முக்கியமான சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்
கிருஷ்ணகிரி மாவட்டம் 1-5-26 தொடர் விடுமுறை காரணமாக கிருஷ்ணகிரி - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் - சுங்காவடியில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இரண்டு கிலோ மீட்டர் தொலைவுக்கு அணிவகுத்து நிற்கின்றன இன்று தொழிலாளர் தினமான மே 1 அரசு பொது விடுமுறை, நாளை சனிக்கிழமை, மற்றும் ஞாயிற்றுக்கிழமை என தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை மேலும் பள்ளி விடுமுறை தினங்கள் என்பதால் கர்நாடகாவில் இருந்து தொழிலாளர்கள், சுற்றுலா பயணிகள் தமிழகத்தை நோக்கி இரண்டு சக்கரங்கள், மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் சொந்த ஊருக்கும் சுற்றுலா தளங்களை நோக்கியும் வருகின்றனர். இன்று காலை முதல் பெங்களூருவில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி ஆயிரக்கணக்கான வாகனங்கள் அத்திபள்ளி, மற்றும் கிருஷ்ணகிரி சுங்காவடிகளில் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் அணிவகுத்து நிற்கின்றன. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
