back to top
16.4 C
London
Wednesday, September 23, 2026
No menu items!
Homeஅரசியல்திமுகவில் சீனியர்களுக்கு ஷாக்.. எ.வ.வேலு முதல் ரகுபதி வரை அடுத்த மூவ் என்ன? - Kumudam

திமுகவில் சீனியர்களுக்கு ஷாக்.. எ.வ.வேலு முதல் ரகுபதி வரை அடுத்த மூவ் என்ன? – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img



திமுகவில் அமைப்பு ரீதியான மாற்றங்களை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தற்போது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளன. தேர்தல் தோல்விக்குப் பிறகு கட்சியை மீண்டும் வலுப்படுத்தும் நோக்கில், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளில் வயது வரம்பு மற்றும் பதவிக்காலம் தொடர்பாக புதிய கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுதால் மாஜி சீனியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதன்படி, 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த நிர்வாகிகள் பலர் மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து மாற்றப்படக்கூடிய சூழல் உருவாகியுள்ளது. எ.வ.வேலு, சாத்தூர் ராமச்சந்திரன், ரகுபதி, ராணிப்பேட்டை காந்தி, அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பல சீனியர் நிர்வாகிகளின் பதவிகளுக்கு இந்த விதிமுறை சவாலாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே, திமுகவில் மாவட்டச் செயலாளர்களுக்கு 70 வயது வரம்பு மற்றும் அதிகபட்சம் 2 அல்லது 3 முறை மட்டுமே பதவிக்காலம் என்ற புதிய உள்கட்சி விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், 76 வயதாகும் ரகுபதி போன்ற மூத்த செயலாளர்களின் பதவிகள் குறித்த மாற்றங்கள் கட்சியில் விவாதிக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள மூத்த நிர்வாகிகளில் எ.வ.வேலு சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக திமுகவில் மாவட்டச் செயலாளர் பொறுப்பை வகித்து வருகிறார். அவரைத் தொடர்ந்து, மதுரை மாநகர் மாவட்டச் செயலாளராக உள்ள கோ.தளபதி சுமார் 8 ஆண்டுகளாகவும், அனிதா ராதாகிருஷ்ணன் சுமார் 16 ஆண்டுகளுக்கும் மேலாகவும் மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து வருகின்றனர்.

மேலும், புதுக்கோட்டை தெற்கு மாவட்டச் செயலாளராக உள்ள ரகுபதியும் பல ஆண்டுகளாக மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து வருகிறார். இந்நிலையில், இவர்கள் எம்எல்ஏக்களாகவும், கட்சியில் நீண்ட கால அனுபவம் கொண்ட மூத்த நிர்வாகிகளாகவும் இருந்தபோதிலும், வயது வரம்பு காரணமாக மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து மாற்றப்படக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் முக்கிய விவாதமாகியுள்ளது.

பல ஆண்டுகளாக கட்சியின் மாவட்ட அமைப்புகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மூத்த நிர்வாகிகளுக்கு பதிலாக, இளைஞர்களுக்கு முக்கியத்துவம் அளித்து புதிய தலைமுறையை முன்னிறுத்த திமுக தலைமை திட்டமிட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், இந்த நடவடிக்கையின் பின்னணியில் வயது வரம்பு மட்டும்தானா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. நீண்ட காலமாக ஒரே பொறுப்பில் இருக்கும் நிர்வாகிகளை மாற்றுவதன் மூலம், மாவட்ட அளவில் புதிய நிர்வாக கட்டமைப்பை உருவாக்கவும், கட்சிக்குள் உருவாகியுள்ள அதிகார மையங்களை கட்டுப்படுத்தவும் திமுக தலைமை முயற்சி செய்கிறதா என்ற விவாதமும் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

குறிப்பாக, தேர்தல் தோல்விக்குப் பிறகு கட்சியின் செயல்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் திமுக உள்ளது. மாவட்ட அளவில் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் இளைஞர்களை ஒருங்கிணைத்து எதிர்வரும் தேர்தல் பணிகளை வேகப்படுத்த புதிய முகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேநேரத்தில், அமைச்சர்கள் மற்றும் சீனியர் நிர்வாகிகளின் பதவிகள் குறித்தும் கட்சிக்குள் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. வயது வரம்பு மற்றும் அமைப்பு மாற்றம் என்ற அடிப்படையில் அடுத்தகட்டமாக அமைச்சரவை அல்லது கட்சியின் முக்கிய பொறுப்புகளிலும் மாற்றங்கள் வருமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், மூத்த நிர்வாகிகளின் பதவிகள் மாற்றப்படுவதற்கான முக்கிய காரணமாக அவர்களின் வயது மூப்பே பார்க்கப்படுவதாக அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது. கட்சிப் பொறுப்புகளில் 70 வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாலும், அதே நேரத்தில் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்ற நோக்கத்திலும் திமுக தலைமை இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், நீண்ட காலமாக ஒரே பொறுப்பில் இருக்கும் மூத்த நிர்வாகிகளுக்கு பதிலாக இளம் தலைமுறையினரை மாவட்ட அளவில் முன்னிறுத்துவதன் மூலம் கட்சிக்கு புதிய வேகத்தை ஏற்படுத்தவும் தலைமை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் அடிமட்டத்தில் கட்சியை வலுப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களில் சிறப்பாக செயல்படுவதற்கான கட்டமைப்பை உருவாக்கும் முயற்சியாகவும் இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது.

எனினும், கட்சியில் நீண்ட காலமாக செல்வாக்குடன் இருந்த சீனியர் நிர்வாகிகளின் அடுத்தகட்ட அரசியல் நகர்வு என்னவாக இருக்கும் என்பதே தற்போது முக்கிய கேள்வியாகியுள்ளது. மாவட்டச் செயலாளர் பதவி மாற்றப்பட்டாலும், அவர்களுக்கு கட்சிக்குள் வேறு முக்கிய பொறுப்புகள் வழங்கப்படுமா அல்லது முற்றிலும் புதிய தலைமுறைக்கு வழிவிடப்படுமா என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.

கட்சியை முழுமையாக மறுசீரமைத்து புதிய தலைமுறையினரை முன்னிறுத்தும் முயற்சியா, அல்லது தேர்தல் தோல்விக்குப் பிறகு அமைப்புக்குள் அதிரடி மாற்றங்களை கொண்டு வருவதன் மூலம் அடுத்த தேர்தலில் ஆட்சியை பிடிக்கும் நோக்கமா? என்பதே தற்போது அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது.



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here