Home சினிமா இவ்வளவு ஆச்சரியங்களா… The Odyssey பற்றி தெரியாத 10 சுவாரஸ்ய தகவல்கள்! – Kumudam

இவ்வளவு ஆச்சரியங்களா… The Odyssey பற்றி தெரியாத 10 சுவாரஸ்ய தகவல்கள்! – Kumudam

0


ஆஸ்கர் விருதுக்கான முக்கிய போட்டியாளர்களில் ஒன்றாகக் கருதப்படும் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனின் பிரம்மாண்ட படைப்பு ‘The Odyssey’ உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஹோமரின் புகழ்பெற்ற காவியத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான இந்த திரைப்படம், தயாரிப்பு அளவிலும் தொழில்நுட்பத்திலும் புதிய சாதனைகளைப் படைத்துள்ளது. 

இந்த நிலையில், இப்படத்தைப் பற்றிய 10 சுவாரஸ்ய தகவல்கள் இதோ…

ஆறு நாடுகளில் நடைபெற்ற படப்பிடிப்பு

பண்டைய கிரேக்க உலகை இயல்பாகக் காட்டுவதற்காக மொராக்கோ, கிரீஸ், இத்தாலி, ஐஸ்லாந்து, ஸ்காட்லாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய ஆறு நாடுகளில் படப்பிடிப்பு நடைபெற்றது. ட்ராய் கடற்கரை, சைக்க்ளாப்ஸ் குகை, ஹேடீஸின் பாதாள உலகம், கலிப்சோ மற்றும் சிர்சேயின் தீவுகள் உள்ளிட்ட பல இடங்கள் உண்மையான லொகேஷன்களில் படமாக்கப்பட்டன.

2.1 மில்லியன் அடி IMAX ஃபிலிம்

நோலன் தனது முழுப் படத்தையும் IMAX கேமராவில் படமாக்க வேண்டும் என்ற நீண்டநாள் கனவை இந்தப் படத்தின் மூலம் நிறைவேற்றியுள்ளார். இதற்காக 2.1 மில்லியன் அடி IMAX ஃபிலிம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது டொராண்டோவிலிருந்து நியூயார்க் வரை உள்ள தூரத்தைவிட நீளமானது என கூறப்படுகிறது.

கதை கேட்காமலே சம்மதித்த மேட் டேமன்

நாயகன் மேட் டேமன், படம் என்ன என்பது கூட தெரியாமல் நோலன் கூறிய அழைப்பை ஏற்றுக்கொண்டார். பின்னர் நோலன் “The Odyssey” என்ற இரண்டு வார்த்தைகளை மட்டுமே கூறியதும், உடனே படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

நெசவு கற்ற ஆன் ஹாதவே

ஒடிசியஸின் மனைவி பெனலோப் கதாபாத்திரத்தில் நடித்த ஆன் ஹாதவே, அந்தக் கதாபாத்திரத்தை உண்மையாக வெளிப்படுத்துவதற்காக பண்டைய கால நெசவு முறையை சிறப்பு பயிற்சியாளரிடம் கற்றுக்கொண்டார்.

தினமும் 45 நிமிட மலை ஏற்றம்

இத்தாலியில் உள்ள பழமையான கோட்டையில் படப்பிடிப்பு நடைபெற்றபோது, நடிகர் ராபர்ட் பட்டின்சன் உள்ளிட்ட படக்குழுவினர் முழு உடையணிந்து தினமும் 45 நிமிடங்கள் மலை ஏறி படப்பிடிப்பு தளத்தை அடைந்ததாக கூறப்படுகிறது.

உண்மையான வைக்கிங் கப்பல்

ஒடிசியஸின் கப்பலாக, நார்வேயில் உருவாக்கப்பட்ட ‘Draken’ என்ற உண்மையான கடல் பயண வைக்கிங் கப்பல் பயன்படுத்தப்பட்டது. அட்லாண்டிக் பெருங்கடலை இருமுறை கடந்த அனுபவமுள்ள இந்தக் கப்பலுடன், அதன் உண்மையான மாலுமிகளும் படப்பிடிப்பில் பங்கேற்றனர்.

5,300 ஆடைகள்… 500-க்கும் மேற்பட்ட தொழில்நுட்பக் குழு

இந்தப் படத்திற்காக 5,300-க்கும் மேற்பட்ட ஆடைகள் தயாரிக்கப்பட்டன. ஆடை வடிவமைப்பாளர் எலன் மிரோஜ்னிக் தலைமையில், 500-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் இந்தப் பணியில் ஈடுபட்டனர்.

சைக்க்ளாப்ஸ் கதாபாத்திரத்திற்கு பிரம்மாண்ட முயற்சி

புராணங்களில் வரும் சைக்க்ளாப்ஸ் கதாபாத்திரத்தை உருவாக்க பல தொழில்நுட்பக் குழுக்கள் இணைந்து பணியாற்றின. அதன் உடல் அசைவுகளுக்கும் நடிப்பிற்கும் டோனி விருது பெற்ற நடிகர் பில் இர்வின் முக்கிய பங்களிப்பு வழங்கியுள்ளார்.

IMAX முன்னோடிக்கு சமர்ப்பணம்

இந்தப் படம், IMAX தொழில்நுட்ப வளர்ச்சிக்காக பெரும் பங்களிப்பு செய்த மறைந்த திரைப்பட நிர்வாகி டேவிட் கீக்லே நினைவாக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. படத்தில் பயன்படுத்தப்பட்ட புதிய IMAX கேமராவுக்கும் அவரது பெயரே சூட்டப்பட்டுள்ளது.

சக்கரமில்லாத ட்ரோஜன் குதிரை

படத்தில் இடம்பெறும் 35 அடி உயர ட்ரோஜன் குதிரை முழுவதுமாக உண்மையாகவே கட்டப்பட்டது. சக்கரங்கள் இல்லாமல், மனிதர்கள் இழுத்துச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த அமைப்பு, புராணக் கதைக்கு அதிக நம்பகத்தன்மை தரும் வகையில் உருவாக்கப்பட்டதாக நோலன் தெரிவித்துள்ளார்.



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version