back to top
12.1 C
London
Thursday, October 22, 2026
No menu items!
Homeதமிழ்நாடுமகளிருக்கு தீபாவளி சர்ப்ரைஸ்....முன்கூட்டியே வரவு வைக்கப்படும் உரிமைத்தொகை? - Kumudam

மகளிருக்கு தீபாவளி சர்ப்ரைஸ்….முன்கூட்டியே வரவு வைக்கப்படும் உரிமைத்தொகை? – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img


தமிழ்நாட்டில் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டம், முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் தகுதியுள்ள பெண்களின் வங்கிக் கணக்கில் மாதந்தோறும் உதவித்தொகை செலுத்தப்பட்டு வருகிறது.

தொடர்ந்து, 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு ஆட்சிப் பொறுப்பேற்ற தமிழக வெற்றிக் கழக அரசும் இத்திட்டத்தைத் தொடர்வதாக அறிவித்துள்ளது. வழக்கமாக ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதி மகளிர் உரிமைத்தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நவம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் தீபாவளி பண்டிகை வருவதால், பண்டிகைச் செலவுகளைச் சமாளிக்கப் பயனாளிகளுக்கு முன்கூட்டியே உரிமைத்தொகையை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

1.31 கோடி பெண்களுக்கு முன்கூட்டியே பணம்?

தமிழ்நாட்டில் சுமார் 1.31 கோடி பயனாளிகளுக்கு வழங்கப்படும் மகளிர் உரிமைத்தொகையான ரூ.1,000, தீபாவளிக்கு முன்பாகவே, அதாவது நவம்பர் முதல் வாரத்திலேயே வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் மூலம் தீபாவளிக்கான ஆடை, உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்குப் பயனாளிகளுக்கு உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும், மகளிர் உரிமைத்தொகை முன்கூட்டியே வழங்கப்படுவது இல்லத்தரசிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here