back to top
18.6 C
London
Sunday, August 16, 2026
No menu items!
Homeஅரசியல்"தனுஷுக்கு ரஜினி ஆதரவு தரமாட்டார்" - பா.ஜ.க. அர்ஜுனமூர்த்தி அதிரடி. - Kumudam

“தனுஷுக்கு ரஜினி ஆதரவு தரமாட்டார்” – பா.ஜ.க. அர்ஜுனமூர்த்தி அதிரடி. – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img



பா.ஜ.க.வின் என்.ஜி.ஓ. பிரிவு மாநிலத் தலைவர் ப்ளஸ் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ பணிக்கான இணை ஒருங்கிணைப்பாளர் இரா.அர்ஜுனமூர்த்தி. ஒருகாலத்தில் ரஜினி அரசியல் கட்சி தொடங்குவதற்கான முன்னெடுப்புகளை செய்தவர். அவரை சந்தித்து த.வெ.க. அரசின் செயல்பாடுகள், அ.தி.மு.க. குழப்பங்கள், அண்ணாமலை அரசியல் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம்.

தமிழக காங்கிரஸில் தலைவர் மாற்றம், பயிற்சி முகாம் என பல மாற்றங்கள் நடக்கின்றன. ஆனால், பா.ஜ.க. சைலன்ட் மோடில் உள்ளதே?

“விஜய் ஆசியால் காங்கிரஸுக்கு அமைச்சரவையில் இடம் கிடைத்துள்ளது. இதனால் அக்கட்சி ஆக்டிவ்வாக உள்ளது என்று நினைப்பது தவறு. 22 மாநிலங்கள் மற்றும் மத்தியில் ஆட்சி செய்கிற பா.ஜ.க.வின் வியூகங்கங்களை குறைத்து மதிப்பிடாதீர்கள். மேற்கு வங்கத்தில் அசைக்க முடியாத சக்தி என கொண்டாடப்பட்ட மம்தாவை வீழ்த்தி, பா.ஜ.க ஆட்சியைப் பிடித்திருப்பதை மறந்துவிடாதீர்கள். அதே மாற்றம் தமிழகத்திலும் விரைவில் வரும்”

ஆனால், அதற்கான சாத்தியம் இருப்பதுபோல் தெரியவில்லையே?

“வலிமையான சிந்தாந்தம், உட்கட்டமைப்பு உள்ள இரு பெரிய கட்சிகளை விளையாட்டுத்தனமாக வீழ்த்தி, திராவிடக் கட்சிகள் இல்லாத தமிழகத்தை விஜய் உருவாக்கிவிட்டதால், எங்களின் வேலை எளிதாகிவிட்டது. ஆட்சியில் இருந்து தி.மு.க. அகற்றப்பட்டதும், முதல்வராக இருந்த ஸ்டாலின் தோற்கடிக்கப்பட்டதும், மாற்று சிந்தனைக்கான காலமாக நினைக்கிறோம். ஜோசப் விஜய்யை எதிர்க்கக்கூடிய வலிமையான சித்தாந்தம் உள்ள ஒரே கட்சி பா.ஜ.க. தான்.”

மேகதாது விவகாரத்தில் தமிழக நலனுக்கு எதிராக மத்திய அமைச்சர் கருத்து தெரிவித்துள்ளாரே?

“காவிரி பிரச்னையில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட பா.ஜ.க. தொடர்ந்து குரல் கொடுத்துவருகிறது. நதிநீர் பங்கீடு தொடர்பான பல பிரச்னைகளுக்கு தீர்வு காண ஒரு திட்டத்தை மத்திய அரசு கொண்டுவருவதற்கான பணிகள் நடப்பதாக அறிகிறேன். காவிரி பிரச்னையைப் பொறுத்தவரை, தமிழகம் மற்றும் கர்நாடக முதல்வர்கள், பிரதமரைச் சந்தித்துப் பேச வேண்டும்.”

விஜய்க்கு போட்டியாக தனுஷை அரசியலில் களமிறக்க பா.ஜ.க. திட்டமிடுவதாக சொல்லப்படுகிறதே?

“விஜய்யின் அரசியல் வெற்றி பலரது தூக்கத்தையும் கெடுத்துவிட்டது. விஜய்க்கு எதிராக அண்ணாமலை, தனுஷ், அவர்களின் பின்னணியில் பா.ஜ.க. என பல கதைகளை அவிழ்த்துவிடுவார்கள். அவற்றை எல்லாம் பொருட்படுத்த வேண்டியதில்லை.”

தான் விரும்பிய ஆன்மிக அரசியலை, தனுஷ் முலம் செயல்படுத்த ரஜினிகாந்த் நினைக்கிறார் என்றும் சொல்லப்படுகிறதே?

“தான் செய்ய நினைப்பதை தானே செய்ய வேண்டும் என்றுதான் ரஜினி நினைப்பார். இன்னொருவரை வைத்து செய்யமாட்டார். அதனால், தனுஷ் அரசியல் பிரவேசத்திற்கு ரஜினி காரணமாக இருப்பார், ஆதரவு தருவார் என்று நான் நம்பவில்லை. அந்த தேவையும் அவருக்கு இல்லை

த.வெ.க. அரசின் மீதான குதிரைபேர குற்றச்சாட்டு நியாயமானதா?

