Home உலகம் முடிவுக்கு வந்த போர், ஹார்மூஸ் நீரிணை நாளை திறப்பு: வெளிநாடுகளுக்கு கச்சா எண்ணெய் விற்க ஈரானுக்கு...

முடிவுக்கு வந்த போர், ஹார்மூஸ் நீரிணை நாளை திறப்பு: வெளிநாடுகளுக்கு கச்சா எண்ணெய் விற்க ஈரானுக்கு அனுமதி  – Kumudam

0


அமெரிக்கா-ஈரான் இடையே கடந்த 4 மாதங்களாக போர் நடைபெற்று வந்தது. இதன் காரணமாக ஹாரமூஸ் நீரிணையை ஈரான் முடியாது. இதனால் வெளிநாடுகளுக்கு கச்சா எண்ணெய், கேஸ் தட்டுப்பாட்டு ஏற்பட்டு, பொருளாதார பாதிப்பும் ஏற்பட்டது. இதனிடையே போரை முடிவுக்கு கொண்டு பாகிஸ்தான் மத்தியஸ்தமாக செயல்பட்டது. 

14 அம்ச கோரிக்கை அடிப்படையில் அமெரிக்கா, ஈரான் இடையே ஒப்பந்தம் தயார் ஆனது. இந்த ஒப்பந்தம் நேற்று அதிகாரப்பூர்வமாக கையெழுத்தாகி உள்ளது. இதன்மூலம் உலகளாவிய கச்சா எண்ணெய் மற்றும் சமையல் கியாஸ் வினியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கைத் தீர்மானிக்கும் முக்கியப் பாதையான ஹார்முஸ் நீரிணை, நாளை முதல் முழுமையாக திறக்கப்படும் என டிரம்ப் அறிவித்துள்ளார்.

ஈரான் மீதான எண்ணெய் வர்த்தகத் தடைகளை நீக்க அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளது.இதன் மூலம் ஈரான் தனது கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருட்களை எந்தவிதக் கட்டுப்பாடும் இன்றி விற்கலாம். இந்தியாவிற்கு, ஹார்முஸ் நீரிணை திறப்பு மிகப்பெரிய பொருளாதார நிம்மதியை அளிக்கும் என மத்திய பெட்ரோலிய அமைச்சகம் வரவேற்றுள்ளது. அமெரிக்க-ஈரான் ஒப்பந்தம் மீண்டும் தொடங்கியதால் கச்சா எண்ணெய் விலை சரியத் தொடங்கி இருப்பது குறிப்பிடதக்கது. 



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version