back to top
7.3 C
London
Saturday, October 24, 2026
No menu items!
Homeசினிமாஏ.ஆர்.ரஹ்மான் வாய்ப்பு மிஸ்.. விஜய் பற்றி என்ன சொன்னார் ஆண்ட்ரியா? - Kumudam

ஏ.ஆர்.ரஹ்மான் வாய்ப்பு மிஸ்.. விஜய் பற்றி என்ன சொன்னார் ஆண்ட்ரியா? – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img


நடிப்பில் நெருப்பு, குரலில் இனிமை, சிந்தனையில் துணிச்சல் என ஒவ்வொரு பரிமாணத்திலும் தனக்கான அடையாளத்தைச் செதுக்கியவர்; கதாபாத்திரங்களுக்குள் தன்னைத் தொலைத்துக்கொள்ளும் நடிகையாகவும், பாடல்களின் வழியே உணர்வுகளை உயிர்ப்பிக்கும் கலைஞராகவும், தன் பாதையைத் தானே தீர்மானிக்கும் பெண்ணாகவும் பயணிக்கும் ஆண்ட்ரியாவுடன் ஒரு சுவாரஸ்யமான உரையாடல்…

நடிகையா, பாடகியா… உங்க கம்ஃபர்ட் ஸோன் எது?

“எதுவும் பண்ணாம வீட்டுல சும்மா உட்கார்ந்திருப்பதுதான் என்னோட கம்ஃபர்ட் ஸோன். ஆனா, ஷூட்டிங் ஸ்பாட்டைவிட பாடும் மேடைகள்தான் எனக்குப் பிடிக்கும். இங்கே அவ்ளோ டென்ஷன் இருக்காது!”

சோனி விழாவின் ‘தமிழ் ஐடல்’ ஷோவில் என்ன ஸ்பெஷல்?

“ரஹ்மான் சார் இருப்பதே தனி ஸ்பெஷல்தான். அவர் ஒரு சிறந்த மென்டார் (Mentor). தமிழ்நாட்டுக்கு இந்த ஷோ புதுசு! பெயர்லயே தமிழ் இருப்பதால் இது இன்னும் ஸ்பெஷல். கூடவே நானும் இதுல ஒரு ஜட்ஜா இருக்கேன். ரொம்ப ஆர்வமா இந்த நிகழ்ச்சிக்காகக் காத்திட்டிருக்கேன்.”

ஏ.ஆர். ரஹ்மான் இசையில் நீங்க பாடவே இல்லையே?

“அதைப்பத்தி மட்டும் கேக்காதீங்க, எனக்கு ரொம்ப கில்ட் ஆகும். நான்தான் அந்த சான்ஸ மிஸ் பண்ணிட்டேன். ஏன்னா, அவர் என்னைப் பாடக் கூப்பிடும்போதெல்லாம் ஒண்ணு அந்தச் சமயத்துல நான் ஊருல இருந்திருக்கமாட்டேன்; இல்லை, வேற வேலையில இருந்திருப்பேன். இதனாலயே அவர் மியூஸிக்ல பாட முடியாம போச்சு!”

உங்களுடன் சேர்ந்து பாடிய, நடித்த நடிகர் விஜய் இப்போது முதல்வர். அவரைப் பற்றிச் சொல்லுங்களேன்… “மாஸ்டர்’ படத்தில் அவருடன் சேர்ந்து பணியாற்றிய பிறகு, அவரது குணத்துக்காகவே நான் அவருக்குப் பெரிய ரசிகை ஆகிவிட்டேன். அவர் மிகவும் பண்பான மனிதர். அரசியலைப் பற்றி என்னால் குறிப்பிட்ட கருத்து எதையும் கூற முடியாது. ஆனால், மக்களுக்கு ஒரு மாற்றம் தேவைப்பட்டது. அந்த மாற்றத்தின் முகமாக அவர் இருக்கிறார். அவருக்கும், தமிழ்நாட்டிற்கும் எல்லாமே சிறப்பாக அமைய வேண்டும் என்று விரும்புகிறேன்.”

உங்களுக்குத் திருப்புமுனையாக அமைந்த பாடல் ஏதேனும் இருக்கிறதா?

“என் இசைப் பயணத்தின் பாதையை மாற்றியமைத்தது இரண்டு பாடல்கள். அதற்காக நான் மிகவும் நன்றியுள்ளவளாக இருக்கிறேன். ‘கோவா’ படத்தில் பாடிய ‘இதுவரை இல்லாத உணர்விது’ பாடல்தான். எனக்கு ரொம்பப் பிடிச்ச பாடலும்கூட அதுக்குப் பிறகு என்னோட செகண்ட் இன்னிங்ஸை தொடங்கி வெச்ச பாடல் கோவிட்டுக்குப் பிறகு ‘புஷ்பா’ படத்துல நான் பாடின ‘உம் சொல்றியா மாமா’ பாடல். அது செம ஹிட் ஆச்சு! இசைத் துறையில் எப்போதும் புதிதாகக் கற்றுக் கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். நான் எப்போதும் அப்படித்தான் இருக்கிறேன்.”

இசையில் தொழில்நுட்பத்தின் பயன்பாடு மற்றும் டீப் ஃபேக் அச்சுறுத்தல்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

“இசையில் ஏ.ஐ. பயன்பாட்டை நான் விரும்புவதில்லை. அதிர்ஷ்டவசமாக என்னால் இயல்பாகப் பாட முடியும். ஏ.ஐ தொழில்நுட்பத்தின் பின்னணியில் அதிகளவில் ‘வாட்டர் கன்சம்ப்ஷன்’ நடைபெறுகிறது. அதனால் நான் ஏ.ஐ. அதிகம் பயன்படுத்துவதில்லை. மேலும், ‘டீப் ஃபேக்’ செய்வது என்பது தனி நபர் உரிமையில் செய்யப்படும் மிகப் பெரிய வயலேஷன். இது யாருக்கு நடந்தாலும் தவறு. இதற்கெல்லாம் சுயக்கட்டுப்பாடே மிகச் சிறந்த தீர்வு!”

நீங்க நடிச்ச படங்கள் ரிலீஸ் ஆகாம இருக்குறது பர்சனலா உங்களைப் பாதிக்குதா?

“ஆமா. கண்டிப்பா! அந்தப் படங்கள் ரிலீஸ் ஆனாதானே அது மூலமா எனக்கு இன்னும் சில நல்ல படங்கள் கிடைக்கும்? ரிலீஸ் ஆகாததனால அந்தப் பட வாய்ப்பு வேறு யாருக்காவது போயிடுது. ‘பிசாசு 2’, ‘மனுசி’ இந்த இரண்டு படத்துலயும் நல்லா நடிச்சிருக்கேன். ‘மனுசி’ நல்லா வந்திருக்கு. கூடிய சீக்கிரமே அது ரிலீஸ் ஆகிரும். ‘பிசாசு 2 எப்ப வரும்னு எனக்கும் தெரியல”



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here