Home அரசியல் புதிதாக களமிறங்கும் மிதுன்…மறுப்பு தெரிவித்த இபிஎஸ்….. – Kumudam

புதிதாக களமிறங்கும் மிதுன்…மறுப்பு தெரிவித்த இபிஎஸ்….. – Kumudam

0


தற்போது நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக போட்டியிட்டு படும் தோல்வியை தழுவியது. இந்நிலையில் கட்சிக்குள் பிளவு ஏற்பட தொடங்கியது.இதில் சிவி சண்முகம் மற்றும் எஸ்.பி வேலுமணி தரப்பில் தனி குழுவாக பிரிந்து கட்சிக்கு எதிராக செயல்பட்டார்கள். இது அதிமுக எடப்பாடியார் பழனிசாமி மத்தியில் மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்வு நடைபெற்றிருக்கும் போது தற்போது எடப்பாடியார் கட்சியை நிலைநாட்ட தன் மகனை களமிறக்க தயாராக உள்ளார் என்று சர்ச்சை நிலவியது.

இந்நிலையில் சமீபத்தில் நிலவிய சட்ட ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடியாரின் மகன் மிதுனை இளைஞரணி செயலாளராக நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தன. இதற்கு கட்சியின் மூத்த தலைவர் கேபி முனுசாமி ஆதரவு தெரிவித்தாக  கூறப்பட்ட நிலையில் அதிமுகவின் உண்மைத் தொண்டர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் மத்தியில் கடுமையான கோபத்தை ஏற்படுத்தியது.

முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன் மகனான உதயநிதியை துணை முதலமைச்சராக அறிவித்த போது அதிமுக சார்பில் மிகுந்த கண்டத்தை ஏற்படுத்தினார் எடப்பாடி.தமிழகத்தில் மன்னாராட்சி ஆட்சி முறையை கையாண்டு வருகிறது திமுக என்று விமர்சித்தார். ஆனால் தற்போது தன் மகனை அரசியலில் இறக்க தயராக இருக்கும் பழனிச்சாமி என்ன அரசியலை மேற்கொள்கிறார் என்று பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.

தற்போது இது குறித்து சர்ச்சை எழுந்த நிலையில் இதற்கு முடிவு கட்டும் வகையில் அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடியார் மறுப்பு தெரிவித்துள்ளார்.
என் மகன் மிதுன் அரசியலுக்கு வர மாட்டார் அவர் கட்சியில் எந்தப் பதவியையும் வகிக்க மாட்டார் வெறும் அடிப்படை உறுப்பினராக மட்டுமே தொடர்வார் என்று ஊடகங்கள் வாயிலாக அழுத்தம் திருத்தமாக முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version