back to top
7.3 C
London
Saturday, October 24, 2026
No menu items!
Homeசினிமாபிஷ்னோய் கும்பலின் அடுத்த டார்கெட்? பாலிவுட்டைச் சுற்றும் பதற்றம்! - Kumudam

பிஷ்னோய் கும்பலின் அடுத்த டார்கெட்? பாலிவுட்டைச் சுற்றும் பதற்றம்! – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img


லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலுடன் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் நபர்கள், பாலிவுட் பிரபலங்களைக் குறிவைத்துச் செயல்பட்டார்களா என்ற கோணத்தில் மும்பை காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. குறிப்பாக, டைகர் ஷெராஃப் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் பின்னணியில் ஆயுத விநியோகம், சதித்திட்டம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விசாரணை தீவிரமடைந்துள்ளது.

சல்மான் கான் வீட்டைக் குறிவைத்தார்களா?

மும்பை காவல்துறை நீதிமன்றத்தில் தெரிவித்த தகவல்களின்படி, லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலின் கூட்டாளி எனக் கூறப்படும் அனில் பண்டிட்டின் தூண்டுதலின் பேரில் டைகர் ஷெராஃப் மீதான தாக்குதல் நடத்தப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த வழக்கில் இதுவரை எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் மூன்று முக்கியக் குற்றவாளிகள் ராஜஸ்தானின் கோட்டாவிலிருந்து மும்பைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். அவர்களை அக்டோபர் 31-ம் தேதி வரை காவலில் எடுத்து மும்பை காவல்துறை விசாரித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விசாரணையில், முதலில் நடிகர் சல்மான் கானைக் குறிவைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. மும்பைக்கு வந்த அவர்கள், சல்மான் கானின் வீட்டையும் கண்காணித்துள்ளனர். ஆனால், அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததால் தங்களது திட்டத்தைக் கைவிட்டதாகக் கூறப்படுகிறது.

ரன்பீர் கபூர் வீட்டையும் நோட்டமிட்டதாகத் தகவல்!

சல்மான் கானைத் தொடர்ந்து நடிகர் டைகர் ஷெராஃப் குறிவைக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், மூன்றாவதாக ரன்பீர் கபூரின் பாந்திரா இல்லத்தையும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பல நாட்களாகக் கண்காணித்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரன்பீர் கபூரைக் குறிவைப்பது தொடர்பாகவும் அவர்கள் சதித்திட்டம் தீட்டினார்களா என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பான முழுமையான விவரங்கள் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட வேண்டியுள்ளது.

ஒருபுறம் துப்பாக்கிச் சூடு சம்பவம், மறுபுறம் ஆயுத விநியோகம் மற்றும் பிரபலங்களின் வீடுகளைக் கண்காணித்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் என இந்த வழக்கு புதிய திருப்பங்களைச் சந்தித்து வருகிறது. விசாரணை முடிவில் மேலும் பல தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here