தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (ஆகஸ்ட் 17) மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் பேசிய தவெக அமைச்சர் ரஞ்சித்குமார், முன்னாள் முதலமைச்சர் மறைந்த கலைஞர் கருணாநிதியின் பெயரை குறிப்பிட்டு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
அமைச்சரின் பேச்சுக்கு திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததுடன், கண்டனமும் தெரிவித்தனர். இதனால் அவையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து, முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவிப்புகளை வெளியிடும்போது இந்த விவகாரம் குறித்து பேசினார். அப்போது, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பெயரை அமைச்சர் குறிப்பிட்டது தவறு எனத் தெரிவித்தார்.
மேலும், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை நோக்கி பேசிய விஜய், அமைச்சர் சார்பில் தான் மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாக தெரிவித்தார்.
அரசியல் தலைவர்களின் பெயர்களை குறிப்பிட்டு அவையில் நடைபெற்ற விவாதம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், முதலமைச்சர் விஜய்யின் இந்த மன்னிப்பு கோரல் தற்போது கவனம் பெற்றுள்ளது.





