back to top
12.3 C
London
Friday, October 9, 2026
No menu items!
Homeஅரசியல்தவெக ஆட்சிக்கு முதல் அக்னிப் பரீட்சை ! வாக்கு எண்ணிக்கையில் வெல்லப்போவது யார் ? -...

தவெக ஆட்சிக்கு முதல் அக்னிப் பரீட்சை ! வாக்கு எண்ணிக்கையில் வெல்லப்போவது யார் ? – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img


மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகின்றன. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் நிலையில், தவெக, திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. முதலமைச்சர் விஜய் தலைமையிலான ஆட்சிக்கு மக்களின் ஆதரவு எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை வெளிப்படுத்தும் அரசியல் அளவுகோலாகவும் இந்தத் தேர்தல் முடிவுகள் பார்க்கப்படுகின்றன.

தமிழ்நாட்டு அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மதுராந்தகம், தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளின் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (அக்டோபர் 9) நடைபெறுகிறது. இரு தொகுதிகளிலும் யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அரசியல் கட்சிகளிடமும் பொதுமக்களிடமும் அதிகரித்துள்ளது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் நிலையில், முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன. தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, சுற்றுவாரியாக முன்னணி நிலவரங்கள் அறிவிக்கப்பட உள்ளன.

தவெக ஆட்சிக்கு முதல் தேர்தல் சவால் !

முதலமைச்சர் விஜய் தலைமையில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதல் இடைத்தேர்தல் என்பதால், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளின் முடிவுகள் கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளன. இந்த இரு தொகுதிகளிலும் வெற்றி பெறுவது ஆளும் கட்சியின் அரசியல் செல்வாக்கை வலுப்படுத்துவதுடன், புதிய அரசின் செயல்பாடுகள் குறித்த மக்களின் மனநிலையைப் புரிந்துகொள்ளவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆட்சி அமைந்து சுமார் நான்கு மாதங்களே கடந்துள்ள நிலையில், அரசின் செயல்பாடுகள், தேர்தல் வாக்குறுதிகள், மக்களிடையே ஆட்சிக்கு இருக்கும் வரவேற்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இந்தத் தேர்தல் முடிவுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கப்படலாம். இருப்பினும், இரண்டு தொகுதிகளின் முடிவுகளை மட்டும் வைத்து ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் மனநிலையை முழுமையாகத் தீர்மானிக்க முடியாது என்பதும் கவனிக்கத்தக்கது.

இந்த அரசியல் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, முதலமைச்சர் விஜய் இரு தொகுதிகளிலும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டார். அதேவேளையில், ஆளும் தவெக அரசின் செயல்பாடுகளைக் கேள்விக்குள்ளாக்கி திமுக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் வாக்கு சேகரித்தன. இதனால், இந்த இடைத்தேர்தல் வெறும் தொகுதி வெற்றிக்கான போட்டியாக மட்டுமல்லாமல், ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளின் அரசியல் வலிமையை வெளிப்படுத்தும் களமாகவும் மாறியுள்ளது.

மதுராந்தகத்தில் களமிறங்கிய வேட்பாளர்கள்

மதுராந்தகம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் தவெக சார்பில் மரகதம் குமரவேல் போட்டியிடுகிறார். திமுக சார்பில் பரந்தாமன், அதிமுக சார்பில் கணிதா சம்பத், நாம் தமிழர் கட்சி சார்பில் ஜானகிராமன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சுகந்தி ஆகியோர் களத்தில் உள்ளனர். சுயேச்சை வேட்பாளர்களையும் சேர்த்து மொத்தம் 27 பேர் போட்டியிட்டுள்ளனர்.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் தனது சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்ததைத் தொடர்ந்து இந்த இடைத்தேர்தல் நடைபெற்றது. எனவே, அவரது வெற்றியைத் தக்கவைக்கும் முயற்சியும், தொகுதியை மீண்டும் கைப்பற்ற எதிர்க்கட்சிகள் மேற்கொண்ட வியூகங்களும் இந்தத் தேர்தலில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

தாராபுரத்தில் கடும் போட்டி !

தாராபுரம் (தனி) தொகுதியில் தவெக சார்பில் சத்தியபாமா, திமுக சார்பில் சுகன்யா, அதிமுக சார்பில் பானுமதி, நாம் தமிழர் கட்சி சார்பில் கார்த்திகா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் லட்சுமணன் உள்ளிட்டோர் போட்டியிட்டுள்ளனர். சுயேச்சை வேட்பாளர்களையும் சேர்த்து மொத்தம் 22 பேர் களத்தில் உள்ளனர்.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற சத்தியபாமா தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்ததைத் தொடர்ந்து, தாராபுரத்திலும் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இந்த நிலையில், தவெக தனது செல்வாக்கை நிரூபிக்குமா அல்லது எதிர்க்கட்சிகள் வெற்றியைத் தட்டிச் செல்லுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

வாக்கு எண்ணிக்கை ஏற்பாடுகள் எப்படி ?

