back to top
25.1 C
London
Friday, August 14, 2026
No menu items!
Homeஅரசியல்‘’இன்னும் ஒரு வாரத்தில் அதிமுக தேர்தல் அறிக்கை வெளியிடப்படும்’’: எடப்பாடி பழனிசாமி சொன்ன அப்டேட்  -...

‘’இன்னும் ஒரு வாரத்தில் அதிமுக தேர்தல் அறிக்கை வெளியிடப்படும்’’: எடப்பாடி பழனிசாமி சொன்ன அப்டேட்  – Kumudam

Date:

Related stories

அரசு அதிகாரத்தில் பங்கு…..வன்னியரசு-சிந்தனைச்செல்வன் இடையே வெடித்த மோதல்? – Kumudam

அரசு அதிகாரத்தில் பங்கு.....வன்னியரசு-சிந்தனைச்செல்வன் இடையே வெடித்த மோதல்? - Kumudam...

“தவெகவுக்கு ஓட்டுப்போட்டவர்களுக்கு நல்ல சாவே வராது”… மக்களை விளாசிய ஆர்.எஸ்.பாரதி! – Kumudam

சென்னை காரம்பாக்கத்தில் கலைஞர் கருணாநிதியின் நினைவு நாளை முன்னிட்டு புகழ்வணக்கப்...

அதிமுகவில் மீண்டும் வெடிக்கும் உள்கட்சி மோதல்? ….. வேலுமணி Vs பொன்னையன்! – Kumudam

அதிமுகவில் மீண்டும் வெடிக்கும் உள்கட்சி மோதல்? ..... வேலுமணி Vs...
spot_imgspot_img



நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது: 

கேள்வி : கூட்டணி விஷயமாக அடிக்கடி டெல்லிக்கு வருகிறீர்கள், அதற்கு காரணம் என்ன?

இபிஎஸ் ;  நான் இரண்டாவது முறைதான் வந்திருக்கிறேன். நான்கைந்து மாநிலங்களில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், உள்துறை அமைச்சருக்கு பணிச்சுமை அதிகம். அதனால் நான் வந்து அவரை பார்த்துவிட்டுப் போகிறேன்.  

கேள்வி : தொகுதி பங்கீடு எந்த அளவுக்கு இருக்கின்றன?

இபிஎஸ் : நான்கு நாட்களில் எல்லாம் இறுதி செய்யப்படும். நாளைய தினம் பியூஷ் கோயல் சென்னை வருகிறார். 

கேள்வி : வெற்றி வாய்ப்புள்ள தொகுதி பங்கீட்டில் பிரச்சினை இருக்கிறதா?

பதில் : 234 தொகுதிகளும் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள்தான். அவரவருக்கு எங்கு வெற்றி வாய்ப்பு உள்ளதோ, அதையெல்லாம் அமர்ந்து பேசி முடிவு செய்வோம்.

கேள்வி : கூட்டணியில் இன்னும் வேறு புதிய கட்சிகள் வர வாய்ப்பு இருக்கிறதா? தவெக கூட்டணிக்கு வரும் என்று எதிர்பார்ப்பு இருந்ததே?

இபிஎஸ் : அப்படியெல்லாம் கிடையாது. நீங்கள்தான் பேசிக்கொண்டிருக்கிறீர்களே தவிர, நான் தெளிவாகச் சொல்லிவிட்டேன். அவர்களும் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை என்று சொல்லிவிட்டார்கள். நாங்களும் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை என்று சொல்லிவிட்டோம். அதிமுக பொதுச்செயலாளரும் சொல்லிவிட்டார்… தவெக தலைவரும் சொல்லிவிட்டார். ஆனால் நீங்கள்தான் விடமாட்டேன் என்கிறீர்கள். 

கேள்வி : பாஜக தரப்பு இதை மறுக்காமல் இருக்கிறதே?

இபிஎஸ் : இந்த கூட்டணிக்கு தலைமை அதிமுக. எங்களைப் பொறுத்தவரை எங்கள் கூட்டணி கட்சித்தலைவர்கள் யாரும் அவர்களை சந்தித்துப் பேசவில்லை. அவர்களும் எங்களை சந்தித்துப் பேசவில்லை. 

கேள்வி : தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வர்கள் பலர் தமிழகத்துக்கு வரப் போவதாக செய்திகள் வருகின்றன. இது பிரச்சாரத்துக்கு எந்த அளவுக்கு வலு சேர்க்கும்?

இபிஎஸ் : முதலில் தொகுதிப் பங்கீடு முடிய வேண்டும். எந்தெந்த தொகுதி யாருக்கு என்று தீர்மானித்த பிறகுதான் இதெல்லாம் முடிவாகும்.

கேள்வி : கூட்டணிக்கு வேறு கட்சிகள் வர வாய்ப்பு இருக்கிறதா?

இபிஎஸ் : எல்லா கட்சிகளும் அந்தந்த கூட்டணியில் சேர்ந்துவிட்டனர். திமுகவுடன் கூட்டணி சேரும் கட்சியெல்லாம் சேர்ந்துவிட்டது. அதிமுகவோட கூட்டணியில் சேரும் கட்சியெல்லாம் சேர்ந்துவிட்டது. இனி தேர்தலை நோக்கி பயணம் செய்ய வேண்டும்.

கேள்வி : அன்புமணி ராமதாஸ், டிடிவி தினகரன் எதற்காக அமித் ஷாவை பார்க்க வருகிறார்கள்?

இபிஎஸ் : தமிழ்நாட்டின் அரசியல் சூழ்நிலை எப்படி இருக்கிறது என்பதுகுறித்து கலந்து பேச வருகிறார்கள்.  

கேள்வி : திமுக வாக்குறுதிகளை முடிவு செய்யும் பணிகள் இன்னும் 2 நாட்களில் முடியும் என்று சொல்லியிருக்கிறார்கள். நீங்கள் எப்போது முழுமையாக்குவீர்கள்?

பதில்: தயார் செய்து வருகிறோம். இன்னும் ஒரு வாரத்தில் எங்கள் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும்.

கேள்வி : பிரதமரும் உள்துறை அமைச்சரும் எப்போது பிரச்சாரத்துக்கு வருவார்கள்?

இபிஎஸ் : ஏற்கெனவே பிரச்சாரம் தொடங்கப்பட்டு விட்டது. அதிமுக ஸ்பீடாக போய்க்கொண்டு இருக்கிறது. எக்ஸ்பிரஸ் வேகத்தில் போகிறது. ஏற்கெனவே பிரதமர் 3 முறை தமிழகத்துக்கு வந்து மதுராந்தகம், மதுரை, திருச்சியில் பிரம்மாண்ட தேர்தல் பிரச்சார கூட்டம் நடைபெற்றுள்ளது. இப்போது பல மாநிலங்களில் தேர்தல் அறிவித்திருக்கிறார்கள். அதற்கு ஏற்ப தமிழ்நாட்டுக்கு நிச்சயமாக வருவார். அவர் வருகின்றபோது அனைவருக்கும் தெரிவிக்கப்படும். என்றார்.



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here