ட்ரோன் பைலட்டுக்கு சிறைத் தண்டனை
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் கிருஷ்ணகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வருகின்ற 4.5.26 அன்று எண்ணபட உள்ளது. இந்த கல்லூரியில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூன்றடுக்கு போலீசார் பாதுகாப்புக்கு இடையே வைக்க பட்டுள்ளது. இந்நிலையில் இந்த கட்டிடத்தை சுற்றி ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு ட்ரோன் பறக்க விட தடை விதிக்க பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் தெரிவித்துள்ளார். மீறினால் சட்டபடி கடும் நடவடிக்கை எடுக்க படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
