Home அரசியல் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்.. அமைச்சர் மரிய வில்சன் தகவல்! – Kumudam

தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்.. அமைச்சர் மரிய வில்சன் தகவல்! – Kumudam

0


இது குறித்து தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது மரிய வில்சன் பேசியாவது கடந்த 16 நாட்களாக முதலமைச்சர் விஜய் எல்லா துறை ரீதியாக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளிடம் ஆலோசனை கூட்டம் நடத்தி இருக்கிறார்.  தினமும் 6 மணி நேரம் முதல் 7 மணி நேரம்   ஆலோசனை நடத்தினார்.

தமிழக அமைச்சரவை கூட்டம் நடந்த முடிந்த நிலையில் வரும் நாட்களில் ஆகஸ்ட் முதல் வாரத்தில் தவெக அரசு பதவியேற்று முதல் தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று கூறினார்.

மேலும் சமீபத்தில் ஊழலில் ஈடுபடுவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்களின் பதவி பறிக்கப்படும் என்றும்  முதலமைச்சர் விஜய் எச்சரிக்கை விடுத்திருந்தார்.விஜயின் ஊழலுக்கு எதிரான நடவடிக்கை  குறித்து மக்களிடத்தில் 100 சதவீதம் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்று தெரிவித்தார்.

கடந்த 55 நாட்களாக அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்  என்றும் துறை ரீதியாகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றார்கள் என்றும் அமைச்சர் மரிய வில்சன் பேசியுள்ளார்.



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version