back to top
14.9 C
London
Tuesday, June 16, 2026
No menu items!
Homeசினிமாபிக் பாஸ் வீட்டில் ஆள்மாறாட்ட டாஸ்க் - புகைச்சலால் காத்திருக்கும் பூகம்பம் - Kumudam

பிக் பாஸ் வீட்டில் ஆள்மாறாட்ட டாஸ்க் – புகைச்சலால் காத்திருக்கும் பூகம்பம் – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img



‘பிக் பாஸ்’ தமிழ் நிகழ்ச்சியின் 8-வது சீஸன், கடந்த அக்டோபர் 6-ம் தேதி தொடங்கியது. 7 சீஸன்களாக இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிவந்த கமல்ஹாசனுக்குப் பதில், இந்த சீஸனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். ஆர்ஜே ஆனந்தி, அன்ஷிதா, அருண், தீபக், தர்ஷா குப்தா, ஜாக்குலின், ஜெஃப்ரி, முத்துக்குமரன், பவித்ரா, ரஞ்சித், சாச்சனா, சத்யா, சவுந்தர்யா, சுனிதா, தர்ஷிகா, விஜே விஷால், அர்ணவ், ரவீந்தர் சந்திரசேகர் என மொத்தம் 18 போட்டியாளர்கள் இந்த சீஸனில் கலந்து கொண்டனர்.

105 நாட்கள், 18 போட்டியாளர்கள் என தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில், ஒரு நாளிலேயே சாச்சனா நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். பின்னர், சில நாட்கள் கழித்து மறுபடியும் ‘பிக் பாஸ்’ வீட்டுக்குள் வந்த அவர், நிகழ்ச்சியில் தொடர்ந்து வருகிறார். முதல் வாரம் ரவீந்தர் சந்திரசேகர், இரண்டாவது வாரம் அர்ணவ், மூன்றாவது வாரம் தர்ஷா குப்தா வெளியேற்றப்பட்ட நிலையில், இந்த வாரம் யார் வெளியேற்றப்படுவார் என ‘பிக் பாஸ்’ ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்த வாரம் பிக் பாஸ்சில் ஆள்மாறாட்டம் டாஸ் கொடுக்கப்பட்டது. இதில் சக போட்டியாளராக தன்னை பாவித்து கொள்ளும் போட்டியாளர் அவரை போலவே நடை, உடை, பேச்சு என அவர்களின் கேரக்டராகவே வாழ வேண்டும் என்பது விதி. மேலும் பிக்பாஸ் வீட்டில் நடந்த நிகழ்வு ஒன்றை நாடகமாக நடத்த வேண்டும் என கூறப்பட்டது.
இதில் ஜாக்குலின் அன்ஷிதாவாகவும், சுனிதா சாச்சனாவாகவும்,  சாச்சனா ஆனந்தியாகவும், செளந்தர்யா சுனிதாவாகவும், அன்ஷிதா ஜாக்குலினாகவும், ஆனந்தி செளந்தர்யாவாகவும், பவித்ரா தர்ஷிகாவும், தர்ஷிகா பவித்ராவாகவும் மாறினர். 

இதேபோல் ஆண் போட்டியாளர்களில் அருண் சத்யாவாவும்,  ஜெப்ரி தீபக் ஆகவும், சத்யா அருணாகவும், விஷால் முத்துவாகவும், ரஞ்சித் ஜெப்ரியாகவும், முத்து ரஞ்சித் ஆகவும் மாறினர். இந்த ஆள்மாறாட்ட கேரக்டர்களில் செளந்தர்யாவின் பெர்பார்மென்ஸ் பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்கள் மட்டுமின்றி ரசிகர்கள் மத்தியிலும் வெகுவாக கவனத்தை ஈர்த்தது.அவருக்கு அடுத்தப்படியாக ஜாக்குலின், ரஞ்சித், முத்து, விஷால் ஆகியோரின் நடிப்பும் வெகுவாக ரசிகர்களால் ரசிக்கப்பட்டது.

இந்த ஆள்மாறாட்ட டாஸ்க்கால் பிக்பாஸ் வீட்டில் ஒர்க்அவுட் ஆகியுள்ள நிலையில், வீட்டில் இருப்பவர்களிடையே புகைச்சல் ஏற்பட தொடங்கியது. இதனால்  பிக்பாஸ் வீட்டில் விரைவில் ஒரு பூகம்பம் வெடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here