Home அரசியல் தலைவர் ஆசியுடன் அரசியல் எண்ட்ரி…ஆட்டத்தை தொடங்கும் தனுஷ்…ஆட்டம் காணுமா தவெக? – Kumudam

தலைவர் ஆசியுடன் அரசியல் எண்ட்ரி…ஆட்டத்தை தொடங்கும் தனுஷ்…ஆட்டம் காணுமா தவெக? – Kumudam

0


தமிழ்நாட்டில் மாஸ் நடிகராக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிக்கொண்டு, அதன் மூலம் தவெக என்ற ஒரு கட்சியைத் தொடங்கி, 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, கட்சித் தொடங்கி இரண்டே ஆண்டுகளில் எல்லா திராவிடக் கட்சிகளையும் தோற்கடித்து, யாரும் எதிர்பாராத வெற்றியைப் பெற்று, இன்று தமிழ்நாட்டின் முதலமைச்சராக மாறியுள்ளார் விஜய்.

இவரின் வெற்றி எதிர்பாராத வெற்றியாக இருந்தாலும், இந்த வெற்றி சினிமாத்துறைக்கு புதிய பாய்ச்சலைக் கொடுத்துள்ளதாகவே கருதப்படுகிறது. விஜயகாந்திற்கு பிறகு அரசியலுக்குள் வந்தவர்கள் பெரியளவில் சோபிக்கவில்லை என்ற நிலைமை மாறி, இன்று ஆட்சிக் கட்டிலில் ஏறலாம் என்ற உத்வேகத்தைக் கொடுத்துள்ளதாகவே கருதப்படுகிறது.

இதனால், தற்போது விஜயை தொடர்ந்து அரசியலை நோக்கி முன்னணி சினிமா நடிகர்கள் படையெடுக்க ஆரம்பித்துள்ளார்களா? என்ற கேள்வி தமிழ்நாட்டு அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது. 

இத்தனை நாட்கள் கேட்பாரற்று கிடந்த ரசிகர் மன்றங்களை பலப்படுத்தல், கொடி அறிமுகம், அடிக்கடி ரசிகர் மன்ற மீட்டிங் என, தமிழ் சினிமா நடிகர்கள் பிசியாகி வருகின்றனர். 

அந்தவகையில், அரசியல் களத்தில் அடிக்கடி அடிப்படும் முக்கியப் பெயராக இருப்பது தனுஷ்.

அண்மையில்,  இவர் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்தது, கொடி அறிமுகப்படுத்தியது, அடுத்தடுத்த நிர்வாகிகள் நியமனம், என  தனுஷின் செயல்பாடுகள் அனைத்தும் அவர் அரசியலில் களமிறங்குவதற்கான திட்டத்துடன் காய்களை நகர்த்துவதை உறுதிப்படுத்துவதாக பலராலும் பேசப்பட்டு வருகிறது. தனுஷின் பேச்சுக்களும்ம அதையொட்டியே இருப்பதால், விரைவில் விஜய்க்கு போட்டியாக தனுஷ் களமிறங்குவார் என்றே கூறப்படுகிறது. 

இந்தச் சூழலில்தான், தனுஷ் தனது அரசியல் எண்ட்ரிக்கான முக்கிய விஷயத்தை செய்துள்ளார் என்கின்றனர் உள்விவரம் அறிந்தவர்கள். அதாவது. தேர்தல் கட்சியை தொடங்கி, அதனை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

‘தமிழக எழுச்சிக் கழகம்’ என்ற பெயரில் தேர்தல் ஆணையத்தில் கட்சியைப் பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. இது பற்றி தனுஷ் தரப்பிடம் கேட்டபோது, இதை மறுத்தனர்.

“தனுஷ் கட்சி தொடங்குவது உறுதிதான். ஆனாலும், கட்சியின் பெயரை இன்னும் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யவில்லை. விரைவில் இதுபற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். அதுவரை ரசிகர்கள் பொறுமை காக்க வேண்டும்” என்று கூறினர்.

இந்த நிலையில் தான், தனுஷிற்கு மிகப்பெரும் பலமாக ரஜினிகாந்த் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  ஏற்கனவே ரஜினி அரசியல் கட்சியை ஆரம்பிக்கத் திட்டமிட்ட நிலையில், கொரோனா உள்ளிட்ட காரணங்களால் அந்தத் திட்டத்தைக் கைவிட்டார். இதனால், ரஜினியின் ஆதரவுடன் தனுஷ் அரசியலில் குதிக்கத் திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

விஜய் ஆட்சியை பிடித்ததில் இருந்து, ரஜினியை தனிப்பட்ட முறையில்  டார்கெட் செய்து வருவதாகவும், அதனால் தான் ஜெயிலர் 2 ஆடியோ லாஞ்சிற்குக் கூட அனுமதி வழங்கப்படவில்லை என்றும், ரஜினியை எப்படியாவது ஓரங்கட்டியே ஆக வேண்டும் என்பதில் விஜய் உறுதியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

இதனால், வேறு வழி இல்லாமல், தன்னுடைய முன்னாள் மாப்பிள்ளையான தனுஷின் அரசியல் பயணத்திற்கு ரஜினி கிரீன் சிக்னல் கொடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதற்கிடையே, உள்ளாட்சித் தேர்தல், மக்களவைத் தேர்தலில் போட்டியிடாமல், நேரடியாக 2031ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் களமிறங்க தனுஷ் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், தனது மாமனாரான ரஜினிகாந்தின் உதவியோடு அரசியலுக்கு வரவிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில், இது அடுத்த கட்டத்தை எப்படி நோக்கிச் செல்லும் என்பது குறித்து அனைவரது மத்தியிலும் கேள்வி எழுந்துள்ளது.

எனவே, அடுத்தடுத்து அரசியல் களத்தில் என்னவெல்லாம் நடக்கப்போகிறது? ரஜினியின் உதவியோடு தனுஷ் அரசியலுக்கு வரப்போகிறாரா? இவர் களத்தில் இறங்கினால் விஜய்யின் அரசியல் பயணம் என்னவாகும்? என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version