை என்றும் அவர் தன்னிடம் மன்னிப்பு மட்டும் கேட்டல் போதும் என்றும் பதிவிட்டிருந்தார்.

வஹிதாவின் ரூமில் முத்துக்குமரன் ஆடை !

அதனுடன், இந்த சர்ச்சை முடிந்துவிட்டது என்று நினைக்கும் வேளையில், மீண்டும் இரண்டு பதிவுகள் வெளியிட்டு முத்துக்குமரன் மீது மீண்டும் குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்.

அதில் , வஹிதா கூறியதாவது : -

“நீ என் ரூம்ல மாத்திக்கிறதுக்காகக் கொடுத்திருந்த துணிகளைத் துவைச்சு வச்சிருக்கேன். இப்போ அதைத் திரும்ப வாங்கிக்கோன்னு மெசேஜ் பண்ணாகூட, நீ பதில் தர மாட்டன்னு எனக்குத் தெரியும். ஆனா, கடைசியில நான் உன் துணிகளைத் திருடிட்டேன்னு கமிஷனர் ஆபீஸ்ல போய் புகார் கொடுக்க மட்டும் செஞ்சிடுவ.”

என்று பதிவிட்டிருந்தார்.

அதனுடன், டேக் லைனாக ” அதனால, தயவுசெஞ்சு உன்னோட அந்த அசிங்கமான துணிகளைத் திரும்ப வாங்கிக்கோ. இல்லனா, அதை எப்படி உன்கிட்ட திருப்பிக் கொடுக்கணும்னு சொல்லு. நானே அனுப்பி வைக்கிறேன், இல்லனா யாரையாவது அனுப்பி எடுத்துட்டுப் போ.”

என்று பதிவிட்டு முத்துக்குமரனும் வஹிதா ஒன்றாக இருந்தததற்கு இது ஒரு ஆதாரமாக இருக்கிறது என்று நெட்டிசன்கள் பலர் சமூக வலைத்தளங்களில் காமெண்டடித்து வந்தனர்.

“எனக்கு எதாவது நடந்தால் காரணம் முத்துக்குமரன் ” – வஹிதா !

அதன்பின், இன்று காலை வஹிதா இந்த பிரச்சனைகள் முடிந்துவிட்டது என்றும் ஆனால் வரும்காலங்களில் எனக்கு எதாவது ஆனால் அதற்கு காரணம் யார் என்று உங்களுக்கு தெரியும் என முத்துகுமரனை குறிப்பிடுவதுப என்பதுபோல் வாக்குமூலம் ஒன்றை பதிவாக பதிவிட்டு பிரச்னையை உச்சத்துக்கே கொண்டு சென்றுவிட்டார் என்றுக் கூறலாம்.

வஹிதா பதிவிட்ட பதிவில்,

“நான் இந்த வாக்குமூலத்தைப் பதிவு செய்கிறேன்.

நான் தொடர்ந்து வாழத்தான் திட்டமிட்டிருக்கிறேன். எனக்கு என்ன நடந்தாலும் அதை எதிர்கொண்டு வாழ வேண்டும் என்றுதான் நினைக்கிறேன். ஆனால், இதற்குப் பிறகு திடீர்னு எப்பயாச்சும் நான் இறந்துட்டேன், இல்ல தற்கொலை பண்ணிக்கிட்டேன்னு ஏதாவது நியூஸ் வந்துச்சுன்னா, அதுக்கு யார் பொறுப்புன்னு உங்களுக்குத் தெரியும். அந்த நபர் [Raavanan] தான்.

நான் இவ்வளவு தூரம் வெளிப்படையா பேசினதுக்காக, மக்கள் என்னைச் சும்மா விட்டுடுவாங்கன்னு எனக்குத் தோணலை. இதுவரைக்கும் எனக்கு எந்த மிரட்டலும் வரலை. ஆனாலும், என்னுடைய பாதுகாப்புக்காகவும், முன்னெச்சரிக்கையாகவும் இந்த வாக்குமூலத்தைப் பதிவு பண்றேன். ஏன்னா, மீடியாவையோ, போலீஸையோ, வேற யாரையுமே என்னால நம்ப முடியலை.”

என்று பதிவிட்ருந்தார்.

அதனுடன், டேக் லைனாக ” என்னால் இப்போ லைவ் வர முடியலை. என்னுடைய பக்கத்துல போட்டிருந்த போஸ்ட்டும் தானாகவே டெலீட் ஆயிடுச்சு. என்னுடைய அக்கவுண்ட்டும் ரெஸ்ட்ரிக்ட் பண்ணப்பட்டிருக்கு. இதையெல்லாம் பார்க்கும்போது, அவங்க ஏதோ பண்றாங்கன்னு எனக்குத் தோணுது.

நான் தற்கொலை பண்ணிக்கப் போறேன்னு சொல்லலை. இனிமேலும் வாழத்தான் போறேன்னு சொல்றேன். ஆனா, அவங்க எனக்கு ஏதாவது பண்ணிடுவாங்களோங்கிற முன்னெச்சரிக்கையில்தான் இதையெல்லாம் இங்கே குறிப்பிட்டிருக்கேன்.”

என்று பதிவிட்டதன் மூலம் இந்த பிரச்சனையை வஹிதா முடித்துவிட்டார் என்று எண்ணினாலும், முத்துகுமரனாலோ அல்லது அவரை சார்ந்தவர்களாலோ எனக்கு எதாவது நடந்து விட்டால் அதற்கு காரணம் “இராவணன்” (முத்துக்குமரன்) தான் காரணம் என்று மரண வாக்குமூலம் போல் தனது பதிவை வெளியிட்டது சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறது .  



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version