back to top
19.5 C
London
Monday, June 29, 2026
No menu items!
Homeசினிமாநடிகர் சூர்யா அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை: தலைமை நற்பணி இயக்கம் - Kumudam

நடிகர் சூர்யா அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை: தலைமை நற்பணி இயக்கம் – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img



தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்துக் கொண்டிருப்பவர் நடிகர் சூர்யா. 1997 ஆம் ஆண்டு வெளியான நேருக்கு நேர் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். அதன் பிறகு நந்தா, காக்க காக்க, பிதாமகன், சிங்கம்,ஏழாம் அறிவு, உள்ளிட்ட பல ஹிட் படங்களை கொடுத்து மக்களின் மனதில் நீங்கா இடத்தையும் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கியவர் தான் நடிகர் சூர்யா.

சமீபத்தில் ஆர் கே பாலாஜி இயக்கத்தில் சூர்யா மற்றும் நடிகை திரிஷா ஆகியோர் நடிப்பில் கருப்பு திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது,

அதனைத் தொடர்ந்து தற்போது சூர்யா, விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தில் நடித்து வருகிறார். நடிப்பைத் தாண்டி, தனது அகரம் அறக்கட்டளை மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு கல்வி உதவிகளை வழங்கி சமூகப் பணிகளிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றார். 

இந்நிலையில் அகில இந்திய சூர்யா தலைமை நற்பணி இயக்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பேசிய நிர்வாகி ஒருவர்,”காலம் முடிவு செய்துவிட்டது. கடவுள் முடிவு செய்துவிட்டார். அவர் மக்கள் தலைவராக வருவதை யாராலும் தடுக்க முடியாது” என்ற பேச்சு கூட்டத்தில் பங்கேற்ற ரசிகர்கள் பலத்த கரவொலியுடன் வரவேற்பு அளித்தனர். மேலும் விஜயை தொடர்ந்து அரசியல் களத்தில் சூர்யாவும் இறக்க உள்ளாரா ? என்ற விவாதம் சமூக வலைதளங்களில் தீவிர மடைந்துள்ளது.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சூர்யாவின் அகில இந்திய சூர்யா தலைமை நற்பணி  இயக்கம் நடிகர் சூர்யாவிற்கு அரசியலுக்கு வருவதற்கான எந்தவித எண்ணமும் இல்லை என்றும் அகரம் அறக்கட்டளை மற்றும் நற்பணி இயக்கத்தின் மூலமாக மக்களுக்கான சமூகச் சேவைகளை தொடர்ந்து ஆற்றி வருவதே அவருக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் மனநிறைவையும் அளித்து வருகிறது எனவும் கூறப்பட்டுள்ளது.



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here