back to top
11 C
London
Friday, October 9, 2026
No menu items!
Homeஅரசியல்"ஜெம் வீரமணியை சுட்டு தள்ள வேண்டும்"…. கொந்தளித்த தாரகை கத்பர்ட்! - Kumudam

“ஜெம் வீரமணியை சுட்டு தள்ள வேண்டும்”…. கொந்தளித்த தாரகை கத்பர்ட்! – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img


“ஜெம் வீரமணியை கைது செய்த அன்றைக்கே சுட்டுத் தள்ளியிருக்க வேண்டும், இல்லை. கண்டந்துண்டமாக வெட்டியிருக்க வேண்டும்” சட்டென ஆவேசப்படுகிறார் தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற குழுத் தலைவரும், விளவங்கோடு எம்.எல்.ஏ.வுமான தாரகை கத்பர்ட். தமிழக அரசியல் களத்தில் தகிக்கும் உருவக்கேலி விவகாரம், கூட்டணி விவகாரங்கள் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை அவரிடம் முன்வைத்தோம்.

உங்கள் தொகுதி வளர்ச்சிக்காக என்னென்ன திட்டங்களை வைத்திருக்கிறீர்கள்?

“சிறுவயதில் இருந்தே அடித்தட்டு மக்களின் கஷ்டங்களைப் பார்த்து வளர்ந்த காரணத்தால் எனக்கு அவர்களின் தேவைகள் நன்றாகத் தெரியும். தொகுதி மக்களின் வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிக்க தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன் வருடத்திற்கு ஒரு முறை வேலை வழங்கும் முகாமினை தொடங்கிவிட்டேன். குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் இயற்கையாகவே கிடைக்கக்கூடிய மிளகு, ரப்பர், கிழங்கு வகைகள், மீன் ஆகியவற்றைக்கொண்டு அரசாங்க உதவியுடன் ஏற்றுமதி, இறக்குமதி தொழிலை வலுப்படுத்தி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவேன்.

நீட் தேர்வு விவகாரத்தில் காங்கிரஸின் தற்போதைய நிலைப்பாடு என்ன? 

‘நீட் தேர்வு எதிர்ப்பில் காங்கிரஸ் மிகவும் தெளிவாக இருக்கிறது. சென்னையில் உள்ள அண்ணா நகரைச் சுற்றி இன்று பல பயிற்சி மையங்கள் பணம் சம்பாதிக்கும் நோக்கில் செயல்பட்டு வருகின்றன. இதனால், சாதாரண ஏழை மக்களால் படிக்க முடியாமல் போய்விடுகிறது. இதற்கெல்லாம் காரணமான, நீட் தேர்வை காங்கிரஸ் கடுமையாக எதிர்க்கிறது.”

‘தி.மு.க. கூட்டணியிலிருந்து காங்கிரஸ் வெளியேறியது தி.மு.க.விற்கு செய்த துரோகம்’ என்கிற விமர்சனத்தை ஏற்றுக்கொள்கிறீர்களா?

“நிச்சயமாக இல்லை. இந்த நேர்காணல் மூலமாக நான் தி.மு.கவிடம் கேட்கிறேன், துரோகம் செய்தது நீங்களா அல்லது நாங்களா? நாங்கள் தி.மு.க. கூட்டணியில் இருந்தவரைக்கும் அவர்களை ஒருநாள்கூட விமர்சனம் செய்தது கிடையாது. என்றைக்கும் நாங்கள் எங்கள் அரசியல் களத்தில் நம்பிக்கை உள்ளவர்களாகத்தான் இருக்கிறோம். ஆனால், திமுகவைப் பற்றி பட்டியலிட நிறைய விஷயங்கள் இருக்கின்றன. வரும் காலங்களில் தி.மு.க. எங்களை தவறாகப் பேசினால் கண்டிப்பாக திருப்பி அடிப்போம். நிறைய சொல்வதற்கு இருக்கின்றன. அரசியல் நாகரீகம் கருதி அமைதி காக்கிறோம்”

பா.ஜ.க., காங்கிரஸ் இல்லாத மூன்றாவது அணியை உருவாக்கும் மும்முரத்தில் தி.மு.க. இருக்கிறதாமே?

“ஒவ்வொரு காலகட்டத்திலும் தேர்தல் நேரத்தில், காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க இல்லாத மூன்றாவது அணி எப்போதுமே வரக்கூடியதுதான். ஆனால் அந்த மூன்றாவது அணியின் நிலைமை என்ன என்பது வாக்களிக்கும் மக்கள் அனைவருக்கும் தெரியும். கடைசியில் அந்த மூன்றாவது அணி இருக்கிற இடம் தெரியாமல் போய்விடும். மூன்றாவது அணி என்பது வெறும் வெத்துவேட்டு பேச்சுதான். அதனால் எந்த பயனும் இல்லை. இதை தமிழக வரலாற்றை புரட்டிப் பார்த்தாலே எளிதாக புரியும்.”

