Home அரசியல் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகித இடஒதுக்கீடு : திமுக, அதிமுக கடும் வாக்குவாதம், சட்டசபையில்...

அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகித இடஒதுக்கீடு : திமுக, அதிமுக கடும் வாக்குவாதம், சட்டசபையில் அமளி  – Kumudam

0


இந்நிலையில் தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட் குறித்த விவாதம் பேரவையில் இன்று தொடங்கியது. இதன்படி இன்று (18-02-2026) முன்னாள் எம்.எல்.ஏ.க்களின் மறைவு குறித்து சட்டசபையில் இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்பட்டது. பின்னர். மராட்டிய மாநில முன்னாள் துணை முதல்வர் அஜித் பவார், மூத்த கல்வியாளர் ராசகோபாலன் ஆகியோரின் மறைவு குறித்த இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதைத்தொடர்ந்து சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட  2026-2027-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் மற்றும் இடைக்கால வேளாண்மை பட்ஜெட் ஆகியவற்றின் மீதான எம்.எல்.ஏ.க்களின் பொது விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில் அதிமுக எம்எல்ஏ கே.பி.முனுசாமி பேசுகையில், அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரிகளில் சேர 7.5% இடஒதுக்கீட்டை கொண்டு வந்தவர் எடப்பாடி பழனிசாமி என்று கூறினார்.

இதைத்தொடர்ந்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஆளுநர் மாளிகைக்கு முன்பாக எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க. நடத்திய போராட்டத்தால் 7.5% இடஒதுக்கீடு சட்டமானது என்று கூறினார்.

தளவாய் சுந்தரம், விஜயபாஸ்கர் உங்களுடைய இடத்திற்கு செல்லுங்கள் இல்லையென்றால் நடவடிக்கை எடுப்பேன் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

நடவடிக்கை எடுத்து என்ன செய்யப்போகிறீர்கள் உண்மைக்கு புறம்பான கருத்தை அமைச்சர் சொல்கிறார்.

7.5% இடஒதுக்கீட்டிற்காக நாங்கள் பேசினோம் என்ற ஆதாரத்தை காட்ட சொல்லுங்கள், அமைச்சர் தவறான கருத்தை பதிவு செய்கிறார் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

அப்போது தி.மு.க.வின் போராட்டமே 7.5 சதவீத ஒதுக்கீட்டுக்கு காரணம் என்று சட்டப்பேரவையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். இந்நிலையில் 7.5 சதவீத ஒதுக்கீட்டை நாங்கள் தான் கொண்டும் வந்தோம் என்று கூறி அ.தி.மு.க. உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

இதற்கு அ.தி.மு.க. உறுப்பினர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து அ.தி.மு.க. பொதுச்செயலாளார் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:- விளம்பரம் தேடும் செயலில் மட்டும் தமிழக அரசு ஈடுபடுகிறது. நாங்கள் செய்ததைகூட சொல்லி விளம்பரம் தேடிக்கொண்டது இல்லை. தி.மு.க., அ.தி.மு.க. ஆட்சியை சேர்த்துதான் 11.19 சதவீத வளர்ச்சி எட்டப்பட்டுள்ளது.

அரசு பள்ளி மாணவர்களுக்கு யாரும் கேட்காமல் மருத்துவபடிப்பில் 7.5 சதவீத ஒதுக்கீட்டை அ.தி.மு.க. வழங்கியது. அ.தி.மு.க.வின் 7.5 சதவீத ஒதுக்கீட்டுக்கு தி.மு.க. சொந்தம் கொண்டாடுவதா..? 7.5 சதவீத ஒதுக்கீடு குறித்து தி.மு.க. எப்போதாவது பேசியது உண்டா..? ஏதாவது ஆதாரத்தை காட்டுங்கள். உண்மைக்கு புறம்பான தகவல்கள் பேசப்படுகின்றன.

நீட் தேர்வு வாக்குறுதியில் நீங்கள் ஏதாவது சாதித்தது உண்டா..? நீர் தேர்வு விலக்கு வாக்குறுதியில் நீங்கள் இன்று வரை ஒன்றும் செய்ததில்லை. மா.சுப்பிரமணியன் எதை கூறினாலும் தவறாகத்தான் கூறுகிறார். உண்மைக்கு மாறான கருத்தை அமைச்சர் கூறியதால்தான் இவ்வளவு பிரச்சினை. மாணவர்களுக்கு படிக்கும்போது மடிக்கணினி கொடுக்காமல்.. படித்து முடித்த பின் கொடுத்து ஏன்..? இவ்வாறு அவர் கூறினார்.



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version