கடந்த ஜூன் 28 ஆம் தேதி, விருதுநகர் அருகே செங்குன்றாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்ற நிலையில், தவெக விருதுநகர் மத்திய ஒன்றியச் செயலாளர் முத்துவேல், அதிகாரி போல் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, அவர் ஆய்வு செய்தது மட்டுமல்லாமல் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கியதை வீடியோவாக எடுத்து, அதனை தனது சோஷியல் மீடியா பக்கத்தில் சினிமா பாடலுடன் சேர்த்து ரீல்ஸாக வெளியிட்டுள்ளார்.
முன்னதாக, தமிழக சுகாதாரத்துறை சார்பில் அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள், செவிலியர்களின் சிகிச்சையை அனுமதியின்றி வீடியோவோ, புகைப்படமோ எடுத்து அதனை சோஷியல் மீடியாவில் பதிவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், தவெக விருதுநகர் மத்திய ஒன்றியச் செயலாளர் முத்துவேல், அதிகாரி போல் ஆய்வு செய்து வெளியிட்ட ரீல்ஸால் சர்ச்சை வெடித்தது.
இதனைத் தொடர்ந்து, கட்சியின் ஒழுங்கு விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளுக்கு முரணான செயல்பாடுகளில் ஈடுபட்டதாகக் கூறி, விருதுநகர் மத்திய ஒன்றியச் செயலாளர் முத்துவேலை அப்பொறுப்பில் இருந்து 3 மாதங்களுக்கு தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
விருதுநகர் கிழக்கு மாவட்டச் செயலாளரான எம்எல்ஏ செல்வம், ஒன்றியச் செயலாளரான முத்துவேலுவை நீக்கி உத்தரவிட்டுள்ள நிலையில், முத்துவேலுவின் ரீல்ஸ் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
