back to top
24.9 C
London
Monday, September 14, 2026
No menu items!
Homeசினிமா"ட்ரெய்லரை விட படம் முக்கியம்..." - நானி எடுத்த அதிரடி முடிவு! - Kumudam

“ட்ரெய்லரை விட படம் முக்கியம்…” – நானி எடுத்த அதிரடி முடிவு! – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img



தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் உருவாகி வரும் ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படம் ‘தி பாரடைஸ்’. The Paradise படத்தை இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கியுள்ளார். மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் செப்டம்பர் 24, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

படத்தின் ரிலீஸை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், வழக்கமாக வெளியாகும் ப்ரீ-ரிலீஸ் ட்ரெய்லர் குறித்து படக்குழு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ட்ரெய்லர் வெளியீடு இல்லை என நானி அறிவிப்பு :

சமீபத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட நடிகர் நானி, ‘தி பாரடைஸ்’ படத்திற்கு திரையரங்கு வெளியீட்டுக்கு முன் வழக்கமான ட்ரெய்லர் வெளியாகாத என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய நானி, “பாரடைஸ் படத்திற்கு ட்ரெய்லர் இருக்காது என்று நினைக்கிறேன்” என கூறினார்.

மேலும், படம் மீது ஏற்கனவே அதிக எதிர்பார்ப்பு இருப்பதால் ட்ரெய்லர் தேவையில்லை என்ற காரணத்தால் இந்த முடிவு எடுக்கப்படவில்லை என்றும் அவர் விளக்கம் அளித்தார்.

படத்தின் தரமே முக்கியம்… நானி விளக்கம் :

ட்ரெய்லர் உருவாக்குவது குறித்து தனக்கு தனிப்பட்ட முறையில் ஆர்வம் இருந்ததாகவும் நானி தெரிவித்தார். ரசிகர்களுக்கு சிறப்பான அனுபவத்தை கொடுக்கும் வகையில் ஒரு தரமான ட்ரெய்லரை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்ததாகவும் அவர் கூறினார்.

ஆனால் தற்போது படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருவதால், இயக்குநர், இசையமைப்பாளர் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் முழு கவனத்தையும் படத்தின் முடிப்புப் பணிகளில் செலுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

“இந்த நேரத்தில் ட்ரெய்லரா முக்கியம்? அல்லது திரைப்படமா முக்கியம்? என்று பார்த்தால், படத்தை முழுமையாக முடிப்பதே முக்கியம் என குழுவாக முடிவு செய்தோம்” என்று நானி கூறினார்.

அதிகரிக்கும் ‘தி பாரடைஸ்’ எதிர்பார்ப்பு :

ட்ரெய்லர் வெளியாகவில்லை என்றாலும், ‘தி பாரடைஸ்’ படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஏற்கனவே மிகப்பெரிய வரவேற்பும் எதிர்பார்ப்பும் உருவாகியுள்ளது.

அதே நேரத்தில், படத்தின் மீதுள்ள ஹைப் காரணமாக மட்டுமே ட்ரெய்லரை தவிர்க்கவில்லை என்றும், படத்தின் தரத்தை முன்னிலைப்படுத்தியே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் நானி குறிப்பிட்டார்.

படத்தின் ரன்னிங் டைம் வெளியானது :

இதற்கிடையில், படத்தின் இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா, ‘தி பாரடைஸ்’ படத்தின் மொத்த நேரம் குறித்த தகவலையும் வெளியிட்டுள்ளார்.

அதன்படி, இப்படத்தின் இறுதி வடிவத்தின் ரன்னிங் டைம் “2 மணி நேரம் 49 நிமிடங்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பழங்குடியின மக்களின் போராட்ட கதை :

‘தி பாரடைஸ்’ திரைப்படம் பல தலைமுறைகளாக அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு வரும் ஒரு பழங்குடியின சமூகத்தின் வாழ்க்கையை மையமாகக் கொண்டுள்ளது.

அவர்களின் உரிமைக்கான போராட்டம், அநீதிக்கு எதிராக எழும் புதிய தலைமை மற்றும் சமூக மாற்றத்திற்கான பயணம் ஆகியவை கதையின் முக்கிய அம்சங்களாக இடம்பெற்றுள்ளன.

 படக்குழு விவரம் :

இந்தப் படத்தில் நானிக்கு ஜோடியாக கேயாடு லோஹர் நடித்துள்ளார். மோகன் பாபு, ராகவ் ஜூயல், சம்பூர்ணேஷ் பாபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படத்திற்கு இசையமைப்பது பிரபல இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர்.

பல மொழிகளில் வெளியாகும் ‘தி பாரடைஸ்’ திரைப்படம், செப்டம்பர் 24, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here