back to top
13.8 C
London
Thursday, October 1, 2026
No menu items!
Homeஅரசியல்"அரசியலை விட்டுட்டு சினிமாவுக்கே வாங்க.." – சீமானுக்கு அட்வைஸ் செய்த SK! - Kumudam

“அரசியலை விட்டுட்டு சினிமாவுக்கே வாங்க..” – சீமானுக்கு அட்வைஸ் செய்த SK! – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img


அரசியல் மேடையில் அனல் பறக்கப் பேசும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இப்போது சினிமாவிலும் கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறார். இதற்கிடையே, “நீங்கள் வந்து நடிங்க.. மக்கள் உங்களைத் தேடி வரட்டும்” என்று நடிகர் சிவகார்த்திகேயன் சொன்னதாகக் கூறிய சீமான், “நடித்தால்தான் ஓட்டுப் போடுவீர்கள் என்றால், நான் நடிக்கப் போகிறேன்” என்று கிண்டலாகப் பேசியிருக்கிறார். அரசியலில் கிடைக்காத வரவேற்பை சினிமாவில் தேடுகிறாரா சீமான் என்ற கேள்வியையும் இந்தப் பேச்சு எழுப்பியிருக்கிறது. 

அரசியலில் தோல்வி… சினிமாவில் புதிய இன்னிங்ஸ்!

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி ஒரு தொகுதியில்கூட டெபாசிட் பெறவில்லை. கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் தேர்தலில் தோல்வியைச் சந்தித்தார். தேர்தல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், முடிவுகள் கட்சிக்குப் பின்னடைவாக அமைந்தன.

இந்தச் சூழலில், சீமான் மீண்டும் திரைத்துறையில் கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறார். சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் சேயோன் படத்திலும், சாந்தனு நடிக்கும் மற்றொரு படத்திலும் சீமான் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

அரசியல் மேடைகளில் வசனங்களுக்குப் பஞ்சமில்லாத சீமானுக்கு, இப்போது சினிமாவிலும் வசனம் பேச வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆனால், அங்கேயும் அரசியல் பஞ்ச் டயலாக்குகளைப் பேசுவாரா என்பதுதான் ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

SK சொன்ன அட்வைஸ்… சீமான் கொடுத்த ரியாக்‌ஷன்!

மதுராந்தகம் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்துப் பிரச்சாரம் செய்த சீமான், தனது சினிமா அனுபவம் குறித்துப் பேசினார். அப்போது, “இப்போதெல்லாம் சினிமாவில் நடிக்கச் சென்றால் நிறைய காசு கொடுக்கிறார்கள். நல்லாத்தான் இருக்கு. தம்பி சிவகார்த்திகேயன் கூட, ‘நீங்கள் வந்து நடிங்க.. மக்கள் உங்களைத் தேடி வரட்டும்’ என்று சொன்னார்” எனத் தெரிவித்தார்.

மேலும், “சரி, நான் சினிமாவுக்கே போறேன். மேடையில் பேசிவிட்டு கீழே இறங்கினால், ‘மாயாண்டி குடும்பத்தார் படத்தில் நல்லா நடிச்சிருக்கீங்க’ என்று சொல்கிறார்கள். நடித்தால்தான் ஓட்டுப் போடுவீர்கள் என்றால், நான் நடிக்கப் போகிறேன்” என்றும் கூறினார்.

மக்களுக்காக மேடையில் பேசுவதற்கும், திரையில் நடிப்பதற்கும் இடையே இவ்வளவு வித்தியாசமா என்ற ரீதியில் சீமானின் பேச்சு அமைந்தது. அரசியலில் மக்கள் தன்னைத் தேடி வரவில்லை என்ற ஆதங்கமா, அல்லது சினிமாவில் கிடைக்கும் வரவேற்பைப் பற்றிய மகிழ்ச்சியா என்பது அவருக்கே வெளிச்சம். 

தவெக ஆட்சிக்கும் சீமானின் கமெண்ட்!

தொடர்ந்து தமிழ்நாடு அரசியல் சூழல் குறித்துப் பேசிய சீமான், தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி குறித்தும் விமர்சனங்களை முன்வைத்தார். “தவெகவின் நான்கு மாத ஆட்சியையே தாங்க முடியவில்லை. தவெகவுக்கு ஆதரவு கொடுத்தவர்களே இப்போது மன்னித்துவிடுங்கள் என்று சொல்லும் நிலை வந்திருக்கிறது. இதைத்தானே அப்போதே கூறினேன்” என்று தெரிவித்தார்.

மேலும், திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் அரசியல் நிலைப்பாடுகள், விஜய் போட்டியிட்ட தொகுதிகள், ஆளுநர் ஆட்சி குறித்த விவாதங்கள் எனப் பல விஷயங்களையும் தனது பாணியில் விமர்சித்தார். தன்னை முதலமைச்சராக்குவதாகவும், கட்சிக்கு நிதியளிப்பதாகவும் கூறி சிலர் ஆசை காட்டியதாகத் தெரிவித்த சீமான், பணம்தான் முக்கியம் என்றால் தன்னிடம் எவ்வளவு பேர் பேரம் பேசியிருப்பார்கள் என்றும் கேள்வி எழுப்பினார்.

அரசியல் மேடையா… சினிமா செட்டா?

அரசியலில் மக்களின் ஆதரவைப் பெறுவதற்காகப் பல ஆண்டுகளாகப் பேசி வரும் சீமான், இப்போது சினிமாவிலும் தனது அடுத்த அத்தியாயத்தைத் தொடங்கியிருக்கிறார். ஒருபக்கம் தேர்தல் தோல்வி, மறுபக்கம் புதிய திரைப்பட வாய்ப்புகள் என அவரது பயணம் புதிய திசையில் நகர்கிறது.

சிவகார்த்திகேயன் சொன்னதாக சீமான் குறிப்பிட்ட அந்த அட்வைஸ், வெறும் நகைச்சுவைக்காகச் சொல்லப்பட்டதா அல்லது உண்மையிலேயே சினிமாவில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்ற ஆலோசனையா என்பது தெளிவாகத் தெரியவில்லை. 

அரசியலில் பேசினால் வாக்குகள் விழுமா… சினிமாவில் நடித்தால் விசில் பறக்குமா? சீமானின் அடுத்த இன்னிங்ஸில் தெரிந்துவிடும். 



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here