back to top
16.4 C
London
Wednesday, September 23, 2026
No menu items!
Homeஅரசியல்சமூக நீதி விடுதியில் BEEF வேண்டுமா? வேண்டாமா? வன்னி அரசால் பூகம்பமான விவாதம் ! -...

சமூக நீதி விடுதியில் BEEF வேண்டுமா? வேண்டாமா? வன்னி அரசால் பூகம்பமான விவாதம் ! – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img



சென்னை சைதாப்பேட்டை எம்.சி. ராஜா சமூக நீதி மாணவர் விடுதியில் ஆய்வு மேற்கொண்ட சமூக நீதித் துறை அமைச்சர் வன்னி அரசு, மாணவர்களின் உணவு தொடர்பான கோரிக்கைகள் குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என தெரிவித்திருப்பது, தற்போது தமிழ்நாடு அரசியல் வட்டாரங்களில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு முறைகள், தரம் மற்றும் மெனு மாற்றங்கள் குறித்து ஆய்வு செய்த அமைச்சர், தற்போது விடுதிகளில் சிக்கன், மட்டன் உள்ளிட்ட உணவுகள் வழங்கப்பட்டு வருவதாகவும், சில மாணவர்கள் மாட்டிறைச்சியையும் உணவுப் பட்டியலில் சேர்க்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளதாகவும் கூறினார்.

இந்த கோரிக்கை தொடர்பாக மாணவர்கள், அதிகாரிகள் என அனைத்து தரப்பினரிடமும் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

முதலமைச்சர் விஜய் ஆய்வுக்குப் பிறகு தொடரும் நடவடிக்கைகள் :

எம்.சி. ராஜா சமூக நீதி மாணவர் விடுதியில் கடந்த காலங்களில் மாணவர்கள் குடிநீர் வசதி, உணவின் தரம், ஊழியர்கள் பிரச்சனை, விளையாட்டு மைதானம் உள்ளிட்ட பல்வேறு குறைகளை முன்வைத்திருந்தனர்.

அதனைத் தொடர்ந்து விடுதி நிர்வாகம் சார்பில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. உணவு பட்டியலில் மாற்றங்கள் செய்யப்பட்டதுடன், மாணவர்களின் பயன்பாட்டுக்காக விளையாட்டு மைதானம் திறக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது அமைச்சர் வன்னி அரசு மேற்கொண்ட ஆய்வும், மாணவர்களின் புதிய கோரிக்கைகள் குறித்த அவரது கருத்தும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மீது கவனத்தை திருப்பியுள்ளது.

மாணவர்களின் உணவு உரிமையா? அரசின் கொள்கை முடிவா? 

மாணவர்களின் விருப்பம் மற்றும் தேவைகளை கருத்தில் கொண்டு உணவு மெனுவில் மாற்றங்கள் செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

முன்னதாக உப்புமா, கிச்சடி போன்ற சில உணவு வகைகளுக்கு பதிலாக இட்லி, தோசை உள்ளிட்ட மாணவர்கள் விரும்பும் உணவுகள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், திங்கட்கிழமைகளில் சிக்கன் பிரியாணி வழங்கும் நடைமுறையும் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில், சில மாணவர்கள் முன்வைத்துள்ள மாட்டிறைச்சி கோரிக்கை, உணவு தேர்வு உரிமை, அரசின் முடிவு, சமூக உணர்வுகள் என பல்வேறு கோணங்களில் விவாதிக்கப்படும் சூழலை உருவாக்கியுள்ளது.

கூட்டணிக்குள் விவாதத்தை ஏற்படுத்துமா?

மாட்டிறைச்சி விவகாரம் தொடர்பாக அரசியல் கட்சிகளின் நிலைப்பாடுகள் மாறுபட்டு இருப்பதால், இந்த விவகாரம் தமிழ்நாடு அரசியல் ரீதியாகவும் கவனம் பெறக்கூடும் என பார்க்கப்படுகிறது.

மாணவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொள்வது தொடர்பாக முடிவு எடுக்கப்பட்டால், அது சமூக நீதி, உணவு உரிமை உள்ளிட்ட பல்வேறு விவாதங்களை முன்வைக்கும் என்று சில அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

அதே நேரத்தில், இதுபோன்ற உணவு தொடர்பான முடிவுகள் பல்வேறு சமூகக் கருத்துகளை கருத்தில் கொண்டு எடுக்கப்பட வேண்டியவை என்றும் அரசியல் வட்டாரங்களில் கருத்துகள் நிலவுகின்றன.

“அவரவர் உணவு தேர்வு உரிமை” Vs “அரசின் முடிவு” – தொடரும் விவாதம் :

பீப் உண்பது தனிநபரின் உணவு தேர்வு உரிமை என்ற கருத்தும், மாணவர்கள் கோரிக்கை வைப்பதால் அரசு விடுதிகளில் அதை வழங்குவது தொடர்பான நிர்வாக முடிவு வேறு விஷயம் என்ற பார்வையும் தற்போது பேசப்பட்டு வருகிறது.

இதனால், இந்த விவகாரம் உணவு உரிமை மட்டுமின்றி, அரசின் நிர்வாக முடிவு, சமூக உணர்வுகள் மற்றும் அரசியல் சமநிலை ஆகியவற்றையும் உள்ளடக்கிய விவாதமாக மாறும் வாய்ப்பு இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், இந்த கோரிக்கையில் விஜய்க்கு  உடன்பாடு உள்ளதா இல்லையா என்பதை அவரைக் கேட்பதற்கு பதிலாக ரத்தன் பண்டிட்டிடம் கேட்டால் தெரிந்து விடும் என்று சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கமெண்டடித்து வருகின்றனர் .

மாணவர்களின் கோரிக்கை, நிர்வாக முடிவு, சமூக கருத்துகள் என பல்வேறு அம்சங்களை சமநிலைப்படுத்தி தமிழ்நாடு அரசு எடுக்கும் முடிவு என்ன என்பதே அரசியல் வட்டாரங்களில் அடுத்தகட்ட எதிர்பார்ப்பாக உள்ளது.



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here