Home சினிமா பிரபாஸ் ரசிகர்களுக்கு குட் நியூஸ்… ‘பௌசி’ ரிலீஸ் அப்டேட்! – Kumudam

பிரபாஸ் ரசிகர்களுக்கு குட் நியூஸ்… ‘பௌசி’ ரிலீஸ் அப்டேட்! – Kumudam

0


தெலுங்கு திரையுலகின் முன்னணி  நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் பிரபாஸ். பாகுபாலி படத்தின் வெற்றிக்குப் பிறகு பான் இந்தியாவின் உச்ச நட்சத்திரமாக  மாறியுள்ளார். அதனைத் தொடர்ந்து பல பிரமாண்ட படங்களில் நடித்து வரும்  நிலையில் தற்போது சீதா ராமம் படத்தின் இயக்குநர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் உருவாகி வரும் “பௌசி” படத்தில்  நடித்து வருகின்றார். இந்தப் படம்  ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது

இத்திரைப்படம் மைத்ரி மூலி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் நவீனி யெர்னேனி மற்றும ரவி ஷங்கர் தயாரித்து வருகின்றனர். இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இசையமைக்கும் இப்படத்தில் இமான்வி கதாநாயகியாக அறிமுகமாகிறார். அதனைத் தொடர்நது மூத்த நடிகர்கள் மிதுன சக்ரவர்த்தி, ஜெயபிரதா, சைத்ரா ஜே ஆச்சர் ஆகிய பலர் நடிப்பில்  இத்திரைப்படம் உருவாகிறது.

மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் “பௌசி” திரைப்படம் அதிரடி ஆக்ஷன் மற்றும காதல் கலந்த கதைக்களத்தில் உருவாகி வருகிறது. பிரபாஸின் மாறுபட்ட தோற்றமும் ஹனு ராகவபுடியின் உணர்வுபூர்வமான திரைக்கதையும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு கிளப்பியுள்ளது.

இந்நிலையில் “பௌசி” திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை நடிகர் பிரபாஸ் தனது எக்ஸ் தள பதவின் மூலம்  அதிகாரப்பூர்வமாக  அறிவித்துள்ளார். அதன்படி இத்திரைப்படம் வருகின்ற டிசம்பர் 3 ஆம் தேதி  அனைத்து திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் பான் இந்தியா படமாக உருவாகும் பௌசி திரைப்படம் தெலுங்கு,தமிழ், இந்தி, கன்னடம்,மலையாளம்,மற்றும் வங்காள மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளது. பாகுபாலி வெற்றியைத் தொடர்ந்து அடுத்த வெற்றி படமாக இது அமையும் என்று எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version