back to top
20.9 C
London
Wednesday, June 17, 2026
No menu items!
Homeதமிழ்நாடு”பாஜகவினருக்கு அழைப்பு கொடுக்கல...” - அண்ணாமலை விளக்கம்! - Kumudam

”பாஜகவினருக்கு அழைப்பு கொடுக்கல…” – அண்ணாமலை விளக்கம்! – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img


பாஜகவிலிருந்து விலகிய முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, புதிய அரசியல் இயக்கம் தொடங்குவதாகவும், வரவிருக்கும் பொதுத் தேர்தலில் தங்களது புதிய இயக்கம் கண்டிப்பாகப் போட்டியிடும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.

வி தி லீடர்ஸ் என்ற இயக்கத்தை தொடங்கிய அண்ணாமலைக்கு ஆதரவாக, அவரது ஆதரவாளர்கள், ரசிகர்கள், பாஜகவில் அதிருப்தியில் இருப்பவர்கள், என லட்சக்கணக்கானோர் இணைந்து வருகின்றனர். வீ த லீடர்ஸ் அமைப்பில் தற்போது வரை 18 லட்சம் பேர் இணைந்துள்ளனர்

இதனால், பாஜகவினரை அண்ணாமலை திட்டமிட்டே தன் பக்கம் இழுக்கிறார் என்றும், பாஜகவை அழிக்க அவர் சதி செய்கிறார் என்றும் பாஜக விசுவாசிகள் அவர்மீது குற்றச்சாட்டுகள் வைத்தனர். 

https://www.youtube.com/watch?v=chrycPHiMGs

இந்நிலையில், இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார் அண்ணாமலை. அதில், “என்னுடன் வருமாறு பாஜகவினர் யாருக்கும் அழைப்பு விடுக்கவில்லை; எனது இயக்கத்திற்கு தாமாக இளைஞர்கள் வர வேண்டும் என எதிர்பார்த்தேன். 

“WE THE LEADERS இயக்கத்தை சரியான பாதையில் கொண்டு செல்வேன்; இந்த இயக்கம் கட்சியாக மாறினால் இதன் தன்மை வேறு மாதிரி இருக்கும். ஜூலை முதல் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். “We the leader-ல் ஆயிரக்கணக்கானவர்கள் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர். லட்சக்கணக்கானவர்கள் தேர்தலில் போட்டியிட விருப்பம் இல்லை” என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். 



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here