back to top
7.3 C
London
Saturday, October 24, 2026
No menu items!
Homeதமிழ்நாடுஅரிசி விலை ரூ.100-ஐ தொடுமா? 2027-ல் என்ன நடக்கும்? சூப்பர் எல் நினோ பின்னணி! -...

அரிசி விலை ரூ.100-ஐ தொடுமா? 2027-ல் என்ன நடக்கும்? சூப்பர் எல் நினோ பின்னணி! – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img


இந்த வருடம் பருவமழை 12.6 சதவீதம் குறைவாகப் பெய்திருக்கிறது. இதுவே நம் எல்லோருக்கும் ஒரு பெரிய ஷாக்! இந்தப் பருவமழைக் குறைவு உணவு நெருக்கடியை ஏற்படுத்தாது. ஆனால், பசிபிக் பெருங்கடலில் உருவாகி வரும் ஒரு சூப்பர் எல் நினோ காரணமாக, குளிர்காலத்தின் தொடக்கத்தில் இந்தியா வெப்பமாகவும் வறண்டதாகவும், 2027-ல் கோடைக்காலம் கடும் வெப்பமாகவும் மாறக்கூடும்.

இதனால் நீர், பயிர்கள், மின்சாரம், சுகாதாரம் ஆகியவற்றில் புதிய நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும். இது உணவு நெருக்கடிக்கும் விலைவாசி உயர்வுக்கும் வழிவகுக்கும். எல் நினோவைக் கண்காணிக்கப் பயன்படுத்தப்படும் அளவுகோலான நினோ -3.4°C கடல் மேற்பரப்பு வெப்பநிலை மாறுபாடு, அக்டோபர் முதல் டிசம்பர் வரை சுமார் +3.7°C ஆக இருக்கும் என்றும், டிசம்பர் மாதத்தில் உச்சத்தை அடையும் என்றும் உலக வானிலை ஆய்வு நிறுவனம் (WMO) கணித்துள்ளது.

இது, 2015-16-ல் பதிவான அளவான +2.6°C-ஐ விடவும் அதிகமாகும். மேலும், 2027 ஜனவரி முதல் மார்ச் வரை வலுவான முதல் மிக வலுவான எல் நினோ நிகழ்வு நீடிக்கும் என்றும் எதிர்பார்க்கிறது. தமிழ்நாட்டில் மழைக் குறைவு இருக்காது என்று சொல்லப்பட்டாலும், அது நேர்மாறாக அதிக அளவு மழையாக மாறி, வெள்ளமாகவும், சூறாவளியாகவும் பயிர்களில் அழிவு களை ஏற்படுத்தி, உற்பத்தியைக் குறைக்கும் வாய்ப்புகள் அதிகம்.

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (IMD) அறிகுறிகள், வறண்ட மற்றும் வெப்பமான தொடக்கத்தையே சுட்டிக்காட்டுகின்றன. நாடு முழுவதற்குமான அக்டோபர் மாத மழைப் பொழிவு இயல்பைவிடக் குறைவாக, அதாவது நீண்ட கால சராசரியான (LPA) 85 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கும் என்றும், பெரும்பாலான பகுதிகளில் இயல்பைவிட அதிகமாக இருக்கும் என்றும் இது மின்சாரப் பயன்பாட்டை அதிக அளவில் கூட்டும். ஆனால், சோதனையாக பலவீனமான காற்று, மழை காரணமாக காற்றாலை மற்றும் நீர்மின் உற்பத்தி குறைந்துள்ளது.

வளர்ந்து வரும் சூப்பர் எல் நினோ, பயிர் உற்பத்தியைச் சீர்குலைத்து, விநியோகத்தைக் குறைத்து, இந்த ஆண்டின் பருவமழைக் காலத்திற்குப் பிறகும் உணவுப் பண வீக்கத்தைத் தூண்டும். இதனால் விநியோகப் பற்றாக்குறை ஏற்படக்கூடும். 2026ஆம் ஆண்டின் மழைக்காலப் பயிர்ச்சாகுபடிப் பருவமான ‘காரிஃப்’ பருவத்தில் (ஜூன் முதல் அக்டோபர் வரை), மானாவாரி மற்றும் அதிக நீர் தேவைப் படும் பயிர்களில் பாதிப்புகள் ஏற்படும் என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. உதாரணமாக, 

மக்காச்சோளம்: 28% முதல் 32% வரை;
கம்பு (பஜ்ரா): 24% முதல் 28% வரை;
பருத்தி: 14% முதல் 22% வரை;
நெல் / அரிசி: 12% முதல் 18% வரை;
பயறு வகைகள்: 14% முதல் 17% வரை… உற்பத்திச் சரிவு இருக்கலாமென எதிர்பார்க்கப்படுகிறது. மஞ்சள் உற்பத்தியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த காரிஃப் பருவ உற்பத்தி: 10% முதல் 12% வரை ஒட்டுமொத்தச் சரிவு இருக்குமெனக் கணிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் கடும் வறட்சி நிலவுகிறது. இந்த இரண்டு மாநிலங்களும் கொண்டைக் கடலைக்கு முக்கியமானவை. எண்ணெய் வித்துக்களின் உற்பத்தி குறித்தும் கவலைகள் எழுந்துள்ளன. சர்வதேசச் சந்தையில் அரிசி விலை, கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் கடுமையாக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் சிறந்த மற்றும் பிரீமியம் அரிசி வகைகளின் விலைகள் கணிசமாக உயர்ந்துள்ளன. இப்போதே நல்ல அரிசியை ஒரு கிலோவுக்கு ரூ.70 முதல் ரூ.82 வரை கொடுத்து வாங்குகிறோம். இது மேலும் உயரும். நாம் கணிசமான அளவில் அரிசி ஏற்றுமதி செய்துகொண்டிருக்கிறோம். உற்பத்திக் குறைவால் ஏற்றுமதியும் குறையும்.

பயிர்ப் பற்றாக்குறைக்குப் பயந்து, தனியார் வர்த்தகர்கள் மற்றும் ஆலைகள் குறைந்தபட்ச ஆதரவு விலையை (MSP) விட அதிகமாகக் கொடுத்து வாங்குகிறார்கள். இது சந்தை விலையை இன்னும் உயர்த்தும். தவிர, உணவுப் பதுக்கல்களும் வரும் மாதங்களில் நடைபெறலாம்.

விலைவாசிகள் கூடுவதால் உணவுப் பொருட்கள் பணவீக்கமும் கூடி வருகிறது. சமீபத்தில்தான் ரிசர்வ் வங்கி தனது ரெப்போ ரேட்டை 25 புள்ளிகள் சதவீதம் கூட்டியிருக்கிறது. பணவீக்கம் இன்னும் கூடினால், நிலைமைகள் மோசமானால் இன்னும் 1 முதல் 1.5 சதவீதம் வரை ரெப்போ ரேட்டைக் கூட்டும் வாய்ப்புகள் அதிகம். இது கடனுக்கான வட்டிகளை அதிக அளவில் பாதிக்கும். அது வாங்கும் சக்தியைப் பாதிக்கக்கூடும்.

மொத்தத்தில்… சாகுபடிச் சரிவு, விலைவாசி உயர்வு என மிரட்டும் ஒரு பெரிய சோதனைக் காலத்தை எதிர்கொள்ள மத்திய, மாநில அரசுகள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வ தோடு, நாமும் இதைச் சரியான விதத்தில் எதிர்கொண்டு தற்காத்துக் கொள்வது மிக மிக அவசியம்! 



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here