back to top
16.3 C
London
Saturday, June 13, 2026
No menu items!
Homeஅரசியல்திருச்சி கிழக்கில் போட்டி..? வேண்டுகோள் வைத்த ராகவா லாரன்ஸ்..! - Kumudam

திருச்சி கிழக்கில் போட்டி..? வேண்டுகோள் வைத்த ராகவா லாரன்ஸ்..! – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img


ரஜினியின் தீவிர ரசிகர்… நடிகர்.. இயக்குநர்.. டான்ஸ் மாஸ்டர்.. என பன்முகத்தன்மை கொண்டவர் ராகவா லாரன்ஸ். ரஜினியின் ஆன்மீக அரசியலில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர், ரஜினி அரசியல் கட்சி தொடங்கியிருந்தால் அதில் முக்கிய பொறுப்பை வகித்திருப்பார் என்று சொல்லப்பட்டது. ஆனால், ரஜினியும் கட்சி தொடங்கவில்லை, ராகவாவும் அரசியலுக்கு வரவில்லை. 

இத்தகையச் சூழலில், திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் ராகவா லாரன்ஸ் போட்டியிடுவார் என்று தகவல்கள் பரவின. இந்த தகவல் தொடர்பாக நடிகர் ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ் பக்கத்தில் கடந்த 7ஆம் தேதி விளக்கம் ஒன்றை கொடுத்திருந்தார்.

தில், “திருச்சி கிழக்கு தொகுதியில் நான் தேர்தலில் போட்டியிடப் போகிறேன் என்ற செய்தி பல ஊடகங்களில் பரவி வருகிறது. இதுகுறித்து விளக்கம் கேட்டு என் ஊடக நண்பர்கள் பலரும் தொலைபேசியில் தொடர்பு கொண்ட்தோடு நேரில் சந்திக்கவும் விருப்பம் தெரிவித்துள்ளனர். இந்த தகவல் அதிகமாக பேசப்படும் நிலையில், இதுதொடர்பாக நான் ஒரு விஷயம் நேரடியாக சொல்லவேண்டும். பென்ஸ் படப்பிடிப்பு ஜூன் 10-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. அதனால் ஜூன் 11 ஆம் தேதி என் தாயாரின் ஆசிர்வாதத்துடன் என் முடிவை அறிவிக்க உள்ளேன்” என்று ராகவா லாரன்ஸ் பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில், இயக்குநர் இமயம் பாரதிராஜா மறைவையொட்டி தனது முடிவை ஜூன் 12 ஆம் தேதி காலை 10 மணிக்கு அறிவிக்க உள்ளதாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, இன்று காலை (09 மணியளவில்) மீண்டும் ஒரு பதிவை பதிவிட்டார் ராகவா. அதில், “நான் அரசியலுக்குள் வருவேன் என்று ஒருபோதும் நினைத்ததில்லை. பணம் சம்பாதிக்கவோ, பதவியைப் பெறவோ எனக்கு எந்த நோக்கமும் இருந்ததில்லை. நான் நம்பிக்கை வைத்திருந்த, எனக்கு நெருக்கமான ஒருவர் அரசியலுக்குள் வந்தால், அவருடன் இணைந்து செயல்பட்டு, தனிப்பட்ட முறையில் நான் செய்து வந்த சமூகப் பணியை விட பெரிய அளவில் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே என் ஒரே எண்ணமாக இருந்தது. ஆனால் இன்று, சூழ்நிலைகள் என்னை அரசியலுக்குள் நுழைய வேண்டிய ஒரு கட்டத்திற்குக் கொண்டு வந்துள்ளன” என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், வீடியோ ஒன்றை வெளியிட்டு தனது அரசியல் பயணம் குறித்தும் திருச்சி கிழக்கில் போட்டியிடுவது குறித்தும் தெரிவித்துள்ளார். 

அதில், விஜய்யின் வெற்றியால் சாதி,மதம், பேதம் கடந்து மக்கள் வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை உருவாகியுள்ளதாகவும், தன்னுடைய தாயும் தான் அரசியலுக்கு வரவேண்டும் என்றும் விரும்புவதாகவும் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

https://x.com/offl_Lawrence/status/2065290498571468831?s=20

மேலும், ” “நண்பர் விஜய் எனக்கு மிகவும் நெருக்கமானவர்; விஜயுடன் இணைந்து அரசியலில் களம் இறங்கலாம் என யோசித்தேன். பிறகு அந்த முடிவை கைவிட்டுவிட்டேன். திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் நான் போட்டியிட வேண்டுமென்றால், முதலில் நான் அரசியலுக்கு வரவேண்டும். எனவே, நான் அரசியலுக்கு வர வேண்டுமா? வேண்டாமா? என்பதை மக்களாகிய நீங்கள் தான் சொல்ல வேண்டும். எந்தப் பலனையும் எதிர்பாராமல் பல ஆண்டுகளாக மக்களுக்குச் சேவை செய்து வருகிறேன். னக்கு அரசியல் வேண்டாம் என்றால் சமூகத்திற்கான எனது தன்னலமற்ற சேவைகளை எப்போதும் போலத் தொடர்ந்து செய்வேன்” என்று கூறினார்.



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here