back to top
19.2 C
London
Tuesday, June 30, 2026
No menu items!
Homeசினிமாஅதிதி ராவ் ஹைதாரியை மணம் முடித்தார் நடிகர் சித்தார்த்.. வாழ்த்து மழையில் நனையும் தம்பதியர் -...

அதிதி ராவ் ஹைதாரியை மணம் முடித்தார் நடிகர் சித்தார்த்.. வாழ்த்து மழையில் நனையும் தம்பதியர் – Kumudam

Date:

Related stories

ஆட்சியில் பங்கு தமிழகத்தில் ஓத்து வராது: காங்கிரசுக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலடி

ஆட்சியில் பங்கு வேண்டுமென பேசி வரும் காங்கிரசுக்கு பதிலளிக்கும் வகையில்,...

முன்னாள் முதல்வர்கள் குறித்து அவதூறு வழக்கு: சாட்டை துரைமுருகன் விடுதலை..!

தமிழக முன்னாள் முதல்வர்கள் மு.கருணாநிதி, மு.க.ஸ்டாலின் குறித்து யூடியூப்பில் கருத்து...
spot_imgspot_img


சித்தார்த் – அதிதிராவ் திருமணம் தெலங்கானாவில் வனர்பதி மாவட்டத்தில் உள்ள 400 ஆண்டுகள் பழமையான கோயிலில் நடைபெற்றது.  மிகவும் எளிமையாக பெற்றோர்கள், உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடந்து முடிந்துள்ள நிலையில் மணமக்களான அதிதிராவ் – சித்தார்த் ஜோடிக்கு ரசிகர்களும் பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்திய திரையுலகின் பிரபலமான நடிகர் சித்தார். தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் நடித்து ரசிகர்கள் மத்தி்யில் மிகவும் பிரபலமானவர்.நடிகர், தயாரிப்பாளர், பாடகர் என பன்முகம் கொண்ட சித்தார்த்திற்கு தற்போது 45 வயதாகிறது. மணிரத்னத்தின் உதவி இயக்குனராக திரைத்துறையில் நுழைந்த சித்தார்த் பாய்ஸ் படம் மூலமாக கதாநாயகன் ஆனார், கடந்த 2003ம் ஆண்டு மேக்னா என்ற பெண்ணை திருமணம் செய்தார். பின்னர், 2007ம் ஆண்டு இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர்.

தமிழ், தெலுங்கு, இந்தி என பல படங்களில் நடித்துள்ள சித்தார்த் மகாசமுத்திரம் என்ற தெலுங்கு படத்தில் அதிதிராவுடன் இணைந்து நடித்தார். அப்போது இருவருக்கும் இடையே உருவான நட்பு காதலாக மாறியது 37 வயதான அதிதி ராவ் ஏராளமான இந்தி படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, மலையாளம், தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.

சமீபகாலமாகவே ஒன்றாக பொதுவெளியில் உலா வந்த சித்தார்த் – அதிதிராவ் ஒருவரை ஒருவர் காதலிப்பதாக தகவல்கள் வந்தது. இதற்கு இருவரும் எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்து வந்த நிலையில், திடீரென இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற்றதாக தகவல் வெளி்யானது.கடந்த மார்ச் மாதம் நடந்தது திருமண நிச்சயதார்த்தம் மட்டுமே திருமணம் இல்லை என்றும். விரைவில் திருமணம் என்றும் அதிதி தகவல் தெரிவித்தார். இந்த நிலையில், மிக எளிமையாக சித்தார்த் – அதிதி ராவ் திருமணம்  இன்று  நடைபெற்றுள்ளது. 

நடிகை அதிதி ராவ் ஹைதராபாத்தில் இருந்த பிரபு குடும்பத்தை சேர்ந்தவர். வனர்பதி ராஜ வம்சம், இவர்களின் வம்சம் என சொல்லப்படுகிறது. தெலங்கானாவில் வனர்பதி மாவட்டத்தில் உள்ள அதிதி ராவ்வின் முன்னோர்களால் கட்டப்பட்ட,400 ஆண்டுகள் பழமையான கோயிலில் திருமணம் நடைபெற்றது.  மிகவும் எளிமையாக பெற்றோர்கள், உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடந்து முடிந்துள்ளது. இவர்களின் திருமணத்தில் நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் மணிரத்னம் ஆகியோர் பங்கேற்றனர்.  

இவர்கள் இருவருக்குமே இது இரண்டாவது திருமணதான். அதிதி ராவ், முதன் முதலில் சத்யதீப் மிஷ்ரா என்பவரை திருமணம் செய்து கொண்டார். அப்போது அவருக்கு  21 வயது. பெற்றோர்கள் பார்த்து இவருக்கு திருமணம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது. இந்த திருமணம் கடந்த 2013ஆம் ஆண்டு விவாகரத்தில் முடிந்தது. அதே போல, மிக இளம் வயதிலேயே மேக்னா என்பவரை திருமணம் செய்து கொண்ட சித்தார்த் கடந்த 2007ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. புதுமணத்தம்பதியினரான அதிதி ராவ் – சித்தார்த் ஜோடிக்கு ரசிகர்களும் பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here