back to top
18.4 C
London
Tuesday, September 15, 2026
No menu items!
Homeஅரசியல்இன்று மாலை 4.30 மணிக்கு ஆளுநரை சந்திக்கிறார் விஜய் - Kumudam

இன்று மாலை 4.30 மணிக்கு ஆளுநரை சந்திக்கிறார் விஜய் – Kumudam

Date:

Related stories

காங்கிரஸ், பாஜகவுக்கு செக்? மூன்றாவது அணிக்கு அச்சாரம் போடும் திமுக?

திமுக தலைமையில் மூன்றாவது அணி உருவாகும் முயற்சி தீவிரமடைந்துள்ள நிலையில்,...

விநாயகர் சதுர்த்தியில் வெளியான ராமாயணா படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் !

ரன்பீர் கபூர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘ராமாயணா’ படத்தின் முதல்...

“அவையை எப்படி நடத்தணும்னு எனக்குத் தெரியும்!” – சபாநாயகர் விளாசல் !

சட்டப்பேரவையில் பரபரப்பை ஏற்படுத்திய சில விவகாரங்கள் குறித்து சபாநாயகர் ஜே.சி.டி....
spot_imgspot_img



108 எம்எல்ஏக்கள், காங்கிரஸ் 5 என 113 எம்எல்ஏக்கள் ஆதரவு தவெகவிற்கு உள்ளது. ஆட்சி அமைக்க ஆதரவு கோரி நேற்றைய தினம் விஜய் ஆளுநர் அர்லேகரை சந்தித்து உரிமை கோரி இருந்தார். ஆனால் விஜயை முதல்வராக பதவியேற்க ஆளுநர்  அழைப்பு விடுக்கவில்லை. இதனால் தவெக தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளது. 

இந்நிலையில், திமுக, அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க போவதாக தகவல்கள் வெளியானது. இதற்கான பேச்சுவார்த்தைகளும் இறுதிகட்டத்தை எட்டி இருப்பதாகவும் தகவல்கள் பரவின. அதிமுக பதவி ஏற்க வைக்க பாஜக விரும்புவதாகவும், அதற்காகவவும் தவெகவிற்கு ஆளுநர் அழைப்பு விடுக்கவில்லை எனவும் கூறப்பட்டது. 

2-வது முறையாக ஆளுநரை சந்திக்க தவெக தலைவர் விஜய் நேற்று  கிண்டி மக்கள் பவனுக்கு சென்றார். அப்போது அவரது கார் தவிர வேறு கார்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அதுமட்டுமின்றி, ஆளுநர் சந்திக்க விஜய் நீண்ட நேரம் காத்திருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன. சுமார் 30 நிமிடம் காத்திருப்புக்கு பிறகே ஆளுநர் விஜய் சந்திப்பு நடந்தது. 

3-வது முறையாக இன்றைய தினம் மீண்டும் ஆளுநரை விஜய் சந்திக்க உள்ளார். மாலை 4.30 மணிக்கு மக்கள் பவனில் ஆளுநர் அர்லேகரை தவெக தலைவர் விஜய் சந்தித்து ஆட்சி அமைப்பது தொடர்பாக வலியுறுத்த உள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 10-ம் தேதி வரை தவக 118 எம்எல்ஏக்களின் ஆதரவை தெரிவித்தால், ஆட்சி அமைக்க அழைப்பதாக ஆளுநர் அர்லேகர் கூறியிருந்த நிலையில், இன்றைய ஆளுநருடனான விஜய் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.  



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here