Home அரசியல் “வி.எஸ். பாபு கவலைக்கிடம்?” மருத்துவமனை அறிக்கை சொல்லப் போவது என்ன? – Kumudam

“வி.எஸ். பாபு கவலைக்கிடம்?” மருத்துவமனை அறிக்கை சொல்லப் போவது என்ன? – Kumudam

0



சென்னை கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது உடல்நிலை குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த சில நாட்களாக உடல்நலப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் வி.எஸ். பாபுவின் உடல்நிலை தற்போது கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மருத்துவர்கள் தொடர்ந்து அவரை தீவிரமாக கண்காணித்து வருவதாக கூறப்படுகிறது.

மூச்சுத்திணறல் உள்ளிட்ட பிரச்சினைகள் காரணமாக அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில், வி.எஸ். பாபுவின் உடல்நிலை குறித்து அவரது குடும்பத்தினரிடம் அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், மருத்துவமனைக்கு சென்று மருத்துவர்களிடமும் சிகிச்சை நிலவரம் குறித்து கேட்டறிந்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே, வி.எஸ். பாபுவின் தற்போதைய உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று காலை மருத்துவமனை தரப்பில் அடுத்த கட்ட அறிக்கை வெளியிட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கின்றன. 

வி.எஸ். பாபுவின் உடல்நிலை குறித்து தகவல் வெளியானதை தொடர்ந்து, அவரது ஆதரவாளர்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version