back to top
17.6 C
London
Thursday, October 1, 2026
No menu items!
Homeதமிழ்நாடுசிறுமிகளை சீரழித்த அரக்கன்... வீரமணி மீது பாய்ந்த குண்டாஸ்! - Kumudam

சிறுமிகளை சீரழித்த அரக்கன்… வீரமணி மீது பாய்ந்த குண்டாஸ்! – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img


தமிழ்நாட்டின் தொழில்துறையில் அறியப்பட்ட ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஆர். வீரமணி, சிறுமி பாலியல் வன்கொடுமை தொடர்பான போக்ஸோ வழக்கில் கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் வீரமணிக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிம்ஹன் ஆகியோரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தற்போது மூவர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகர காவல் ஆணையர் அமல்ராஜின் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பென் டிரைவ் மூலம் தொடங்கிய விசாரணை

2025ஆம் ஆண்டு அக்டோபர் மாத தொடக்கத்தில், சிறுமி ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுவது தொடர்பான வீடியோ பதிவுகள் அடங்கிய பென் டிரைவ் ஒன்று, விபச்சார தடுப்புப் பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

முதற்கட்ட விசாரணையில் பாதிக்கப்பட்ட சிறுமியை அடையாளம் காண முடியாத நிலையில், வழக்கு முடிப்பு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த அறிக்கையை சிறப்பு போக்ஸோ நீதிமன்றம் ஏற்க மறுத்து, வழக்கை தொடர்ந்து விசாரிக்க உத்தரவிட்டது.
இதையடுத்து நடைபெற்ற தீவிர விசாரணையில் பாதிக்கப்பட்ட சிறுமி அடையாளம் காணப்பட்டதாகவும், அதன் தொடர்ச்சியாக வீரமணி உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்தடுத்து எழுந்த புகார்கள்

முதல் கைது நடவடிக்கைக்குப் பின்னர், வீரமணிக்கு எதிராக மேலும் சில புகார்கள் வந்தன. 16 வயது சிறுமிக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதாகக் கூறி அழைத்துச் சென்று பாலியல் துன்புறுத்தல் செய்ததாகவும், இதனால் அந்த சிறுமி 2004ஆம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டதாகவும் அவரது தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் மற்றொரு போக்ஸோ வழக்கு பதிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காரில் வைத்து சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக மற்றொரு புகாரும் பதிவு செய்யப்பட்டது.

இதனிடையே, வீரமணியின் முன்னாள் ஊழியர் கணேசனின் செல்போனில் சிறுமி தொடர்பான வீடியோ பதிவுகள் இருந்ததாகக் கூறி அவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

குண்டர் சட்டத்தில் நடவடிக்கை

வழக்கின் தீவிரத்தன்மை மற்றும் தொடர்ந்து எழுந்த புகார்களின் அடிப்படையில், ஜெம் வீரமணி, சாந்தி மற்றும் மகேந்திர சிம்ஹன் ஆகிய மூவர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகர காவல் ஆணையர் அமல்ராஜின் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த வழக்கில், சிறுமிகளை குறிவைத்து பல ஆண்டுகளாக பாலியல் குற்றங்கள் நடைபெற்றிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், சென்னை உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, கூடுதல் காவல்துறை தலைமை இயக்குநர் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், குற்றச்சாட்டுகள் நீதிமன்ற விசாரணையில் நிரூபிக்கப்பட வேண்டியவை என்பது குறிப்பிடத்தக்கது.



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here