‘த.வெக ஆட்சி ஒரு நிலையான ஆட்சியே கிடையாது. அது விரைவில் கவிழ்ந்துவிடும்’ என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளாரே?

“எடப்பாடி பழனிசாமி எப்படி ஆட்சிக்கு வந்தார் என்பதை மறந்துவிட்டார். துரோகத்தின் மறு உருவம் எடப்பாடி தான். சசிகலா சிறைக்கு சென்றபோது இவரிடம்தான் கட்சியை ஒப்படைத்துவிட்டு சென்றார். ஆனால் இன்றைக்கு அ.தி.மு.க. எனும் கட்சியையே முழுவதுமாக சிதைத்துவிட்டார். குறிப்பாக தன்னுடைய சுயநலனுக்காகவும், குடும்பத்திற்காகவும் கட்சியை சுக்குநூறாக உடைத்துவிட்டார். எனவேதான் அதிமுகவினர் மாற்றுக்கட்சிக்கு செல்கிறார்கள். இப்படிப்பட்ட எடப்பாடி பழனிசாமிக்கு மற்ற கட்சிகளை விமர்சனம் செய்யும் அடிப்படை தகுதி இல்லை. முதலில் அவரது கட்சியை அவர் காப்பாற்றிக்கொள்ளும் வழியை பார்க்க சொல்லுங்கள். பிறகு மற்றவரைப் பற்றி பேசலாம்.”

தி.மு.க.வினர் ஆபாசமாக பேசுவதாக எழும் விமர்சனங்கள் குறித்து… இப்போது முன்னாள் முதல்வர் ஸ்டாலினும் பெண் வேட்பாளரை உருவகேலி செய்திருப்பதாக எழுந்திருக்கும் விமர்சனம் குறித்து?

அண்ணாவின் பெரியார் மற்றும் கொள்கைகளைப் பற்றி பேசித்தான் தி.மு.க. வளர்ந்தது. இப்படிப்பட்ட கட்சியில் இருந்துகொண்டு பெண்களை இழிவாக பேசுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன். குறிப்பாக, ஆ.ராசா தொடர்ந்து பெண்களைப் பற்றி மிகவும் கொச்சையாக பேசிவருகிறார். அவருக்கு இது ஒன்றும் புதிதல்ல அவருக்கு நாவடக்கம் தேவை. அவர்கள் வீட்டிலும் பிள்ளைகள் இருக்கின்றனர். அவர்களின் தரத்தை அவர்களே தாழ்த்திக்கொள்கின்றனர்.

அண்ணன் ஸ்டாலினின் பேச்சு வருத்தமளிக்கிறது ஒரு பெண்ணாக இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். நடந்துமுடிந்த சட்டமன்ற தேர்தலில் தோல்வியடைந்த விரக்தியில்தான் அவர் இவ்வாறு பேசியிருக்கிறார். சட்டம் தன் கடமையை செய்யட்டும்.”

பிரதமர் வேட்பாளர் யார் என்ற விவகாரத்தில் காங்கிரஸ் நிலைப்பாடு என்ன?

“இந்தியாவின் அடுத்த பிரதமர் ராகுல் காந்தி தான். அதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் ஒரு சில ஊடகங்களும், பத்திரிகைகளும்தான் இதை பெரிதாக்குகிறது. எந்த ஒரு ரசிகராக இருந்தாலும், கட்சித் தொண்டராக இருந்தாலும் அவரவர் தலைவர்கள் அவர்களுக்கு உயர்ந்தவர்கள். எங்களைப் பொறுத்தவரை ராகுல் காந்தி தான் என்றைக்கும் இந்தியாவின் முகம்.

சிறுமிகளை சீரழித்த போக்சோ குற்றவாளி ஜெம் வீரமணி விவகாரம் குறித்து?

“ஒரு குழந்தையின் தாயாகவும், பெண்ணாகவும் இதை நான் சொல்கிறேன். ஜெம் வீரமணி போன்ற அயோக்கியனை கைதுசெய்த உடனே சுட்டுத் தள்ளி இருக்கவேண்டும். இல்லையென்றால் அவனை கண்டந்துண்டமாக வெட்டி இருக்க வேண்டும். சின்ன குழந்தை என்றும் பாராமல் தப்பு செய்தவனை முதலில் சிறையில் அடைத்ததே தவறு. ஏழை, எளிய பிள்ளைகளிடம் கல்வி உதவி என்ற போர்வையில் வீரமணி செய்தது மன்னிக்கவே முடியாத குற்றம். இப்படிப்பட்ட சமுதாயத்தில் பெண் பிள்ளைகளை வைத்து நாம் எப்படி வாழ முடியும் என அச்சமாக இருக்கிறது.”



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here