Home சினிமா ரஜினியுடன் இணையும் மற்றொரு பாலிவுட் ஸ்டார்… தெறிக்கவிடும் ’கூலி’ அப்டேட்! – Kumudam

ரஜினியுடன் இணையும் மற்றொரு பாலிவுட் ஸ்டார்… தெறிக்கவிடும் ’கூலி’ அப்டேட்! – Kumudam

0


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அமிதாப்பச்சன் நடிப்பில் அண்மையில் வெளியான வேட்டையன் திரைப்படம், ரசிகர்களிடம் எதிர்பார்த்தளவில் வரவேற்பைப் பெறவில்லை. வழக்கமான ரஜினி படத்தின் டெம்ளேட்டை தகர்த்து, கதையை மட்டுமே மையமாக வைத்து இயக்குநர் இயக்கியதால், ரஜினி ரசிகர்களுக்கு சற்றி ஏமாற்றம் உள்ளதாக கூறப்படுகிறது. பெரியளவிலான மாஸ் சீன்ஸ் எதுவும் இல்லாமல், கதையை மட்டுமே நம்பி உருவாகியுள்ள இந்த படத்திற்கு முதல் நாள் வசூல் குறைவாக இருந்தாலும், இரண்டாவது நாளில் மக்கள் கூட்டம் கூட்டமாக சென்று படத்தை ரசித்து வருவதாக சினிமா விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், வேட்டையன் கலெக்ஷன் பற்றியெல்லாம் அதிகம் யோசிக்காமல், கூலி படத்தில் பிஸியாக நடித்து வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். 

லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்தப் படத்தை, சன் பிக்சர்ஸ் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். அதேபோல், ரஜினியுடன் நாகர்ஜுனா, உபேந்திரா, செளபின் சாஹிர், சத்யராஜ், ஸ்ருதிஹாசன் ஆகியோர் நடிப்பதையும் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டது. இதனையடுத்து கூலி படத்தின் ஷூட்டிங் விசாகப்பட்டினத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த், கடந்த வாரம் உடல்நிலை பாதிப்பு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றார். தற்போது வீட்டில் ஓய்வெடுத்து வரும் அவர், இன்னும் ஒரு வாரத்தில் கூலி படப்பிடிப்பில் பங்கேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், கூலி படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர்கான் நடிக்கவுள்ளது தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே இதுபற்றி கடந்த சில தினங்களாக செய்திகள் வெளியாகி வந்தாலும், படக்குழு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனால், அமீர்கான் கேமியோவாக நடிக்கவிருப்பதாகவும், அவரது காட்சிகளை சென்னையில் படமாக்க லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. ரஜினி – ஆமிர்கான் காம்பினேஷன் நிச்சயம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்காலிகமாக சினிமாவில் இருந்து விலகி இருக்கும் அமீர்கான், தற்போது ரஜினியின் கூலி படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்கவுள்ளார். இதனால் பாலிவுட்டிலும் ரஜினியின் கூலி படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version