காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டு முயற்சியில் தீவிரம் காட்டி வரும் கர்நாடக அரசை தடுக்க தவறிய தவெக அரசை கண்டித்தும்,டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்க வேண்டியும் தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு திமுக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தை சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும்,திமுகவின் இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கியும் முதன்மை செயலாளரும்,சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவருமான கே.என்.நேரு வரவேற்று பேசினார்.
இந்த கூட்டத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் , தமிழ்நாட்டில் குறுவை பாதிக்கப்பட்டதற்கு டம்மி முதலமைச்சருமான விஜய் தான் காரணம். விவசாயிகள் தண்ணீர் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் முதலமைச்சர் இது குறித்து வாய்திறக்காமல் இருப்பது பெரும் கண்டத்திற்குரியது. இன்று ஆடி பெருக்கு நாளன்று ஆறு முழுவதும் தண்ணீர் வழிந்து ஓடும்.ஆனால் தற்போது டெல்டா நீர் இல்லாமல் வறண்ட பூமியாக காணப்படுகிறது. இதுவே திமுக ஆட்சி இருந்திருந்தால் இந்நிலைமை வந்திருக்குமா? நிர்வாக திறனற்ற ஒரு டம்மி முதலமைச்சராகவே இருப்பதால் தான் தமிழ்நாட்டிற்கு இந்நிலைமை ஏற்பட்டு இருக்கிறது.
கர்நாடகவிற்கு முதலமைச்சரை பார்ப்பது ஒரு பக்கம் இருக்கட்டும் ஆனால் தண்ணீர் இல்லாமல் கஷ்டப்படும் நம்ம ஊரில் உள்ள விவசாயிகளை முதலமைச்சர் விஜய் சந்தித்துள்ளாரா? ஆட்சி அமைத்து மூன்று மாதங்கள் ஆன நிலையில் இன்னும் பாஜக என்ற சொல்லை உச்சரிக்காத தைரியசாலி நமது முதலமைச்சர் விஜய். கர்நாடகவில் உள்ள காங்கிரஸை எதிர்த்து பேச முதலமைச்சருக்கு திராணி கூட இல்லை என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.‘
மேலும் காவிரி விவகாரத்தில் தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்காமல் விவசாயிகள் கண்ணீர் வடிக்கக்கூடிய நிலையில் தவெகவின் அமைச்சர்கள் எல்லாம் தியேட்டர் சென்று அங்கு கண்ணீர் வடித்து ரீல்ஸ் எடுத்து போட்டு கொண்டிருக்கிறார்கள். தினமும் மாலை 4 மணி ஆனால் போதுமே ஏதாவது ஒரு ரீல்ஸ் எடுத்து போட்டு திசைதிருப்பி கொண்டு இருக்கிறது இந்த தவெக அரசு.
தண்ணீர் திறப்பது குறித்து ஆட்சியாளர்கள் கவலை இல்லாமல் தவெக அரசு செய்ய வேண்டியதை திமுக அரசு செய்து கொண்டிருக்கிறது. திமுக மக்கள் மன்றத்தில் தண்ணீருக்காக போராடிகிறது.சட்ட போராட்டத்தையும் தொடங்கியுள்ளது. மேலும் உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆனால் தவெகவின் வேளாண் அமைச்சர் பட்ஜெட்டை திருப்பதி கோவிலில் வைத்து பூஜை செய்து கொண்டிருக்கின்றார். வேடிக்கையான ஆட்சி முறை கையாண்டு வருகிறது இந்த தவெக அரசு.
தமிழக அமைச்சர்கள் எல்லோரும் ரீல்ஸ் போடுவதிலேயே தான் குறியாக உள்ளனர். நிருபர்களை பார்த்தால் திருடன் போல் ஓடுவது, திருட்டு லாட்டரி விற்ற அமைச்சர், திருட்டு விசிடி, பிளாக் டிக்கெட் விற்ற அமைச்சர், போதைப்பொருளுடன் சுற்றும் அமைச்சர் என ஒட்டுமொத்த ஜோக்கர் கூட்டமும் அமைச்சரவையில் தான் உள்ளது. முதலமைச்சர் ரீல்ஸ், அமைச்சர்கள் ரீல்ஸ், சட்டமன்ற உறுப்பினர்கள் ரீல்ஸ் என அனைவரும் ரீல்ஸ் போட்டுக்கொண்டு கழிவறையைக் கூட விட்டுவைக்காமல் ரீல்ஸ் போடுகின்றனர். இந்த தவெக அரசிற்கு ரீல்ஸ் முத்திபோய் உள்ள நிலையில் இது போன்ற ஒரு ரீல்ஸ் போடும் கேடு கெட்ட அரசை தமிழ்நாடு இதுவரைக் கண்டதில்லை.
மேலும் தொடர்ந்து பேசிய உதயநிதி திமுக ஆட்சியில் கட்டப்பட்ட மெட்ரோ ரெயில் பாலத்திற்கு சென்று ஆய்வு செய்வது , மெட்ரோ ரெயிலில் பயணம் செய்து ரீல்ஸ் போடுவது, திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் தொடர்பாகவே முதலமைச்சர் விஜய் ஆய்வு செய்வது இதனை மட்டுமே செய்து கொண்டிருக்கும் முதலமைச்சர் விஜய் காவிரி பிரச்சினை உச்சத்தில் உள்ள நிலையில் ரீல்ஸ் கண்டென்ட் கொடுத்துக் கொண்டிருப்பது ஊரார் வீட்டு நெய்யில் ஸ்வீட் செய்து கொண்டிருப்பது போல் உள்ளது.
அடுத்த ஜென்மம் ஒன்று இருந்தால் விவசாயியாக பிறக்க வேண்டும் என்று கூறிய விஜய் இப்போதே அதை செய்யலாமே?. தவெக ஆட்சியில் அதிகம் பாதிக்கப்படுவது விவசாயிகள் தான்.ஆனால் திமுகவின் தூண்டுதலின் விவசாயிகள் போராடுவதாக கூறி கொச்சைப்படுத்தியவர் முதலமைச்சர் விஜய். தமிழகத்தில் பலவினமான ஆட்சி நடக்கிறது. இதனை தெரிந்து கொண்டு தான் கர்நாடகா அரசு மேகதாது அணை கட்டும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது.
“வாயைத் திறங்க.. வாயைத் திறங்க.. மேகதாது பிரச்சினையில் தூங்கி வழியும் முதலமைச்சரே வாயைத் திறங்க.. வாயைத் திறங்க.. புரியலையா.. புரியலையா.. விவசாயிகளின் வேதனைகள்.. புரியலையா.. புரியலையா..” தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய் எதற்கும் துணிவில்லாத ஆட்சி முறை மட்டுமே செய்து கொண்டிருக்கின்றார் என்று எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.