“பெரும்பான்மை கிடைக்காத நிலையில், எதிரணியினரின் ஆதரவைப் பெற்று ஆட்சி அமைத்து, அவர்களுக்கு அமைச்சரவையில் இடம் கொடுப்பது குதிரைபேரம்தானே. தேர்தலுக்கு முன்பே த.வெ.க.வுடன் காங்கிரஸ் சேர முடிவு செய்தது. தேர்தலில் வி.சி.க.வின் மொத்த வாக்கு வாங்கியும் த.வெ.க. பக்கம் போய்விட்டதை தெரிந்துகொண்ட திருமாவளவன், கம்யூனிஸ்டுகளை காரணம் காட்டி கூட்டணியை மாற்றிவிட்டார். விஜய் பாப்புலாரிட்டியை மீறி நம்மால் ஒன்றும் செய்ய முடியாது என்பதால், திருமாவளவன் தன் கட்சியை தவெகவிடம் அடகு வைத்துவிட்டார்.”

அண்ணாமலையின் ‘வீதி லீடர்ஸ்’ அமைப்பின் செயல்பாடுகள் தீவிரமாகியுள்ளனவே?

“ஸ்வச் பாரத்தில் மோடி செய்ததை இவர் – புதிதாக செய்வதுபோல் ரீல்ஸ் போடுகிறார். உட்கட்சி பிரச்னையால் மழைக்கு ஒதுங்குவதுபோல், சில பா.ஜ.க.வினர் அவர் பக்கம் போனார்கள். அவர்கள் திரும்பி வந்துவிடுவார்கள். சாதியை வீட்டில் வைத்துவிட்டு வாருங்கள் என்று சொல்லும் அண்ணாமலை, பொள்ளாச்சியில் . தனது முதல் மாநாடு நடத்தியது ஏன்? காரைக்குடி, ராமநாதபுரம் போன்ற இடங்களில் நடத்தியிருக்க வேண்டியதுதானே. படிப்பது ராமாயணம், – இடிப்பது அனுமார் கோயில்!”

விஜய் – அண்ணாமலை இடையேதான் போட்டி என அண்ணாமலை ஆதரவாளர்கள் சொல்கிறார்களே?

தனிப்பட்ட “அண்ணாமலையிடம் கொள்கையும், அரசியல் கட்சி ஆரம்பிக்கும் தைரியமும் கிடையாது. அவர் ஒரு சோஷியல் மீடியா டிராமா கிரியேட்டர். த.வெ.க. ஆட்சியில் காவல்துறை உட்பட பல துறைகளில் தவறுகள் நடக்கின்றன. அண்ணாமலையின் தைரியம் இப்போது எங்கே போனது? குறைகளை சுட்டிக்காட்டுவதற்கு பதிலாக விஜய்யிடம் மென்மையான போக்கை கடைபிடிக்கிறார். மோடியின் பின்புலத்தில், அன்றைக்கு ‘டி.எம்.கே ஃபைல்ஸ்’ என கர்ஜித்த அண்ணாமலை, இன்று விஜய் முன் பூனைபோல் நிற்கிறார். எதிர்கால அரசியலில் த.வெ.க. – பா.ஜ.க. இடையேதான் -நேரடி போட்டி இருக்கும்.”

முன்பு ஒ.பி.எஸ் – இ.பி.எஸ் பிரச்னையை சமரசம் செய்த பா.ஜ.க., தற்போதைய அ.தி.மு.க. மோதலை வேடிக்கை பார்க்கிறதே?

“அ.தி.மு.க. மிகப்பெரிய மக்கள் இயக்கம். அவர்களின் உட்கட்சி பிரச்னையில், அவர்களாக கூப்பிடாமல் பா.ஜ.க. தலையிடாது. ஒருவேளை பிரதமர் மற்றும் அமித் ஷாவை எடப்பாடி சந்தித்து உதவி கேட்டால், நிச்சயம் தீர்வு கொடுப்பார்கள் என்பது என் தனிப்பட்ட கருத்து”

த.வெ.க. அரசின் 80 நாள் ஆட்சி எப்படி இருக்கிறது?

அடிமட்ட அளவில் லஞ்சம் குறைந்துள்ளதாக பொதுமக்கள் பேசிக்கொள்கின்றனர். ஆனால், அரசு செயல்படும் முறை சரியில்லை. ‘கேபினட் மீட்டிங்கில், அமைச்சர்கள் யாரும் ரீல்ஸ் போடக்கூடாது’ என முதலமைச்சர் வார்னிங் கொடுக்கும் அளவுக்கு அமைச்சர்களின் செயல்பாடுகள் இருக்கின்றன. மெட்ரோ ரயில் ஆய்வு, கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்தில் ஆய்வு என்பவை சோஷியல் மீடியா ‘கன்டென்டாக’ பேசப்படுகிறதே தவிர, அதற்கு பலன் ஏதும் இருப்பதுபோல் தெரியவில்லை.” முதல்வரின்



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here