Home மாவட்டம் பள்ளி மாணவிகள் படத்தை மார்பிங் செய்த மாணவர்கள் – அதிரடி காட்டிய போலீஸ் – Kumudam

பள்ளி மாணவிகள் படத்தை மார்பிங் செய்த மாணவர்கள் – அதிரடி காட்டிய போலீஸ் – Kumudam

0



சென்னை திருவொற்றியூரில் உள்ள தனியார் பள்ளி மாணவிகள் புகைப்படத்தை மார்பிங் செய்த பத்தாம் வகுப்பு மாணவர்கள் மீது போக்சோ வழக்கில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சென்னை தண்டையார்பேட்டையைச்  சேர்ந்த தம்பதியின் மகள் திருவொற்றியூர் தாங்கள் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.இந்த நிலையில், இவருடைய மகளுடன் படிக்கும் மாணவர்கள் மாணவியின் அங்கங்களைப் பார்த்துக் கிண்டல் செய்ததாகவும், மாணவியை ஒருமையில் பேசியதாகக் கூறப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து சக மாணவிகள், மாணவனிடம் பிரச்னை செய்து வந்துள்ளனர்.இதனையடுத்து மாணவியின் பள்ளி நிர்வாகத்திடம் இதுகுறித்து புகார்  அளித்தார். இதனையடுத்து, பள்ளி நிர்வாகம்  மாணவியை அழைத்து விசாரித்துள்ளனர். இதில் மாணவனின் செயல்  குறித்து மாணவி புகார் அளித்ததாகக்  கூறப்படுகிறது.  இதனையடுத்து, சக மாணவிகளின் புகைப்படங்களை மார்பிங் செய்து  மற்ற  மாணவர்களுக்கு  காண்பித்துள்ளனர். இதுகுறித்து மாணவியின் தாய் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

புகாரின் பேரில் திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையம் போலீசார் 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் மூன்று பேர் மற்றும் பள்ளி நிர்வாகத்தின் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version