Home அரசியல் “வாயைத் திறந்தாலே பொய்தான்!”.. கீர்த்தனாவைக் கிழித்தெடுத்த பிரியா! – Kumudam

“வாயைத் திறந்தாலே பொய்தான்!”.. கீர்த்தனாவைக் கிழித்தெடுத்த பிரியா! – Kumudam

0


சென்னை கிழக்கு மாவட்டக் கழக மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணி சார்பில் துறைமுகம் மேற்குப் பகுதியில் முப்பெரும் விழா நேற்று (அக்.,-7) நடைபெற்றது. இந்த விழாவில்  திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்பி, கலாநிதி வீராசாமி, முன்னாள் எம்பி எம்.எம்.அப்துல்லா, சென்னை மேயர் பிரியா ராஜன், முன்னாள் அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

”வாயைத் திறந்தாலே பொய்தான்” அமைச்சர் கீர்த்தனாவை விமர்சித்த மேயர் பிரியா:

இந்நிகழ்ச்சியில் பேசிய மேயர் பிரியா இந்த நிகழ்ச்சியில் பேசிய மேயர் பிரியா ராஜன், திமுகவைச் சேர்ந்தவர்கள் மேயர், அமைச்சர் உள்ளிட்ட பொறுப்புகளை ஏற்றுக்கொண்டபோது, கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்தப் போது, “உங்களுக்கு கிடைத்திருப்பது பதவி கிடையாது; பொறுப்பு. அந்த பொறுப்பை உணர்ந்து ஒவ்வொரு நாளும் செயல்பட வேண்டும்” என அறிவுறுத்தியதாக மேயர் பிரியா தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “ஆனால் இன்றைக்கு தமிழக வெற்றிக் கழக அரசில் உள்ள ஒவ்வொரு அமைச்சர்களும் தங்களது பொறுப்பை உணராமல் ரீல்ஸ் போட்டு வருகின்றனர். தவெக ஆட்சி அமைந்து முதல் சட்டசபைக் கூட்டத்தொடர் நடைபெற்ற போது அதில் ஆளுங்கட்சியில் உள்ள அமைச்சர்களே அதிகப்படியான பொய்களை பேசிவிட்டு பின்னர் அதனை சபாநாயகர் தவறான தகவலை  பேசிவிட்டார்கள் என்று பேசியதை எல்லாம் அவை குறிப்பிலிருந்து நீக்கினார்.

இது குறித்து பேசிய மேயர் பிரியா அதிலும் கீர்த்தனா என்று ஒரு அமைச்சர் இருக்கிறார். “அவர் வாயைத் திறந்தாலே பொய்தான்”. சட்டமன்றத்தில் ஒரு விஷயத்தை சொல்லிவிட்டு, பின்னர் அதனை அவைக் குறிப்பில் இருந்து நீக்கிவிடுங்கள் என்று கூறுகிறார். இந்த மாதிரிதான் இன்று ஆட்சியில் இருப்பவர்கள் இருக்கிறார்கள்” என விமர்சித்தார்.

தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் உள்ள அமைச்சர்கள் தங்களுக்கான பொறுப்பை உணராமல் செயல்பட்டு வருவதாகவும், ரீல்ஸ் போடுவதிலேயே கவனம் செலுத்துவதாகவும் சென்னை மேயர் பிரியா ராஜன் கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும், திமுக ஆட்சியில் பெண்களுக்காக செயல்படுத்தப்பட்ட திட்டங்களையும் அவர் பட்டியலிட்டுள்ளார்.

செவிலியர்கள் போராட்டம் குறித்து விமர்சனம்;

சென்னையில் நடைபெற்ற செவிலியர்கள் போராட்டத்தையும் மேயர் பிரியா ராஜன் தனது பேச்சில் குறிப்பிட்டார். “நம் வீட்டுப் பிள்ளைகள் நிறைய பேர் செவிலியர்களாக உள்ளனர். அவர்களின் சேவை மிகவும் மதிக்கக்கூடியது. குறிப்பாக 18 முதல் 30 வயதுக்குள் இருப்பவர்கள்தான் அதிகம் உள்ளனர். அந்தப் பெண்களை எந்த அளவுக்கு துன்புறுத்த முடியுமோ அந்த அளவுக்கு துன்புறுத்தி போராட்டத்தில் இருந்து வெளியேற்றி உள்ளார்கள்” என அவர் கூறினார்.

மேலும், “இது எந்த வகையில் ஜனநாயகமாக இருக்க முடியும்? நமக்கு உடலில் ஏதாவது பிரச்சனை என்றால் அதை சரி செய்யும் பணியில் இருப்பவர்கள் செவிலியர்கள். அவர்களை அடித்து விரட்டுவது எந்த வகையில் நியாயம்? இதே நிலை தொடர்ந்தால் பெண்களுக்கான பாதுகாப்பு எங்கே இருக்கும்?” என்றும் மேயர் பிரியா கேள்வி எழுப்பினார்.

“திமுக இல்லையென்றால் பெண்கள் முன்னேறியிருக்க முடியாது!”;

பெண்களின் முன்னேற்றத்திற்காக திமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும் மேயர் பிரியா ராஜன் தெரிவித்தார். “மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்றபோது பெண்களுக்கான விடியல் பயணம், புதுமைப்பெண் திட்டம், மகளிர் உரிமைத் திட்டம் என பல திட்டங்களை கொண்டு வந்தார்.

திமுக இல்லை என்றால் இன்றைக்கு பெண்கள் சமையலறையில் தோசை கரண்டி அல்லது சாம்பார் கரண்டியை பிடித்துக்கொண்டிருக்கும் நிலையில்தான் இருந்திருப்பார்கள். இப்படி மேடையில் ஏறி பேசும் நிலை வந்திருக்காது. அந்த மாற்றத்தை திமுக தலைவர் ஸ்டாலின் கொண்டு வந்துள்ளார்” என மேயர் பிரியா ராஜன் தெரிவித்தார்.

தவெக ஆட்சியின் செயல்பாடுகள், அமைச்சர்களின் அணுகுமுறை மற்றும் பெண்கள் பாதுகாப்பு விவகாரம் குறித்து திமுக தரப்பில் தொடர்ந்து விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், மேயர் பிரியாவின் இந்தப் பேச்சும் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

 



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version