தாராபுரம் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை திருப்பூரில் உள்ள எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கல்லூரியில் நடைபெறுகிறது. அங்கு மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்குகளை எண்ணுவதற்காக 14 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன. தபால் வாக்குகளுக்காகத் தனியாக இரண்டு மேஜைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. வேட்பாளர்களின் முகவர்கள் வாக்கு எண்ணிக்கையைக் கண்காணிக்கும் வகையில் உரிய ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

தாராபுரம் தொகுதியில் பதிவான வாக்குகள் மொத்தம் 23 சுற்றுகளாக எண்ணப்பட உள்ளன. இந்தப் பணியில் 80 அதிகாரிகள் ஈடுபடுகின்றனர். ஒவ்வொரு சுற்றின் முடிவிலும் கிடைக்கும் வாக்கு விவரங்கள் வேட்பாளர்களின் முன்னிலை நிலவரத்தைத் தீர்மானிக்கும் என்பதால், சுற்றுவாரியான அறிவிப்புகள் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

மதுராந்தகம் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை செங்கல்பட்டு மாவட்டம், ஆத்தூரில் உள்ள ஒருங்கிணைந்த சமூக முன்னேற்றப் பயிற்சி மையத்தில் நடைபெறுகிறது. இங்கு 14 மேஜைகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளும், இரண்டு மேஜைகளில் தபால் வாக்குகளும் எண்ணப்பட உள்ளன.

வாக்கு எண்ணிக்கை மையத்தில் 70 சிஆர்பிஎஃப் வீரர்கள் உள்ளிட்ட பாதுகாப்புப் படையினர் மூலம் மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், மையத்தின் பாதுகாப்பைக் கண்காணிக்க 54 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை சுமுகமாக நடைபெறுவதற்கான முன்னேற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வாக்கு எண்ணிக்கை சொல்லப்போகும் அரசியல் செய்தி என்ன?

பரபரப்பான இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை , தவெக , திமுக , அதிமுக , நாதக, சிபிஎம் &சிபிஐ என ஐந்து முனை போட்டியை கொண்ட இந்த இடைத்தேர்தல் முக்கிய கட்சிகளின் செயல்பாடுகள் மக்களிடம் எப்படி பார்க்கப்படுகிறது என்ற மதிப்பீட்டின் பிரதிபலிப்பாய் இன்று நிச்சயம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

அதிலும் , முக்கியமாக ஆட்சியில் இருக்கும் தவெகவிற்கு இந்த இடைத்தேர்தல் மிகவும் முக்கியமானதாக இருக்கும் ஆளுங்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. புதிய அரசு அமைத்ததில் இருந்து முதலமைச்சர் விஜய்யின் ஆட்சி எப்படி இருக்கிறது என்ற மக்களின் கருத்துக்கள் எல்லாம் பிரதிபலிக்கும் நாளாக இந்த வாக்கு எண்ணிக்கை நாள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

மறுபுறம், எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் அதிமுக இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்றால், அது ஆளுங்கட்சிக்கு எதிரான அரசியல் செய்தியாக முன்வைக்கப்படலாம். எப்படி என்றால் , இவர்களுக்கு அவர்களே பரவாயில்லை என்ற எண்ணங்கள் மக்களுக்கு வந்துவிட்டது என்பதே அர்த்தம் என்ற யுகங்களும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது .

பரபரக்கும் அரசியல் களம் !

இன்று காலை தொடங்கும் வாக்கு எண்ணிக்கையில் ஆரம்பச் சுற்றுகளில் யார் முன்னிலை பெறுகிறார்கள், அடுத்தடுத்த சுற்றுகளில் அந்த முன்னிலை தொடர்கிறதா, இறுதியில் வெற்றி யாருக்குச் செல்கிறது என்பதைக் காண அரசியல் கட்சிகள் ஆவலுடன் காத்திருக்கின்றன.

மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளிலும் தவெக வெற்றி பெற்றால், அது ஆளும் கட்சிக்கு அரசியல் ரீதியாக ஊக்கமளிக்கும் முடிவாக அமையலாம். எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்றால், ஆட்சியின் செயல்பாடுகள் குறித்த விவாதங்கள் புதிய வேகத்தைப் பெறக்கூடும். முடிவுகள் எவ்வாறு அமைந்தாலும், இந்த இடைத்தேர்தல் தமிழ்நாட்டு அரசியலில் அடுத்தகட்ட நகர்வுகளுக்கான முக்கியக் குறியீடாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளிலும் வெற்றி பெறப்போவது யார்? தவெக தனது முதல் இடைத்தேர்தல் சவாலில் வெற்றி பெறுமா? அல்லது எதிர்க்கட்சிகள் அதிர்ச்சி அளிக்குமா? காலை 8 மணிக்குத் தொடங்கும் வாக்கு எண்ணிக்கையின் ஒவ்வொரு சுற்றும் இந்தக் கேள்விகளுக்கான விடையை நோக்கி நகரும் என்பதால், தமிழ்நாட்டு அரசியல் களம் இன்று பரபரப்பாகக் காணப்படுகிறது.



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here