back to top
18.7 C
London
Monday, July 6, 2026
No menu items!
HomeசினிமாMufasa : The Lion King : முஃபாசாவாகக் களமிறங்கிய மகேஷ் பாபு... சால பாகுந்தி!!!...

Mufasa : The Lion King : முஃபாசாவாகக் களமிறங்கிய மகேஷ் பாபு… சால பாகுந்தி!!! – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img


குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த ஒரு அனிமேஷன் படம் என்றால் அது ‘தி லயன் கிங்’ தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது. வால்ட் டிஸ்னி தயாரிப்பில் முதன் முதலாக 1994ம் ஆண்டு ராப் மின்கோஃப் மற்றும் ரோஜர் ஆலர்ஸ் இணைந்து இயக்கிய “தி லயன் கிங்” அனிமேஷன் வடிவில் வெளியானது. இதையடுத்து டேரல் ரூனி இயக்கத்தில் “தி லயன் கிங் II – சிம்பாஸ் பிரைடு” 1998ம் ஆண்டு வெளியாது. 

இந்நிலையில் 1994-ல் வெளியான ‘தி லயன் கிங்’(The Lion King) திரைப்படம் 2019ம் ஆண்டு ரீமேக் செய்யப்பட்டது. ஜோன் ஃபேவ்ரியூ இயக்கத்தில் லேட்டஸ்ட் அனிமேஷன் வெர்ஷனில் தத்ரூபமாக வெளியான இப்படம் படுஜோராக ஹிட் அடித்து பாக்ஸ் ஆஃபீசை நொறுக்கியது. ஆங்கிலம் தவிர தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியான இப்படம் அனைத்து மொழிகளிலும் சக்கை போடு போட்டது.  இப்படத்தின் தமிழ் வெர்ஷனில், சிம்பா கேரக்டருக்கு நடிகர் சித்தார்த், ஸ்கார் – அரவிந்த் சுவாமி, நாலா – ஐஸ்வர்யா ராஜேஷ், டிமோன் – சிங்கம் புலி, பும்பா – ரோபோ ஷங்கர் ஆகியோர் டப்பிங் கொடுத்திருந்தனர். 

இந்த நிலையில் தற்போது ‘தி லயன் கிங்’ சீரிஸின் புதிய படமான “முஃபாசா – தி லயன் கிங்” (Mufasa : The Lion King) இந்த ஆண்டு டிசம்பர் 20ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தை பெர்ரி ஜென்கின்ஸ் இயக்குகிறார். இதற்கு முந்தைய படமான ‘தி லயன் கிங்’-ல், காட்டின் ராஜா முஃபாசா தனது மகனான சிம்பாவுக்கு பொறுப்பை ஒப்படைப்பது போன்று கதைக்களம் அமைந்திருக்கும். தற்போது வெளியாகவுள்ள இந்த புதிய படத்தில், ஆதரவற்ற முஃபாசா காட்டுக்கே ராஜாவானது எப்படி? என்றும் அன்பாகவும் நெருக்கமாகவும் இருந்த முஃபாசா மற்றும் ஸ்கார் இருவரும் நிரந்தர எதிரிகள் ஆனது எப்படி? என்றும் கதைக்களம் அமைந்துள்ளது. அண்மையில் யூடியூபில் வெளியான இப்படத்தின் ட்ரெயிலர், 10 மில்லியன் பார்வைகளைக் கடந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. 

ஆங்கிலம் தவிர தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தியில் ஷாருக்கான் மற்றும் அவரது இரு மகன்களான ஆர்யன் கான், ஆப்ராம் கான் ஆகியோர் டப்பிங் பேசியுள்ளனர். இதே போல் தமிழ் வெர்ஷனில் விஜய்சேதுபதி மற்றும் அவரது மகன் சூர்யா டப்பிங் பேசவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. 

மேலும் படிக்க: பார்வை ஒன்றே போதுமே.. உயிர் உலகம்.. கூடவே விக்கி நயன்தாரா

இந்நிலையில் தெலுங்கில் முஃபாசா கேரக்டருக்கு நடிகர் மகேஷ் பாபு குரல் கொடுத்துள்ளார். இதில் வரும் பும்பா கேரக்டருக்கு நகைச்சுவை நடிகர் பிரம்மானந்தமும், டிமோன் கேரட்ருக்கு அலியும் குரல் கொடுத்துள்ளனர். தற்போது இப்படத்தின் தெலுங்கு ட்ரெயிலர் வெளியாகி வைரலாகி வருகிறது. 



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here