back to top
22.2 C
London
Wednesday, July 1, 2026
No menu items!
Homeதமிழ்நாடுசிக்கன் ரைஸ் தான் காரணமா?-பரிதாபமாக உயிரிழந்த வீராங்கனை - Kumudam

சிக்கன் ரைஸ் தான் காரணமா?-பரிதாபமாக உயிரிழந்த வீராங்கனை – Kumudam

Date:

Related stories

விஜய் ஆட்சியை கவிழ்க்க சதி? சிக்கிலில் செ.பா-வின் தம்பி…

தவெக ஆட்சியை கவிழ்க்க செந்தில்பாலாஜி ஆதரவாளர்கள் சதிதிட்டம் தீட்டியதாக வெளியாகி...

அனந்தன் காடு திரைப்படம்-குமுதம் விமர்சனக் குழு

அரசியல் பின்னணியுடன் நகரும் இந்த ஆக்ஷன் திரைப்படம், ஆர்யாவின் நடிப்பும்...
spot_imgspot_img



ரயிலில் சிக்கன் ரைஸ் சாப்பிட்டதால் கூடைப்பந்து வீராங்கனை உயிரிழந்தாரா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராபின் டென்னிஸ். இவரது மகள் எலினா லாரெட் (15). கோவையில் உள்ள  பெப்பூல் சிபிஎஸ்சி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.  பள்ளிகளுக்கு இடையேயான  கூடைப்பந்து  போட்டி  மத்திய பிரதேசம் மாநிலம் குவாலியரில் நவம 8ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடந்தது. இந்த  போட்டியில் எலினா லாரெட் கலந்து கொண்டார். நேற்று அவர் கிரான்ட்ராங் எக்ஸ்பிரஸ் ரயில் மூலமாக சென்னை வந்தார்.  

அப்போது திடீரென வயிற்று வலி வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் எலினா லாரெட் தனது தாய் மாமா டேவிட் வில்லியம்ஸ் என்பவருக்கு தகவல் தெரிவித்தார். பிறகு  அண்ணா நகரில் உள்ள சுந்தரம் பவுண்டேஷனில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.சிகிச்சை பெற்ற பிறகு சென்னை பெரவள்ளூர் அகரம் பகுதியில் வசித்து வந்த பெரியம்மா கலா என்பவரின் வீட்டிற்கு எலினா லாரெட் சென்றார். அங்கும் திடீரென வயிற்று வலி வாந்தி மயக்கம் அதிகமாகி மயங்கினார். உடனே உறவினர்கள் அவரை அளவில் 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து பரிசோதித்து பார்த்து முதலலுதவி சிகிச்சை மேற்கொண்டார். பிறகு பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவர் பரிசோதித்துப் பார்த்ததில் எலினா லாரெட் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். 

இது குறித்து தகவல் அறிந்து பெரவள்ளூர் போலீசார் எலினா லாரெட் உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில்,  கடந்த இரண்டு நாட்களாக வயிற்று வலி வாந்தி பிரச்சினை இருந்து வந்ததாகவும், இதனால் சுந்தரம் பவுண்டேஷன் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை மேற்கொண்டு இளநீர் அருந்தியதாக தெரியவந்துள்ளது. மேலும் குவாலியரில் நடைபெற்ற கூடைப்பந்து விளையாட்டு போட்டியில் பங்கேற்று விட்டு ரயிலில் சிக்கன் ரைஸ் சாப்பிட்டதாக கூறப்படுகிறது.தொடர்ந்து போலீசார்  விசாரணை நடத்தி வருகின்றனர்.பிரேத பரிசோதனை அறிக்கை வந்தாலே மரணத்திற்கு காரணம் தெரிய வரும் என போலீசார் கூறியுள்ளனர்.



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here