back to top
13.4 C
London
Sunday, October 4, 2026
No menu items!
HomeசினிமாBIGG BOSS வீட்டில் அடுத்த அதிரடி ELIMINATION...யாரும் எதிர்பார்க்காத TWIST... 2 பேர் யார்? -...

BIGG BOSS வீட்டில் அடுத்த அதிரடி ELIMINATION…யாரும் எதிர்பார்க்காத TWIST… 2 பேர் யார்? – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img


பிக் பாஸ் தமிழ் சீசன் 10 விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வரும் இந்த சீசனில், ஆரம்பம் முதலே பல்வேறு புதுமையான டாஸ்க்குகள் மற்றும் எதிர்பாராத திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன.

ஒவ்வொரு சீசனிலும் புதுப்புது முயற்சிகளை அறிமுகப்படுத்தும் பிக் பாஸ், இந்த முறை சட்டப்பேரவை பாணியில் ‘ஆளும் அணி’, ‘எதிர் அணி’ என போட்டியாளர்களை பிரித்து, ‘ஜனநாயக அறையில்’ விவாதிக்கும் வகையில் ஒரு புதிய கான்செப்ட்டை கொண்டு வந்துள்ளார். சமூகத்தில் நிலவும் தற்போதைய சூழலுடன் தொடர்புபடுத்தி அரசியல் கருத்துகளை முன்வைக்கும் வகையிலும் இந்த டாஸ்க் அமைக்கப்பட்டது.

இதற்கிடையே கடந்த வாரம் எதிர்பாராத திருப்பமாக, போட்டியாளர்களால் வெளியேற்றப்பட்ட 3 பேர் மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் அதிரடியாக என்ட்ரி கொடுத்தனர். அவர்களில் தலா ஒருவரை தேர்வு செய்து, அவர்களுடன் கயிறு கட்டிக்கொண்டு இருக்க வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டது.

அதன்படி, லட்சுமி பிரியா குமரனையும், சவின்யா அஸ்மிதாவையும், ஜாவித் தன்யாவையும் தேர்வு செய்தனர். இதையடுத்து, இந்த வாரம் முழுவதும் ‘பிக் பாஸ் ஹோட்டல்’ டாஸ்க் நடைபெற்றது. கயிறு கட்டப்பட்டிருந்த 6 பேரும் Guest-களாக செயல்பட, மற்ற போட்டியாளர்கள் ஹோட்டல் பணியாளர்களாக செயல்பட்டனர்.

பின்னர் பிக் பாஸ் கொடுத்த மற்றொரு ட்விஸ்ட்டில், Guest-கள் பணியாளர்களாகவும், பணியாளர்கள் Guest-களாகவும் மாறினர். இந்த பரபரப்புக்கு மத்தியில், குமரன் பணப்பெட்டியுடன் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இதன் மூலம் அவருடன் கயிறு கட்டியிருந்த லட்சுமி பிரியா எலிமினேஷனில் இருந்து தப்பித்தார்.

மீதமிருந்த 4 பேரில், ஒரு ஜோடிக்கு ஒருவர் என ஒருவர் வெளியேற வேண்டும் என்று பிக் பாஸ் அறிவித்தார். இதையடுத்து நால்வரும் தங்களுக்குள் பேச்சுவார்த்தை நடத்திய போதிலும், இறுதியாக எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை.

இந்த நிலையில், இந்த வார இறுதி எலிமினேஷன் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. மக்கள் அளித்த வாக்குகளின் அடிப்படையில் குறைவான வாக்குகளைப் பெற்றதாக கூறப்படும் சவின்யா மற்றும் தன்யா ஆகிய இருவரும் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் இந்த வார எலிமினேஷன் எபிசோடு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதே நேரத்தில், நாளை ஞாயிற்றுக்கிழமை பிக் பாஸ் வீட்டுக்குள் ஒரே நேரத்தில் 3 புதிய வைல்டு கார்டு போட்டியாளர்கள் என்ட்ரி கொடுக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே ஆட்டம் சூடுபிடித்துள்ள நிலையில், இந்த 3 பேரின் வருகைக்குப் பிறகு போட்டியின் போக்கு எப்படி மாறப்போகிறது என்பதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here