back to top
13.1 C
London
Saturday, June 6, 2026
No menu items!
Homeஅரசியல்கொளத்தூரில் ஸ்டாலின் தோல்வி: அமைச்சர் சேகர்பாபு மீது முன்னாள் எம்எல்ஏ பரந்தாமன் பாய்ச்சல் - Kumudam

கொளத்தூரில் ஸ்டாலின் தோல்வி: அமைச்சர் சேகர்பாபு மீது முன்னாள் எம்எல்ஏ பரந்தாமன் பாய்ச்சல் – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img



கொளத்தூர் தொகுதியில் தொடர்ந்து 3 முறை ஸ்டாலின் வெற்றி பெற்றார். 4 முறையாக இந்த முறையும் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் களமிறங்கினார். திருவாரூர் தொகுதியில் போட்டியிட முடிவு செய்திருந்த ஸ்டாலினை, கொளத்தூர் தொகுதியில் மீண்டும் போட்டியிட அமைச்சர் சேகர்பாபுவே காரணம். நான் பார்த்து கொள்கிறேன் என அமைச்சர் சேகர்பாபு கூறியதால், தொகுதி மாறும் திட்டத்தை ஸ்டாலின் கைவிட்டார். இந்த நிலையில் கொளத்தூரில் ஸ்டாலின் தோல்வியை சந்தித்து இருப்பது திமுகவில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து திமுக முன்னாள் எம்எல்ஏ பரந்தாமன் தனது எக்ஸ் பக்கத்தில்:

எனக்கு இரவு முழுவதும் உறக்கமில்லை இந்த முகமே என் கண்களை மூடினாலும் வந்துகொண்டே இருக்கிறது. அப்பழுக்கற்ற அரசியல் தலைவர்! யாருக்கும் தீங்கு நினைக்காத தலைவர்! குழந்தை உள்ளம் கொண்ட தலைவர்! தேர்தல் அரசியலில் வெற்றி தோல்வி என்பது இயற்கை இவை இரண்டின் உச்சத்தையும் பார்த்த இயக்கம் திமுக. ஆனால் தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட தலைவரின் தொகுதியை கவனிக்கத்தவறியவர் மீது தயவு தாட்சன்யம் இன்றி தலைமைக்கழகம் நடவடிக்கை எடுத்தால் தான் உண்மை திமுக தொண்டன் நிம்மதியாய் இருப்பான். 

தலைவர் தோல்விக்கு காரணமானவர் எப்படி கொஞ்சமும் வெட்கம், பயம், அச்சம், கூச்சம் எதுவும் இல்லாமல் தலைவர் முன்பு வந்து முகத்தைக்காட்டி நிற்கிறார்? நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொன்னது இதைத்தானா @PKSekarbabu ? என கடுமையாக விமர்சனம் செய்து பதிவிட்டு இருக்கிறார். 



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here