Home மாவட்டம் திக சார்பில் பாவேந்தர் பாரதிதாசன் விழா

திக சார்பில் பாவேந்தர் பாரதிதாசன் விழா

கிருட்டினகிரி மாவட்ட திக சார்பில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாள் விழா-கருத்தரங்கம் நடைபெற்றது கிருட்டினகிரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் மற்றும் திராவிடர் கழகம் சார்பில் புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாள் விழா - கருத்தரங்கம் கிருட்டினகிரி கார்நேசன் திடல் பெரியார் மய்யம் அன்னை மணியம்மையார் கூட்டரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் ச.கிருட்டினன் தலைமை வகித்துப்பேசினார். மாவட்ட மாணவரணி தலைவர் இர.அஜய்குமார் அனைவரையும் வரவேற்றார். இந்நிகழ்ச்சிக்கு திராவிடர் கழக மாவட்ட தலைவர் கோ. திராவிட மணி, மாவட்ட செயலாளர் செ.பொன்முடி ஆகியோர் முன்னிலை வகித்துப்பேசினர். பகுத்தறிவாளர் கழக மாநில துணைப் பொதுச் செயலாளர் அண்ணா சரவணன் தொடக்க உரை ஆற்றினார். பாரதிதாசனின் தமிழ் உணர்வு என்ற தலைப்பில் மு.சந்தோஷ்குமார் கருத்துரை வழங்கினார். மாவட்ட பகுத்தறிவாளர் கழக நிர்வாகி இராம.சகாதேவன் பெரியாரும் - பாரதிதாசனும் மற்றும் பாரதிதாசனின் பகுத்தறிவு சிந்தனைகள் என்ற தலைப்பிலும் கருத்துரை வழங்கி நிறைவுரையாற்றினார். நிகழ்ச்சியில் திராவிடர் கழக மாவட்ட துணைத் தலைவர் வ. ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினர் கி.முருகேசன், மாவட்ட மகளிர் பாசறை தலைவர் மா.சிவசக்தி, கிருட்டினகிரி நகர செயலாளர் அ.கோ.இராஜா, கார்த்திகேயன் உள்பட கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் முன்னதாக புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாளையொட்டி அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அவரது பிறந்தநாளில் பிறந்தநாள் காணும் மாவட்ட தி.க.துணைத் தலைவர் வ. ஆறுமுகத்திற்கு மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் மாவட்டத் தலைவர் கோ.திராவிடமணி, மாவட்டச் செயலாளர் செ.பொன் முடி ஆகியோர் சால்வை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தனர். நிறைவாக பகுத்தறிவாளர் கழக மாவட்டச் செயலாளர் க.வெங்கடேசன் நன்றி கூறினார்.

0

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version