சென்னைதிருவொற்றியூரில்உள்ளதனியார்பள்ளி மாணவிகள் புகைப்படத்தைமார்பிங்செய்த பத்தாம் வகுப்பு மாணவர்கள் மீதுபோக்சோவழக்கில்போலீசார்வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்த தம்பதியின் மகள் திருவொற்றியூர்தாங்கள் பகுதியில் உள்ளதனியார்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.இந்த நிலையில், இவருடைய மகளுடன் படிக்கும் மாணவர்கள் மாணவியின் அங்கங்களைப்பார்த்துக்கிண்டல் செய்ததாகவும், மாணவியை ஒருமையில்பேசியதாகக்கூறப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து சக மாணவிகள், மாணவனிடம்பிரச்னைசெய்து வந்துள்ளனர்.இதனையடுத்து மாணவியின் பள்ளி நிர்வாகத்திடம் இதுகுறித்து புகார் அளித்தார். இதனையடுத்து, பள்ளி நிர்வாகம் மாணவியை அழைத்து விசாரித்துள்ளனர். இதில் மாணவனின் செயல் குறித்து மாணவி புகார் அளித்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, சக மாணவிகளின்புகைப்படங்களைமார்பிங்செய்து மற்றமாணவர்களுக்கு காண்பித்துள்ளனர். இதுகுறித்து மாணவியின் தாய்திருவொற்றியூர்காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில்திருவொற்றியூர்அனைத்து மகளிர் காவல் நிலையம்போலீசார்10ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் மூன்று பேர் மற்றும் பள்ளி நிர்வாகத்தின் மீதுபோக்சோசட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.